Thursday, October 9, 2008

ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 8- 10- 2008 அன்று காலை பத்து மணியளவில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்பினர், ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:

  • ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
  • ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்போம்!
  • தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்டெடுப்போம்!
  • பதவி சுகத்திற்காக பச்சோந்தி வேலை செய்யும் திமுக அரசை அம்பலப்படுத்துவோம்!
  • இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக டாட்டா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இலங்கையில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து உதவும் கொலைகார இந்திய அரசை எதிர்த்து போராடுவோம்!


Related Links:




4 comments:

Anonymous said...

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு உதவி செய்வது கண்டிக்கத்தக்கது, வெட்க கேடானது

Anonymous said...

பதவி சுகத்திற்காகவும், ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், தமிழீழத்தை பற்றி பேச்சையே எடுக்காத திமுக, அதிமுக கட்சிகள் இப்போது பெயரளவுக்கு வாய் திறந்திருக்கிறது. இதுவும் ஓட்டு வங்கியை தக்க வைப்பதற்காகவே என எண்ணத் தோன்றுகிறது.

Anonymous said...

இந்திய அரசு ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கிறது. தமிழக அரசும், வெற்றறிக்கை மட்டும் விடுகிறது.

Anonymous said...

ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை என்ன செய்ய