Sunday, July 26, 2009

தமிழ் பெயர்கள் - இனியவை இருநூற்றி ஐம்பது

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் இடுவது தமிழர்களிடையே அருகி வருகிறது. தமிழ் பெயர்கள் புதுமையாக இல்லை, சிறியதாக இல்லை என அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லி கொள்கிறார்கள். மேலும் ஜோதிடம், நியூமராலஜி என மூடநம்பிக்கையால் சமஸ்கிருத பெயர்களையே வைக்கின்றனர். பெரும்பாலும் சோதிடர்கள், நியூமராலஜிஸ்ட் சொல்வதை கேட்டு ஹ, ஷ, ஸ, ர, ஜ போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் படியான பெயர்களையோ அல்லது புதுமையான பெயர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருத பெயர்களையே பெரும்பாலும் வைக்கின்றனர். சில நண்பர்கள் தமிழ் பெயர் வைப்பதே தனக்கு பிடிக்கும் என கூறி கொண்டாலும், நடைமுறையில் சோதிடப்படியும் நியூமராலஜி படியும் சமஸ்கிருதப் பெயர்களையே வைக்கின்றனர்.

கொள்கை ரீதியாகவோ அல்லது தனக்கு பிடித்த தலைவர்களின் பெயர்களை சுபாஷ், பகத்சிங், ஸ்டாலின், சித்தார்த்தன், கௌதமன் என வைப்பதும் வழக்கம். அது வரவேற்கதக்கது. மற்றபடி வெகு சிலரே தமிழ் பெயர்களை வைக்கின்றனர். இணையத்தில் சில தளங்களும் தூய தமிழ் பெயர்களை பட்டியலிட்டுள்ளன. குறிப்பாக விடுதலை புலிகளின் நிதித்துறை தளத்தில் 46000 தமிழ் பெயர்கள் உள்ளன. சில தமிழ் அறிஞர்களும் தமிழ் பெயர்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். தமிழ் எங்கள் உயிர் என முழங்கும் தமிழக அரசும், திராவிட கட்சிகளும் தமிழ் பெயர்களை தொகுத்து மக்களிடையே பிரபலமாக்கவில்லை. இது வெட்ககேடான நிலைமை.

நிதித்துறை தளத்தில் இருந்தும் மற்ற தமிழ் வலைதளங்களில் இருந்தும் எனக்கு பிடித்த புதுமையான, சிறிய, இனிமையான 250 தமிழ் பெயர்களை தொகுத்துள்ளேன். சில தமிழ் பதிவர்கள் மற்றும் பதிவு வாசகர்களின் பெயர்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். (குழலி, தமிழினி, தமிழ்நிலா, எழில்நிலா திகழ்மிளிர், அதியமான், தமிழ்மணி, அமிழ்தினி, மதிமாறன், வினவு, வினை).

தமிழ் பதிவர்களே, வாசகர்களே, சோதிடம், நியூமராலஜி போன்ற மூடநம்பிக்கைகளை ஒதுக்கி விடுங்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர் வைப்பது மட்டுமல்லாமல் தங்கள் உறவினர்கள், நண்பர்களையும் தமிழ் பெயர்களை வைக்க உதவுங்கள்.

பெண் பெயர்கள்:
  1. அமிழ்தினி
  2. அமுதா
  3. அமுதினி
  4. அருள்மணி
  5. அருள்மதி
  6. அருண்மதி
  7. அருண்மொழி
  8. அன்பரசி
  9. இயலினி
  10. இயலிசை
  11. இன்பநிலா
  12. இனியா
  13. எழில்
  14. எழில்நிலா
  15. எழிலினி
  16. எழினி
  17. ஓவியா
  18. கண்மணி
  19. கணையாழி
  20. கயல்விழி
  21. கலையரசி
  22. கவின்மலர்
  23. கனிமொழி
  24. காவேரி
  25. காவியா
  26. குழலி
  27. குழலினி
  28. சந்தனா
  29. சமர்மதி
  30. சமர்விழி
  31. சாதனா
  32. சிந்தனா
  33. சிறுவாணி
  34. சீர்குழலி
  35. சீர்மதி
  36. சுடர்மணி
  37. சுடர்மதி
  38. சுடர்விழி
  39. செந்தமிழரசி
  40. செந்தாமரை
  41. செம்மலர்
  42. செல்வமணி
  43. செல்வமதி
  44. செல்வமலர்
  45. செல்வி
  46. தமிழ்நிலா
  47. தமிழரசி
  48. தமிழினி
  49. தாமரை
  50. தாமிரா
  51. தாரணி
  52. திகழ்கா
  53. திகழ்மிளிர்
  54. திகழினி
  55. திருநிலா
  56. திருமலர்
  57. துளசி
  58. தேன்கனி
  59. தேன்மதி
  60. தேன்மலர்
  61. தேன்மொழி
  62. நறுங்கா
  63. நன்னிலா
  64. நிகரிலா
  65. நித்திலா
  66. நிலாமதி
  67. நிறைமதி
  68. நீலமணி
  69. நீலவிழி
  70. நேர்நிலா
  71. பனிமலர்
  72. பனிமுகில்
  73. பிறைமதி
  74. புகழினி
  75. புதியா
  76. பூவிழி
  77. பூங்குழலி
  78. பொழிலினி
  79. பொன்மலர்
  80. பொன்னி
  81. பொன்னிலா
  82. மகிழ்
  83. மகிழரசி
  84. மணிமலர்
  85. மணிமேகலை
  86. மணிவிழி
  87. மதி
  88. மதிநிலா
  89. மதியரசி
  90. மயிலினி
  91. மருதா
  92. மல்லிகா
  93. மலர்
  94. மலர்நிலா
  95. மலர்மதி
  96. மறைமலர்
  97. மான்விழி
  98. மிருதுளா
  99. மின்மணி
  100. மின்மலர்
  101. மின்முகில்
  102. மின்விழி
  103. முகிலா
  104. முகிலரசி
  105. முகிலினி
  106. முத்தழகு
  107. முத்துமதி
  108. மென்கா
  109. மென்பனி
  110. மென்மதி
  111. மென்மலர்
  112. யாழ்நிலா
  113. யாழினி
  114. வடிவரசி
  115. வளர்மதி
  116. வான்மதி
  117. வான்முகில்
  118. வானரசி
  119. வானதி
  120. விண்ணரசி
  121. விண்மணி
  122. விண்மதி
  123. விண்மலர்
  124. வினைமதி
  125. வினையரசி
  126. வீரமதி
  127. வெண்ணிலா
  128. வெண்பனி
  129. வெண்மணி
  130. வெண்மதி
  131. வெம்பனி
  132. வேல்விழி
  133. வேலரசி
  134. வைகறை
  135. வைகை

ஆண் பெயர்கள்:
  1. அகரன்
  2. அதியமான்
  3. அமர்
  4. அமுதன்
  5. அரசன்
  6. அரசு
  7. அருள்
  8. அருண்
  9. அருண்மணி
  10. அருண்மதி
  11. அன்பு
  12. அன்பரசு
  13. அன்பழகன்
  14. அன்புமணி
  15. இளங்கதிர்
  16. இளங்குமரன்
  17. இளங்கோ
  18. இளஞ்செழியன்
  19. இளம்பரிதி
  20. இளமதி
  21. இளவரசு
  22. இளவேனில்
  23. இறையன்பு
  24. இனியன்
  25. இன்பா
  26. உதியன்
  27. உதயா
  28. எல்லாளன்
  29. எழில்
  30. எழிலன்
  31. எழில்வேலன்
  32. கண்ணன்
  33. கதிர்
  34. கதிர்நிலவன்
  35. கதிரவன்
  36. கலைச்செல்வன்
  37. கலைவாணன்
  38. கலைவேலன்
  39. கவின்
  40. கவின்செல்வா
  41. கனல்
  42. கனல்வண்ணன்
  43. கனலரசன்
  44. கனல்கண்ணன்
  45. கார்முகில்
  46. குமணன்
  47. கோவன்
  48. சந்தனன்
  49. சந்தனவேலன்
  50. சமர்
  51. சமர்வேல்
  52. சமரன்
  53. சிலம்பரசன்
  54. சீர்மணி
  55. சீர்மதி
  56. சீர்மருதன்
  57. சீராளன்
  58. சுடர்
  59. சுடர்வேல்
  60. செங்கதிர்
  61. செந்தமிழ்
  62. செந்தில்
  63. செங்கோ
  64. செந்தாமரை
  65. செம்பரிதி
  66. செல்வம்
  67. செழியன்
  68. சேந்தன்
  69. சொற்கோ
  70. சோலை
  71. தங்கவேல்
  72. தமிழ்மணி
  73. தமிழன்பன்
  74. திருமாறன்
  75. திருமாவளவன்
  76. துரைமருகன்
  77. துரைவேலன்
  78. நக்கீரன்
  79. நகைமுகன்
  80. நந்தன்
  81. நவிலன்
  82. நன்மாறன்
  83. நாவரசு
  84. நிலவன்
  85. நித்திலன்
  86. நெடுமாறன்
  87. பரிதி
  88. பாரி
  89. புகழேந்தி
  90. பொற்கோ
  91. மகிழன்
  92. மகிழ்நன்
  93. மணிமாறன்
  94. மணியரசன்
  95. மணிவண்ணன்
  96. மணிமுகில்
  97. மதி
  98. மதியரசன்
  99. மதிமாறன்
  100. மதிவாணன்
  101. மருது
  102. மருதன்
  103. மருதையன்
  104. மலரவன்
  105. மாறன்
  106. முகில்
  107. முகிலன்
  108. முத்துக்குமரன்
  109. முருகவேல்
  110. முருகன்
  111. வடிவேல்
  112. வினவு
  113. வினை
  114. வெற்றி
  115. வெற்றிவேல்

தமிழ் பெயர்கள்:
தமிழ் பெயர் - சில கட்டுரைகள் & விவாதங்கள்:

Thursday, July 23, 2009

அண்ணா பல்கலைக்கழகம் - தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுகிறது

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அம்பலபடுத்தியும், எதிர்த்தும் புமாஇமு தொடர்ச்சியாக போராடி வருகிறது. கல்வியை முழுமையாக தனியார்மயப் படுத்தி கல்வியை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கி வருகிறது அரசு. கல்வி பெறுவது நமது உரிமை. கல்வி கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். கல்வியை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசை நிர்பந்த்திக்க மாணவர்கள் ஓர் வர்க்கமாய் அணி திரள அழைக்கிறது புமாஇமு. அண்ணா பல்கலைக்கழகம் தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுவதை கண்டித்து புமாஇமு-வின் சுவரொட்டி.

Against Anna_University acting as private colleges agent - RSYF Poster

தமிழக அரசே!
  • ஐவர் குழுவின் அதிரடி சோதனை என்று நாடகமாடாதே!
  • கல்லூரி முதல்வரின் வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு மாதா பொறியியல் கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
  • கட்டணக் கொள்ளையடித்தும் - இன்டர்னல் மார்க்கை ஜீரோ போட்டும் மாணவர்களை மிரட்டி நிரந்தர அடிமையாக்கும் பனப்பாக்கம் கிருஷ்ணா போன்ற கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு!

மாணவர்களே!
  • எதிர்காலம் என்று கொத்தடிமையாக இருப்பது அவமானம்!
  • தனியார் கொள்ளையை ஒழிக்க மாணவர்கள் ஒரு வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதே தன்மானம்!

Related Links:

Thursday, July 16, 2009

முதலாமாண்டு நிறைவு - வினவுக்கு வாழ்த்துக்கள்

vinavu first anniversary
  • ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், ஹிட்ஸ்கள்....
  • 6800க்கும் அதிகமான மறுமொழிகள், தொடரும் விவாதங்கள்.....
  • 140க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த தமிழ் மக்கள்....

மொக்கை பதிவுகள் ஆயிரம் இருக்க கருத்து பதிவுகளையும் தமிழர்கள் விவாதிக்க தயாரகவே உள்ளனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களின் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Sunday, July 12, 2009

சொர்க்கபுரி அமெரிக்கா-கடுங்குளிரில் 35 லட்சம் வீடற்றோர்- முதலாளித்துவ பயங்கரவாதம்

"If a free society cannot help the many who are poor,
it cannot save the few who are rich"
- John F. Kennedy

கொட்டும் பனியிலும், கடுங்குளிரிலும் வீடற்ற ஏழைகளாக துரத்தபட்டுள்ளனர் அமெரிக்க மக்கள். அட்டைப்பெட்டிக்குள்ளும், டென்ட்டு கொட்டகையிலும், கார்களிலும், தெரு ஓரங்களிலும், தெருவோர இருக்கைகளிலும், வீடற்றோர் முகாம்களிலும் இரவை கழிக்கின்றனர். அமெரிக்க பெயில்-அவுட் என்ற பெயரில் சூதாடிகளுக்கு சுமார் 4 கோடி கோடி ரூபாய்க்கு மேல் (8டிரில்லியன்$) மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாரி வழங்கியுள்ளனர். நாள்தோறும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றது. வீடற்ற மக்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.

நாசகர நிதிமூலதன சூதாடிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியால் வீடிழந்து, பொருள் இழந்து, பணம் இழந்து, தன் உறவுகளை இழந்தும் பாதிக்கபடுகின்றனர். தன்னுடைய பைபிளையும் இழந்து, அடுத்த வேளை உணவுக்காக, உயிரை காப்பதற்காக பிச்சை எடுத்து வேலை தேட முயற்சிக்கும் படம் நெஞ்சை அறுக்கிறது.

அதி-தாராளமய முதலாளித்துவ கொள்கைகளால் ஒவ்வொரு பொருளாதார வீழ்ச்சியிலும் கீழ்த்தட்டு மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அமேரிக்க நடுத்தர வர்க்கத்தினரையே வீட்டை விட்டு துரத்துகிறது முதலாளித்துவ பயங்கரவாதம். அமெரிக்காவில் பொய்த்து போன அதி-தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை பின்பற்றுமாறு உலகவங்கி, சர்வதேச நிதியம், G8 நாடுகள் என எல்லா பணமுதலை அமைப்புகளும் நிர்பந்திக்கின்றன. நம்நாட்டு ஓட்டு கட்சிகளும் அதை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றி வருகின்றனர்.

ஏற்கனவே நம்நாட்டில் வீடற்றோர் எண்ணிக்கை ஏராளம். நம்மிடம் இருப்பதோ ஓலை குடிசைகள். அதையும் பிடுங்க பார்க்கிறார்கள். விழித்து கொள்வோம். அமெரிக்க அடிமை அரசியல் ஒட்டுண்ணிகளை அம்பலபடுத்துவோம். போராடுவோம்.

அமெரிக்க வீடற்றோரின் நெஞ்சை உருக்கும் சிலப்படங்கள் கீழே.






































Related Links:



Saturday, July 11, 2009

முத்துகுமாருக்கு ஒர் ஆட்டோ நிறுத்தம் - தியாகங்கள் சாவதில்லை

Muthukumar Memorial AutoStand
பழைய மகாபலிபுர சாலையில் சென்னை மாநகர பேரூந்தில் பயணிக்கும் போது முத்துக்குமார் நினைவு ஆட்டோ நிறுத்தத்தை பார்த்தேன். இனப்படுகொலைக்கு ஆதரவான இந்திய அரசுக்கெதிராகவும், சுரணையற்ற தமிழக மக்களுக்கு உணர்வேற்றவும் தோழர் முத்துக்குமார் ஜனவரி 29, 2009 அன்று, தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார்.

Muthukumar Banner தீக்குளிப்பு சரியானது அல்ல என நாம் கூறினாலும், முத்துகுமாரின் தியாகத்தால் முத்துக்குமாருக்கு முன்னும், முத்துக்குமாருக்கு பின்னும் தமிழகத்தில் ஈழ ஆதரவு நிலையில் பெரிய மாற்றமுள்ளது. அவர் இட்ட தீயின் காரணத்தால் முத்துகுமாருக்கு பின் தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பெருவாரியான மக்களிடையே ஈழ மக்களுக்கு ஆதரவு நிலை உருவானது. அவரின் வேண்டுகோளுக்கினங்க இளைஞர்கள், மாணவர்கள் போராட தயாரானார்கள். ஆனால் இந்திய, தமிழக அரசின் அலட்சியப்போக்கு, ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம், ஓட்டு அரசியல் கணக்குகள் என பல்வேறு துரோகங்கள் மூலம் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தினர். இருப்பினும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார் முத்துகுமார்.

அன்றும், இன்றும், என்றும் முத்துக்குமார் என்றாலே அவரின் வீரமும், தியாகமும் தான் நினைவுக்கு வரும். தியாகங்கள் சாவதில்லை.

முத்துகுமார் பதிவுகள், கட்டுரைகள்:



தமிழக அரசியல் வியாதிகள்:


போராட்டங்கள்:


குறும்படங்கள் & படங்கள்:

Thursday, July 9, 2009

உலகமயம் வீழ்கிறது - முதலாளித்துவ நிபுணரின் ஒப்புதல் வாக்குமூலம்

"உலகமயம் வீழ்கிறது, அமெரிக்கவிலும் முதலாளித்துவம் தோற்று போனது. பெரும்பாலான உலக நாடுகள் உலகமயம் தீங்கானது என்கின்றன. மேற்குலகிலும், அமெரிக்காவிலும் நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன. தாரளமயம் கைவிடப்படுகிறது." என, பில் கிளின்டனின் முன்னாள் துணை நிதி செயலாளர் மற்றும் எவர்கோர் பார்ட்னர்ஸ் என்னும் முதலீட்டு நிறுவனத் தலைவர் ரோஜர் ஆல்ட்மன் கூறுகிறார். அது குறித்து ஜூலை 6,2009 பிஸினஸ் வீக் இதழ் வெளியிட்ட சிறு குறிப்பு கீழே.

இப்படி முதலாளித்துவ வல்லரசு நாடுகளின் அரசுகள் தன்னுடைய நாட்டை பாதுகாக்க உலகமயத்தை ஒதுக்கிவிடுகிறது. ஆனால் இந்த பொய்த்து போன உலகமயம், தாரளமயம் கொள்கைகளை மற்ற நாடுகளின் மீது, உலக வங்கி, சர்வதேச நிதியம் மூலம் வன்முறையாக திணிக்கிறது. ஆண்டைக்கு ஒரு நீதி. அடிமைக்கு ஒரு நீதி. இது தான் முதலாளித்துவ "ஜனநாயகவாதிகளின்" உலகமயக் கொள்கை.

Globalisation Beating a Hasty Retreat - Businessweek
Courtesy : Businessweek

Related Links:

Tuesday, July 7, 2009

பெட்ரோல்-டீசல்-கேஸ் விலையை உயர்த்தி மக்களின் வாழ்வை சூறையாடாதே

ஜுலை 2, 2009 முதல் பெட்ரோல் விலையை 4 ரூபாயும், டீசல் விலையை 2 ரூபாயும் விலையேற்றியுள்ளது மத்திய அரசு. இது குறித்து ஓட்டு கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கும் நிலையில், விலையேற்றத்தை எதிர்த்து புஜதொமு-வின் சுவரொட்டி.
Petrol & Diesel Prise Rise - NDLF Poster
  • உள்நாட்டு எண்ணெய் வளம் அம்பானி கையில்!
  • விலை உயர்வின் கொள்ளை லாபம் அம்பானி கையில்!
  • விலை உயர்வும் வரிச்சுமையும் மக்களின் தலையில்!

மத்திய மாநில அரசுகளே!
  • பெட்ரோல்-டீசல்-கேஸ் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்!
  • விலை உயர்வை திரும்பப் பெறு!

உழைக்கும் மக்களே!
  • விலை உயர்வுக்கு வித்திடும் உலகமயம்-ஊக வணிகத்தை எதிர்த்துப் போராடுவோம்!
  • மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!