Sunday, September 28, 2008

கொலை வெறிநாய் பாஜக - பெதிக தொண்டர்களை தாக்கி, வண்டியை கொளுத்தி அட்டகாசம்


சேலத்தில் 27-09- 2008 அன்று ராஜ்நாத்சிங் வருகையை எதிர்த்து பெரியார் திராவிட கழகத்தினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இங்கு வரக்கூடாது என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து ரவுடித்தனத்தில் இறங்கினர். பெரியார் திக தொண்டர்களை பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் பெரியார் திக தொண்டர்கள் சுமார் 125 பேர்களை கைது செய்தது.

தமிழகத்தை மதவெறி களமாக மாற்ற காவி அமைப்புகளான இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆங்காங்கே சர்ச்களை சேதப்படுத்தி வருகிறது. அம்பேத்கர், பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது, சிறுபான்மையினரை தாக்குவது, என்று திட்டமிட்டு கொலைவெறியாட்டம் போடுகிறது.

இந்த நாய்களுக்கு நாளுக்கு நாள் வெறி முற்றி வருகிறது. இதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தால் கொலை தாக்குதல் நடத்துகிறது. இது "அமைதி பூங்கா" தமிழக மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இனியும் அமைதியாக இருந்தால், நேற்று குஜராத், இன்று ஒரிசா, நாளை தமிழகம் பிணக்காடாக மாறும்.

பெரியாரின் போர்குணமிக்க பார்ப்பனீய எதிர்ப்பு மரபை கொண்ட தமிழகம், காவிப்படையினரை (இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக) அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம்.

Related Links

Monday, September 8, 2008

மின்வெட்டு ஒரு அபாய எச்சரிக்கை! & மின்வெட்டின் ரகசியம்

நாடு முழுவதும் மின்வெட்டு. மின்வெட்டு பற்றாகுறையினால் மின்வெட்டு என்று கூறப்பட்டாலும், வர்க்கத்திற்கு ஏற்ப MNC & 'மேட்டுக்குடிகளை' பாதிக்காதவாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

மின்வெட்டு பற்றிய ரகசியங்களை கூறும் சுவரொட்டி பின்வருமாறு.



கும்மிடிபூண்டி SRF ஆலை புகுந்து தாக்கிய போலீசு - புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம்



கும்மிடிபூண்டி SRF ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது, போலீசு அவர்களை தாக்கியது. இதை எதிர்த்து 08-09- 2008 அன்று மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Links:

Friday, September 5, 2008

பார்ப்பனிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின் செல்லாதே



கோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்ம் நடைபெற்றது. இதில் மகஇக அணிகள் (புமாஇமு, புஜதொமு) உள்பட பல்வேறு பெரியாரியக்க தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் முழக்கங்கள் மற்றும் படங்களை கீழ்கண்ட வே.மதிமாறன் தளத்தில் பார்க்கவும்.

இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

Monday, September 1, 2008

ராமனை போன்று மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிய காவி ரவுடிகள்


கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’வில் சீமான் சிறப்புரை ஆற்றினார்.

அன்று வாலியை மறைந்திருந்து கொன்றான். இன்று அந்த ராமனின் கோழை வாரிசுகளான இந்து முன்னணி காவி ரவுடிகள் கற்களையும், சோட பாட்டில்களையும் வீசி சீமான் பேச்சை நிறுத்த முயன்றனர். ஆனால் பெரியார் தொண்டர்கள் நன்கு ‘கவனித்து’ விரட்டி அடித்தார்கள்.

Related Links:

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராக சுஜானா தொழிலாளிகளின் சங்கம் உதயம்

உழைக்கும் வர்ககத்தின் போர்குணமிக்க தொழிற்சங்கமான புஜதொமு, ஏற்கனவே ஜேபியாரின் கொட்டத்தை அடக்கி, வாகன ஓட்டுனர்களை சங்கமாக திரட்டி போராடி வருகிறது. இது மட்டுமல்லாமல், தரைக்கடை வியாபாரிகள் சங்கம், கட்டிட தொழிளார்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் என தொழிலாளர்களை அணி திரட்டி போராடி வருகிறது.

திருவள்ளூரில் உள்ள சுஜானா இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருவதை எதிர்த்தும் பலமுறை நிர்வாகத்திடம் பேசியும், மனு கொடுத்தும் பயன் இல்லை. தொழிலாளர்களை சட்டப்படி அங்கீகரிக்காமல் தினக்கூலிகளாய், குறைந்த கூலிக்கு 12 மணி நேரம் வேலை வாங்கும் சுஜானா நிர்வாகத்தை எதிர்த்து சுஜானா தொழிற்சங்கம் (புஜதொமு) 23-08-2008 அன்று உதயம் ஆனது.

சுஜானா தொழிற்சங்கத்தின் கொடியேற்று விழாவின் பிரசுரம் பின் வருமாறு.


Related Links :