இன்றைக்கு உலகத்தை ஆட்டி படைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு வரும் ஞாயிறு 25-ஜனவரி-2009 அன்று அம்பத்தூரில் (முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு) நடக்க இருக்கிறது.
காலை (எஸ்.வி.நகர்)ஓரகடத்தில் கருத்தரங்கமும், மாலை அம்பத்தூர் OTயில் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன. முழு விவரங்கள் பின்வருமாறு.
நிகழ்ச்சி நிரல்
நாள் : ஜனவரி 25, 2009, ஞாயிறு
கருத்தரங்கம்:
இடம் :
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்
காலை 10 - 1 மணி
தலைமை : தோழர் அ. முகுந்தன்,
சிறப்புரை :
கவிஞர் துரை. சண்முகம்,
வழக்குரைஞர் சி. பாலன்,
2 - 5 மணி
சிறப்புரை :
சு.ப.தங்கராசு
பா.விஜயகுமார்
போராட்ட தலைமையேற்ற பல்வேறு தோழர்களின் அனுபவங்கள்
நன்றியுரை:
இல.பழனி
பொதுக்கூட்டம் மற்றும் மகஇக கலைநிகழ்ச்சி :
மாலை 6 மணி
அம்பத்தூர் OT மார்கெட்
- ஒப்பந்த முறை - அவுட்சோர்சிங் போன்ற நவீன கொத்தடிமை வேலை முறைகளை முறியடிப்போம்!
- போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதை முறியடிப்போம்!
- தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்!

Related Links:
- முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு - நிகழ்ச்சி நிரல்
- முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு - வினவு
- முபஎமா - கவிதை & ஏன் பங்கேற்க வேண்டும் என்று விளக்கம் (கலகம்)
- இடையன் கவிதை
- முபஎமா - இந்த மாநாடு உங்களுக்காகத்தான் வாருங்கள்
- செங்கதிர் - மாநாடு பற்றி
- முபஎமா - நிகழ்ச்சி நிரல் (நந்தவனம்)
- முபஎமா - பிரசுரம்
- நிகழ்ச்சி நிரல் & பிரசுரம்
- Conference against Capitalist Terror - English Handbill!
- முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள்!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இற்று வீழும் முகமுடிகள்
- ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா
38 comments:
தொழிலாளி படத்தைக் கூட ஏதோ ரஷ்ய,சீன வெளியீட்டிலிருந்து எடுத்துப்
போட்ட மேதாவிகள் யார்.
சிபிஎம்,சிபிஐ கட்சிகளுடன் தொழிற்சங்க ரீதியில் சேர்ந்து போராடாமல் ஒரு பத்து பேர்
பேசி என்ன மாற்றம் வரும்.
இன்று உழைக்கும் மக்கள்
கட்சி/அமைப்புவாரியாக
சிதறியுள்ளனர்.இது மாறாதவரை
எத்தனை மானாடு போட்டாலும்
ஒன்றும் நடக்காது.
சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் கொடியை தவிர என்ன வித்தியாசம்? அவை போலி "கம்யூனிஸ்டுகள்".
நீங்கள் (அனானி) சொன்னது போல், இன்று உழைக்கும் மக்கள் கட்சி/அமைப்புவாரியாக சிதறியுள்ளனர். அவர்களை வர்க்கமாக ஒன்று சேர்க்கவே இந்த மாநாடு நடக்கிறது.
எந்த நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும் தொழிலாளி, தொழிலாளி தான் என்பது என் கருத்து.
"மேதாவிகள் யார்" என்று கேட்பதன் மூலம் உங்கள் காழ்புணர்ச்சி புரிகிறது
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!
\\சிபிஎம்,சிபிஐ கட்சிகளுடன் தொழிற்சங்க ரீதியில் சேர்ந்து போராடாமல் ஒரு பத்து பேர்
பேசி என்ன மாற்றம் வரும்.
இன்று உழைக்கும் மக்கள்
கட்சி/அமைப்புவாரியாக
சிதறியுள்ளனர்.இது மாறாதவரை
எத்தனை மானாடு போட்டாலும்
ஒன்றும் நடக்காது.//
அய்யா அனானி,
ரஷ்ய,சீனப்படம் என்பது தான் விவாதப்பொருளா? ஏன் இப்படியெல்லாம் விதண்டாவாதம் செய்யச்சொல்லி சீபீஎம் தலைமைகுழு முடிவுஎடுத்து இருக்கா? எப்படி அந்த விடுதல (போலி),சந்திப்பு இளய தாசன் நீங்க எல்லாம் ஒரே மாதிரி வழவழன்னு பேசறீங்க.
கொஞ்சமாவது அரசியல் பேசுங்கப்பா,
kalagam.wordpress.com
test
//தொழிலாளி படத்தைக் கூட ஏதோ ரஷ்ய,சீன வெளியீட்டிலிருந்து எடுத்துப்
போட்ட மேதாவிகள் யார்//
யோவ் சிபீஎம் அனானி,
மாவோ கூடத்தான் சீனா, அவர் படத்தையும் தூக்கிடலாமா?
பாட்டாளி வர்க்க சர்வதேசியமின்னு பேசிட்டு நல்லா கேக்குற கேள்வி...
உங்க தலைவரையெல்லாம் பார்த்தா பாட்டாளி மாதிரியா தெறியுது நல்லா பால் கொழுக்கட்ட கணக்கா கீராங்க அங்க போய் ஆவாஜ் குடுய்யா
//சிபிஎம்,சிபிஐ கட்சிகளுடன் தொழிற்சங்க ரீதியில் சேர்ந்து போராடாமல் ஒரு பத்து பேர்
பேசி என்ன மாற்றம் வரும்//
இத்ததான் காண்டுங்கறது, மொதல்ல உங்க சங்கமெல்லாம் தொழிற்சங்கமா இல்ல மனமகிழ் மன்றமா?
போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்னையா சம்பந்தம். உங்க சங்கமெல்லாம் இத்தினி வருசமா ஆணி புடுங்கிட்டிருந்தீங்களா? நீங்க உருப்படியா இருந்தா மாநாட்டுக்கே அவசியமில்லையே?
என்னது 10 பேரா...செம்ம காமெடிம்மா.. உங்க கட்சியோட அணியெல்லாம் பிச்சுகிட்டு கெளம்பராங்களாமே, ஒரு டாடா சூமோலையே உங்க கட்சிய அடக்கிடலாமாமே, இன்னும் கொஞ்ச நாள்ல மீன்பாடி வண்டிதான்னு நான் சொல்ல்ல ...வெளிய பேசிக்கிறாங்க...
//இன்று உழைக்கும் மக்கள்
கட்சி/அமைப்புவாரியாக
சிதறியுள்ளனர்.இது மாறாதவரை
எத்தனை மானாடு போட்டாலும்
ஒன்றும் நடக்காது//
உங்கள மாதிரி மாமா சங்கம்...சாரி மம சங்கம் (மன மகிழ்) ஒழிந்தாலே பாதி பிரச்சனை ஒழிந்த மாதிரிதான்.
அப்புறம் என்ன இது மானாடு... மானாட மயிலாடவா? அத்த போய் இப்ப பேசலாமா? அதான் கூட்டனி மாறிப்போச்சே...இப்பதான் ஜெயோட 'போராடு'ரீங்களே.....
போலிகளின் யோக்கியதை பற்றி விரிவாக அறிய,
C.P.M போலிகளின் உண்மை முகம்
http://cpmtataistfascist.wordpress.com/
போலி(கம்யூனிஸ்டு)கள்
http://policommunists.blogspot.com/
சிபிஎம்,சிபிஐ இப்ப,
நாற்காலி சீட்டுக்காக நாக்க தொங்க போட்டுகிட்டு, ஜெயோட 'போராடு'ராங்களோ!
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாட்டை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்
//உங்கள மாதிரி மாமா சங்கம்...சாரி மம சங்கம் (மன மகிழ்) ஒழிந்தாலே பாதி பிரச்சனை ஒழிந்த மாதிரிதான்.
அப்புறம் என்ன இது மானாடு... மானாட மயிலாடவா? அத்த போய் இப்ப பேசலாமா? அதான் கூட்டனி மாறிப்போச்சே...இப்பதான் ஜெயோட 'போராடு'ரீங்களே.....//
,
பட்டய உரிச்சுட்டீங்க தோழர்,
கலகத்தில்
வெளிவந்த
மாமாயிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா வழங்கும்
ஒரு ரயிலில் விழிபிதுங்கிய காம்ஸ்களின் கதை
http://kalagam.wordpress.com/2009/01/01/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2/
படிக்க
அட்ரா சக்க, அட்ரா சக்க!
போலிகளின் முமூடி கிழிஞ்சு தொங்குது.
Yow loosu,
Unga kutathukku oru IT payalum vara maataan. because they are all educated and have too much knowledge to know about foolish communism
what the hell you have done for kerala? in the name of labour union you have destroyed the whole state, and made the labour guys very lazy. even for unloading my own luggage into my compound, i was threatened to pay Rs.100.
though you act like u r original commie, whatever name u choose dyfi / mkik etc, u belong to same old union and lazy boozers.
communism and union like this will be used by union leaders for their own interest. further it will bring in laziness.
look at government offices. sons of bitches are demanidng bribes for everything and threaten to strike if someone takes action on them
do not spoil educted youth. try your politics somewhere else
PARAMS
சற்றுமுன் கிடைத்த தகவலின் படி சத்யம் கம்பூட்டர் கம்பேனியான்ட நம்ம சிபீஎம் கம்பேனி 5 லட்ச ரூபா டொனாசன் வாங்கிகீறாங்கோ.....
இந்த பரம்பீதா வினவு தளத்துலையும் இதே பின்னூட்டம் போட்டுகிறார்... இவர வினவுல வச்சு கவனிச்ச பல பேர் விவரமாயிக்குவாங்க...
சங்கரன் எம் சாதி பொண்ண தான கெடுத்தான் நோக்கு என்னானு
எனக்கேட்ட மாபெரும் திறமைக்கு சொந்தக்காரர்கள் பரம்ஸ்கள்,என்ன பரமு கண்னு இப்படி சீன் காட்டுற,டி.எல்லுங்க,எச்.ஆர்,மேனேஜருங்க அடிக்குற கூத்த நாங்க பலமுறை பாத்திருக்கோம்.அப்படியே சம்த்துவம் பொங்கி வழியுதா ஐடியில,ஆபீஸ் டைகர் அப்படீங்குற பன்னாட்டு கம்பெனியில வேலப்பார்த்த சங்கர் தன்னோட அக்கா வேற சாதிக்காரன காதலிச்சு கல்யாணம் செஞ்சதால அப்பனோட சேர்ந்து அடிச்சே கொன்ன கத தெரியுமா உனக்கு,அப்பவெல்லாம் எங்கே போன வாய்திறந்து கொண்டு பேசவேண்டியது தானே. அப்புறம் இன்னொரு திறமயும் எனக்கு தெரியும் அதான் வெள்ளிகிழமை நைட் சரக்கு அடிக்க ஆரம்பித்து ஞாயிறு புல்லா குடிக்குற பார்ட்டி தான நீ.,
வெங்காயம்,
திறமை இல்லாமதான் இல்லாம வேலைக்கு யாசகத்துக்கா எடுத்தாங்க,உன்னோட வேலசெஞ்சு வருசக்கணக்குல மூஜ்ச பார்த்து சிரிச்ச எத்தனயோ பேர வேலய விட்டு தூக்கீட்டாங்க ஆனா நி என்ன சொல்லுற அவன் கிட்ட திறம இல்லன்னு ,அடச்சீ நீயெல்லாம் ஒரு மனுசனா
பரமு கண்ணு நீ இப்படியெல்லாம் ஏன் பேசுறதெரியுமா எவன் செத்தா எனக்கென்ன என்ற அடிமை புத்தி தான் ,அது தான் உன் கம்பெனியில் இப்ப நீ கழுவுற வேலய தப்பாம தினமும் செய்யச்சொல்லுது.ஒரு சங்கம் அப்படின்னு ஐடி,பீபிஓவு ல இருந்தா தான உரிமய கேக்கணும்னு அவசியம் வரும்,உன்ன மாதிரி பலபேரு முதலாளி க்கு சோப்பு போட்டு திறமய காட்றீங்க ,எங்களுக்கு அப்படி மானங்கெட்டு ஒருத்தன தொங்க வேண்டிய அவசியம் இல்லை,
எங்க இருந்தாலும் சூடு சொரணை உள்ள பாட்டாளிகள் நாங்கள் ,தொழிலாளின்னா,பாட்டாளின்னா ,சங்கம் கட்டுனா கிடைக்குற மரியாதை கண்டிப்பாய் உனக்குதெரியாது,தெரியணும்னா சனவரி 25ம் தேதி உங்கப்பன் ஜேப்பியாருக்கு தொழிலாளிங்க எப்படி ஆப்பு வச்சாங்கன்னு சொல்லப்போறாங்க.கண்ணு அங்க வந்து வாய கீய வுட்டு றாத ,ஆமா நீதான் லீவு கிடச்சா சரக்கு ஏத்திகினு மேயுற ஐடி ஜென்டில் மேனாச்சே,போய் குஞ்சு மோன்கிட்ட சான்ஸ் கேளு.அத விட்டுட்டு இபடி இங்க வந்து ஆடாதப்பா.
கலகம்
பரம்ஸ்,
முதலாளித்துவ எடுபுடி, கூஜா தூக்கிகளாக இருப்பது உம்மை போன்ற சில அம்பிகளுக்கு எல்லா காலத்திலும் சுபிட்சமாக இருக்கும். ஆனால் உழைக்கும் வர்க்கத்துக்கு முதலாளித்துவம் எப்போதும் சாபக்கேடாகவே இருக்கிறது. பொருளாதாரம் உச்சத்தில் இருக்கும் போதும் தொழிலாளிய குறைஞ்ச சம்பளத்தில் சப்பையா உறிஞ்சிட்டு, முதலைகள் எல்லா லாபத்தையும் சுருட்டிட்டு போயிடுவானுங்க. திவால் ஆனதும் கம்பனிய மூடிட்டு, வேலை செஞ்சவனுக்கு ஆப்பு வைப்பானுங்க.
முதலாளித்துவத்திற்கு மட்டுமன்றி, முதலாளித்துவ எடுபுடிகள், கூஜா தூக்கிகளுக்கும் ஆப்புகள் தயாராகி கொண்டிருக்கிறது. அதை பார்த்து அம்பிகள் அலறுகிறார்கள்.
பரமுக்கு உரைக்குமான்னு தெரியல. இது முற்றிலும் உண்மை.
>>பரமு கண்ணு நீ இப்படியெல்லாம் ஏன் பேசுறதெரியுமா எவன் செத்தா எனக்கென்ன என்ற அடிமை புத்தி தான்
>>எங்க இருந்தாலும் சூடு சொரணை உள்ள பாட்டாளிகள் நாங்கள், தொழிலாளின்னா, பாட்டாளின்னா, சங்கம் கட்டுனா கிடைக்குற மரியாதை கண்டிப்பாய் உனக்குதெரியாது, தெரியணும்னா சனவரி 25ம் தேதி உங்கப்பன் ஜேப்பியாருக்கு தொழிலாளிங்க எப்படி ஆப்பு வச்சாங்கன்னு சொல்லப்போறாங்க
சிபிஎம்,சிபிஐ அனானியே,
>> போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்னையா சம்பந்தம்?
>> உங்க சங்கமெல்லாம் இத்தினி வருசமா ஆணி புடுங்கிட்டிருந்தீங்களா?
>> நீங்க உருப்படியா இருந்தா மாநாட்டுக்கே அவசியமில்லையே?
இன்று இந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட
தொழிற்சங்கம் பாஜக ஆதரவு
தொழிற்சங்கம்.சிஐடியு,ஏஐடியுசி
இரண்டும் சேர்ந்து,பிற இடது/சோசலிச
தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து வலுவான இயக்கத்தை உருவாக்காத
வரை பி.எம்.எஸ் (பாஜக ஆதரவு),
ஐஎன்டியுசி(காங்கிரஸ் ஆதரவு) தொழிற்சங்கள் வலுவுடன் இருக்கும்.
ஆனால் இடதுசாரி என்று சொல்லிக்
கொள்ளும் சங்கங்கள் ஒன்று சேராமல்
தனித்தே இயங்குகின்றன.CITU,AITUC,
HMS, இது தவிர உதிரியாக உள்ள
இடதுசாரி சங்கங்கள் ஒன்றிணைந்து
ஒரு அணியில் திரளுவது அவசியம்.
சிபிஎம் ஐடி தொழிலாளார்களுக்காக
சங்கம் அமைத்துள்ளது.ம.க.இ.க ஆசாமிகளோ தாங்கள் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தை ஒருங்கிணைத்து புரட்சி செய்வோம்
என்ற போகத ஊருக்கு வழியை
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் குசேலரை ஏற்க மாட்டார்கள்.
HMS போன்ற சங்கங்களை யும் ஏற்க
மாட்டார்கள். தாங்கள்தான் அசல் கம்யுனிஸ்ட்கள் என்று சொல்லிக்
கொண்டு அலையும் இவர்களும்
20/25 ஆண்டுகளாக தோலுரித்துக் கொண்டே இருக்கிறார்கள், இந்த்துவம், முதலாளித்துவம்
வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இதுதான் இந்த புரட்சிவீரர்களின்
சாதனை. இதில் இன்னொரு மாநாடு வேறு.
that is a very valid and relevant argument. the advantage of taking an ultra-hard line, or idealistic, stand is that you can ignore the cases where your ideology has failed, as in USSR, as being 'wrong in conception / execution' and pretend that your ideology is alright, only the enforcement/implementation is bad. communists have that advantage. the failure of satyam is the failure of capitalism, but the failure of USSR is not the failure of communism. conversely the success of maoists in nepal is the success of communism, but the success of hundreds of software companies is not the success of capitalism. you cant beat that argument.
காந்தி-காங்கிரசு எப்படி விடுதலை போரை மட்டுபடுத்தி மொக்கையாக்கி மக்களின் போராட்டங்களை மழுங்கடித்தனரோ, அதைப் போன்று இன்னும் அதை விட கேவலமாக, தொழிலாளி வர்க்க கொடியை பிடித்து கம்யினிஸ்ட் கட்சி என்ற பெயரில் தொழிலாளர் தோழர்களை ஓட்டு அரசியலில் புரட்சியை படைதிடலாம் என்ற மாயையில் ஆழ்த்தியுள்ளனர்.
காந்தி-காங்கிரசு பிரிட்டன் அரசுக்கு அன்றைய "Safety Valve" (திசை மாற்றி)
சிபிஐ, சிபிஎம் "இந்திய" அரசுக்கு இன்றைய "Safety Valve" (திசை மாற்றி)
போர்குணமிக்க தோழர்கள் போலி கம்யூனிஸ்டு கட்சிகளை (சிபிஐ, சிபிஎம்) புறக்கணிக்க வேண்டும்.
//The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh ///
///காந்தி-காங்கிரசு பிரிட்டன் அரசுக்கு அன்றைய "Safety Valve" (திசை மாற்றி)////
You belive all this as Gospel of truth since it was written by a communist. Pls also read the relevent chapters about Indian capitalists, Gandhiji and national movement in the excellent and highly acclaimed book written by
Bipan Chandra (and other co-authors) who is an ardent Marxist and former Professor of JNU, NEw Delhi, a Marxist bastion till date from this book :
INDIA'S STRUGGLE FOR INDEPENDENCE
a breif sketch of this book at :
http://www.amazon.co.uk/Indias-Struggle-Independence-Bipan-Chandra/dp/0140107819
also see :
http://en.wikipedia.org/wiki/Bipan_Chandra
the views in this vital book are in variance with the common communist literature in India about Gandhiji, Indian capitalits and freedom movement. very very authenticatic and closely reasoned with excellent arguments and info...
இறுதியாக, இந்த நூலையும் நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
http://en.wikipedia.org/wiki/Road_to_Serfdom
கம்யூனிசத்திற்க்கும், பாசிசத்திற்க்கும் அடிப்படை ஒற்றுமைகள் மற்றும் மூலத்தை பற்றி 1944இல்
எழுதடப்பட்ட ஒரு மிக மிக முக்கியமான நூல் இது. மிககவும் விவாதிக்கப்பட்டு, சிலாகிக்கப்பட்டது.
மருதையன்,துரை.சண்முகம் எந்த துறையில் மேதாவிகள்?. உங்கள்
அமைப்புகளில் எத்தனை நிபுணர்கள்
இருக்கிறார்கள்,அவர்களின் அனுபவம்,அறிவு எவற்றில்?
20 ஆண்டுகளில் மக்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.
மக்களின் எத்தனை பிரச்சினைகளை
தீர்த்துவைத்துள்ளார்கள். எத்தனை
முறை நீதிமன்றம் மூலம் தீர்வு
கண்டுள்ளார்கள்.
உங்கள் கட்சியும்(?),அமைப்புகளும் தனியே சாதித்தவை என்னென்ன?.
போராடி தோற்றது எங்கெல்லாம்,
யாரிடம்?
இதற்கெல்லாம் பதில் உண்டா?.
பதில் சொல்லி உங்கள் தகுதிகளை
நிருபீயுங்கள்.பின்னர் உங்களை
மதிப்பிடலாம்.
ஒத்துழையாமை இயக்கத்தின் போது, சௌரிசௌரா-வை (1922) காரணம் காட்டி, வளர்ந்து வந்த மக்கள் போராட்டத்தை நிறுத்தியவர் காந்தி.
சட்டமறுப்பு இயக்கமும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து கொண்டிருந்த போதும் 1931-இல் கள்ளத்தனமாக இர்வினுடன், காந்தி ஒப்பந்தம் செய்து இந்திய மக்களின் போராட்டத்தை காட்டி கொடுத்தார்.
இதே போல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதும் வளர்ந்து வந்த மக்கள் போராட்டத்தை நீர்த்து போக செய்தார்.
இது மட்டுமல்லாமல் "அகிம்சை" என்று சொல்லி, மேற்கூரிய போரட்டங்களின் போது லட்சகணக்கான மக்களை அமைதியாக பிரிடிஷ் போலீசாரிடம் அடி வாங்க செய்தவர் என்ற "பெருமையும்" காந்தியையே சேரும்.
காந்தி நல்லவரா கெட்டவரா என்று அறிய,
http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html
வினவு தளத்தில் உள்ள பகத் அவர்களின் மறுமொழியை இங்கு மறுபதிவு செய்கிறேன்.
>>எனக்கு தெரிந்து உண்மையாக மக்களின் பிரச்சினைக்காக மக்களுடன் இணைந்து போராடுவது வெகு சிலரே.. அதில் ம.க.இ.க வும் ஒன்று..
1. தாமிரபரணி கோகோ கோலாவிற்கு எதிரான போராட்டம்..
2. தில்லை கோவிலில் தமிழில் பாட அனுமதி மறுக்கப் பட்டதற்கு எதிரான போராட்டம்
3. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தென் மாவட்டங்களில் நடந்த போராட்டம்
4. இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம்
5. இணையத்தளத்தில் நடக்கம் ஊக பெற வணிகத்துக்கு எதிரான போராட்டம்
6. இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! என்று நடந்த போராட்டம்
7. தஞ்சையில் நடந்தும் தமிழ் மக்கள் இசை விழாவின் மூலம் பல தமிழ் இசை மேதைகளை கொண்டு கர்நாட இசை என்பது களவாடிய தமிழ் இசைதான் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியது.. தாய் மொழி உரிமை பற்றிய விழிப்புணர்வு..
8. கருவறை நுழைவு போராட்டம் நடத்தியது..
9. குஜராத் படுகொலைக்கு எதிராக மக்களிடம் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரம்/போராட்டம், மறுகாலனி ஆக்கத்திற்கு எதிராக நடத்தும் போராட்டங்கள், தேர்தல் பாதையின் போலித்தனங்களை எதிர்த்து நடக்கும் போராட்டம், விவசாயத்தை அளிக்க வரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உணவுப் பொருட்களுக்கு எதிரான போராட்டம்….
>>
. சிறுவணிகத்தில் ரிலையன்ஸை (றெலிஅன்cஎ Fரெஷ்) எதிர்த்து போராட்டம்
. சங்கரராமன் கொலையையொட்டி சங்கராசாரியை அம்பலபடுத்தியத்து
. பெரியார் சிலையுடைப்பை எதிர்த்து களத்தில் ஆர்ப்பாட்டம்
. பள்ளி கட்டாய நன்கொடை எதிர்த்து போராட்டம்
. சாராய கடைகளை அகற்ற கோரி போராட்டம்
. ஈழ மக்களை கொல்லும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவி அளிக்கும் இந்திய அரசை எதிர்த்து போராட்டம்
\\பள்ளி கட்டாய நன்கொடை எதிர்த்து போராட்டம்//
இன்னா,
பொணானி ஞாபகம் இருக்கா குரோபேட்டயில சீபீஎம் ஆதரவு ஆசிரியர் சங்கத்துக்கு பு மா இ மு ஆப்பு வச்சது.மறந்துடுச்சா,
உங்களோட போராட்டமெல்லாம் எம்ஜிஆர் செயா சோனியா கருணாவுக்கெல்லாம் சோப்பு போடறது தான கோவப்படாதீங்க மறந்துட்டேன் விஜய்காந்து தளபதி விசய் மமூட்டீ சேர்த்துக்குறேன்
உங்க திறம எல்லாம் ம க இ க உக்கு தேவ இல்ல,இன்னா புரியுதா ,புரியிலயா எப்படி டாஸ்மாக்குல சங்கம் கட்டுறோம்ன்னு சரக்கு அடிச்சா இப்புடித்தான் உளறுவாங்களோ
கலகம்
சிபிஎம் உங்களை விட அதிகமான போராட்டங்களை நடத்தி வெற்றிகளும்
பெற்றுள்ளனர்.உங்களுடையது உள்ளூர்/தமிழ்நாடு அளவில் கூட
சிறிய போராட்டங்கள். சுவரெழுத்து
புரட்சிகள்தான் உங்கள் சாதனை.
நீங்கள் நடத்திய போராட்டங்களில் பெரும்பான்மையானவை பிரச்சார
போராட்டம்.இதால் மக்களுக்கு ஒரு
பயனுமில்லை.ஒரிரு இடங்களில்
நீங்கள் போராடியதையே பெரிதாக
சொல்வீர்கள் என்றால் உங்களை விட
செறிவாகப் போராடியவர்கள் என
என்.ஜி.ஒக் களைச் சொல்லமுடியும்.
உதாரணமாக இறால் பண்ணைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி, நீதிமன்றம் சென்றவர்கள் ஜெகன்னாந்தன்,கிருஷ்ணம்மாள்
தம்பதியினரும்,என் ஜி ஒக்களும்.
அவர்கள்தான் நீதிமன்றம் மூலம்
தடை உத்தரவு,தீர்ப்பு பெற்றவர்கள்.
நீங்கள் செய்யாததை அவர்கள்
செய்தார்கள். எத்தனையோ
வழக்குகளை உழைக்கும் வர்க்கம் சார்பாக தொடுத்து வென்றது சிஐடியு.
அதை மறுக்க முடியுமா உங்களால்.
உங்கள் போராட்டங்களால் அரசின்
கொள்கைகளில் ஒரு மாற்றத்தையும்
கொண்டு வரமுடியவில்லை.அகில
இந்திய அளவில் இடதுகள் எடுத்துச்
சென்ற போராட்டம் காரணமாகவே
மத்திய அரசு பல கொள்கைகளை
முழுதாக அமுல் செய்யவில்லை.
ஜெ. வேலை நீக்கம் செய்த அரசு ஊழியருக்காக போராடியது சிஐடியு.
அவர்கள்தான் உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தனர்.நீங்கள்
என்ன செய்தீர்கள். இது போல்
ஆயிரம் உண்டு. இருப்பது
இருபது பேர், அவர்களே
அறுபது பேர்களில் வலைப்பதிவு
ஆரம்பித்து பில்டப் கொடுப்பார்கள்.
அதை பார்த்து உங்களையெல்லாம்
புரட்சியாளர் என்று ஒத்துக் கொள்ள
வேண்டுமா.
.
////ஒத்துழையாமை இயக்கத்தின் போது, சௌரிசௌரா-வை (1922) காரணம் காட்டி, வளர்ந்து வந்த மக்கள் போராட்டத்தை நிறுத்தியவர் காந்தி.
சட்டமறுப்பு இயக்கமும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து கொண்டிருந்த போதும் 1931-இல் கள்ளத்தனமாக இர்வினுடன், காந்தி ஒப்பந்தம் செய்து இந்திய மக்களின் போராட்டத்தை காட்டி கொடுத்தார்.
இதே போல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதும் வளர்ந்து வந்த மக்கள் போராட்டத்தை நீர்த்து போக செய்தார்.
/////
இல்லை தோழரே,
அப்படி உமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. உண்மை அவ்வளவு எளிமையானது அல்ல.
"INDIA'S STRUGGLE FOR INDEPENDENCE" (Bipan Chandra)புத்தகத்தில் ஒரு அத்தியாத்தை அப்படியே தமிழாக்கம் செய்து இங்கு தர மிக ஆசைதான்..
நீங்களே படித்துப்பாருங்களேன்.
Pls also read the relevent chapters about Indian capitalists, Gandhiji and national movement in the excellent and highly acclaimed book written by
Bipan Chandra (and other co-authors) who is an ardent Marxist and former Professor of JNU, NEw Delhi, a Marxist bastion till date from this book :
INDIA'S STRUGGLE FOR INDEPENDENCE
a breif sketch of this book at :
http://www.amazon.co.uk/Indias-Struggle-Independence-Bipan-Chandra/dp/0140107819
also see :
http://en.wikipedia.org/wiki/Bipan_Chandra
the views in this vital book are in variance with the common communist literature in India about Gandhiji, Indian capitalits and freedom movement. very very authenticatic and closely reasoned with excellent arguments and info...
ஜெ. வேலை நீக்கம் செய்த அரசு ஊழியருக்காக போராடியது சிஐடியு.
அவர்கள்தான் உச்சநீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தனர்.//
ஆமா நம்புங்க,
இப்ப போயஸ் தோட்டத்துக்கு கூட மக்களோட உரிமைய வ்வாஙத்தான் போயிருக்காங்களாம்
சிஐடியு அன்று நீதிமன்றம் சென்றது.
அதை மறுக்க முடியுமா. நாளையே
தேவைப்படும் போது ஜெ.யை எதிர்க்க சி.ஐ.டி.யு தயங்காது.
கலகம் என்ற பெயரில் எழுதுபவர்
என்ன நடந்தது என்பதை தெரிந்து
கொண்டு எழுத வேண்டும்.
தனி மடல்
முதலாளித்துவ பயங்கரவாத மாநாடு – நிகழ்ச்சி நிரல் வாசகர் பரிந்துரையில் தமிழ்மணத்தில் 15 வாக்குகள் பெற்று இருக்கிறது.
வலையில் உலாவினால், நீங்களும் வாக்களியுங்கள்.
நன்றி.
மகா
http://mahasocrates.blogspot.com
அம்பத்தூர் ஓ.டி. யிலிருந்து எவ்வளவு தூரம்? கொஞ்சம் வழி சொல்லுங்கள்.
\\சிஐடியு அன்று நீதிமன்றம் சென்றது.
அதை மறுக்க முடியுமா. நாளையே
தேவைப்படும் போது ஜெ.யை எதிர்க்க சி.ஐ.டி.யு தயங்காது.
கலகம் என்ற பெயரில் எழுதுபவர்
என்ன நடந்தது என்பதை தெரிந்து
கொண்டு எழுத வேண்டும்.\\
சி ஐ டி யு என்ன செய்தது என எங்களுக்கு தெரிந்ததால் தான் நாங்கள் தொழிற்சங்க பிழைப்பு வாதத்தில் மூழ்காதே என முழங்குகிறோம். பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சி யடைந்து புரட்சிக அமைப்பின் தியாகத்தை கேலிசெய்தும் சில இடங்களில் உரிமை கொண்டாடுவது என பித்தலாட்ட வேலையில் சீபிஎம் கட்சி ஈடுபடுவது உங்களுக்கு தெரியுமா இது குறித்த் உண்மை கதையை கலகத்தில் சாயம் வெளுக்கும் போலிகள் எனும் தலைப்பில் எழுதியுள்ளோம்,மேலும் கலகத்தால் எழுதப்பட்ட் பரப்பிரம்மம் எனும் கவிதையை திருடி அதில் போலிகளின் பேரை எடுத்து விட்டு மக இ க வை வசை பாடும் விடுதலை (போலி) போன்றசீபீஎம் காரர்களின் யோக்கியதையே அக்கட்சியின் குணத்தை காட்டுகிறது.
எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் போலி கட்சியில் உள்ள புரட்சிகர அணியா அல்லது அப்படி ஏமாற்றும் அணியா?
கலகம்
நண்பர் நொந்தகுமாரன்
இந்த இடம் அம்பத்தூர் ஓடியிலிருந்து
ஆவடி போகும் வழியில் உள்ளது.
தோராயமாக அரை கிலோமீட்டர் இருக்கலாம்.
கருத்தரங்கம்:
இடம் :
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்
பொதுக்கூட்டம் மற்றும் மகஇக கலைநிகழ்ச்சி :
மாலை 6 மணி
அம்பத்தூர் OT மார்கெட்
சிபிஎம் அனானி தோலரே,
உங்கள் யோக்கியதை தான் சிங்கூர், நந்திகிராம் விவசாயிகளின் போராட்டத்தின் போது வெளுத்து போனது. விவசாயியின் தோழன் என்று சொல்லி ஆட்சிய பிடிச்சு, சிறப்பு பொருளாதார மண்டலம் என்று பெயரை சொல்லி விவசாயிகளின் நிலத்தை பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல், இந்த அடக்குமுறை எதிர்த்து போராடிய விவசாயிகளை மூர்க்கத்தனமாக சிபிஎம் ரவுடிகளை விட்டு கொன்று குவித்தீர்கள். அது மட்டுமல்லாமல், நந்திகிராம் வீடுகளனைத்தையும் தீயிட்டு கொளுத்தினீர்கள்.
சிவப்பு கொடி உங்களுக்கு ஓட்டு வாங்கி ஆட்சிய பிடிக்க தான். ஆட்சியில் உட்கார்ந்ததும் மற்ற ஓட்டு கட்சிகளை விட மிருகத்தனமாக மக்கள் போராட்டங்களை ஒடுக்குகிறது சிபிஎம்.
Post a Comment