Tuesday, April 7, 2009

தமிழன் தர வேண்டிய செருப்படி - தேர்தல் புறக்கணிப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை செருப்பால் அடித்த முன்டாசர் அல்-ஜெய்தியின் வழியை பின்பற்றி, சீக்கிய படுகொலையை கண்டித்து அதற்கு காரணமான காங்கிரசு கட்சி மற்றும் இந்திய அரசை கண்டித்தும் ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் ப.சிதம்பரம் மீது செருப்பு வீசினார். செருப்படியால் உலக புகழ் பெற்ற செருப்புஷ் போலவே செருப்படி பெற்ற கோமகன் செருப்படி சிதம்பரமும் இந்திய அளவில் நாறி போயுள்ளார். செருப்படி படங்கள் பின்வருமாறு.










சீக்கிய இனப் படுகொலையை கண்டித்து செருப்படியால் தன் உணர்வை வெளிப்படுத்தினார் ஜர்னைல் சிங். ஈழப் படுகொலைகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசை எதிர்த்து, தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என கூறும் மகஇக-வின் சுவரொட்டி கீழே.

சபாஷ்! சரியான செருப்படி!
  • 1984 சீக்கியப் படுகொலையை கண்டித்து ப.சிதம்பரம் மீது பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங் செருப்பு வீச்சு!
  • ஈழப் படுகொலையின் சூத்திரதாரி இந்திய அரசுக்கும் கபட வேடதாரி ஓட்டுக் கட்சிகளுக்கும்,
  • தமிழகமே, நீ தர வேண்டிய செருப்படி - தேர்தல் புறக்கணிப்பு!

Poster - Shoe On Chithambaram by Jarnail_Singh

Related Links:

5 comments:

Subas said...

புறக்கணிப்பால் எந்த பிரயோசனமும் இல்லை அவனவன் கள்ளவோட்டு குத்திட்டு போயிடுவான்.

சகாதேவன் said...

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு நடந்த அசிங்கம் இன்று ஒரு இந்தியனுக்கும் நேர்ந்ததற்கு காரணம் டிவியும் பத்திரிகைகளும்தான். 1984ல் சீக்கிய மக்களுக்கு நேர்ந்தது இன்று பத்திகையாளர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் சிக்கிய மக்களுக்கு நேர்ந்து விடக்கூடாது. நல்லவேளை ஜர்னைல்சிங்கிடம் துப்பாக்கி இருந்திருக்க வில்லை.
சகாதேவன்

சவுக்கடி said...

தேர்தல் புறக்கணிப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.

தேர்தல் புறக்கணிப்பு தம்மைத் தாமே எமாற்றிக் கொள்ளும் செயலே!

எளிதான கள்ளப் பதிவிற்கு வழிவகுக்கும்.

சுனா பானா said...

ஈழத்தில் தமிழின படுகொலைக்கு இந்திய அரசு ஆதரவாக உள்ளது. ராணுவ தளவாடங்கள் அனுப்புவது, ராணுவ ஆலோசனைகள், ராணுவ பயிற்சி, இந்திய ராணுவ வீரர்களை நேரடியாக அனுப்புவது, இலங்கைக்கு பல்லாயிரக்கணக்கில் பணவுதவி செய்வது என இந்திய அரசு தமிழினத்திற்கு எதிரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது தமிழின துரோகிகளும், தமிழின எதிரிகளும் தேர்தல் களம் காண்கின்றன. இனப்படுகொலைகளுக்கு நேரடியாக காரணமாக இருக்கும் கட்சிகளையும், இனப்படுகொலை நடக்கும் போதும் பதவியே குறியென இருக்கும் கட்டிகளையும், இனப்படுகொலையை கண்டு மகிழும் கட்சிகளையும் தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டும். மனசாட்சியுள்ள தமிழ் மக்கள் யோசிக்க வேண்டும், ஈழத்தில் குண்டு மழை பொழியும் போது, தமிழக தேர்தல் கட்சிகள் பணபேரமும், தொகுதி பேரம், பதவிபேரம் செய்கின்றனர்.

இந்த துரோகிகளுக்கு, எதிரிகளுக்கு நல்ல ஓட்டு போட்டால் என்ன, கள்ள ஓட்டு போட்டால் என்ன. விளைவு ஒன்று தானே! தமிழின படுகொலைக்கு ஆதரவாக தான் இருக்க போகின்றனர். இவர்களை புறக்கணிக்க வேண்டும். வெகுஜன போராட்டங்கள் மூலம், ஈழத்தில் தமிழ் மக்களை கொல்லும் இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.

செங்கொடி said...

தேர்தல் புறக்கணிப்புதான் கள்ள ஓட்டுக்கு வழிவகுக்குமா? கள்ள ஓட்டு விழாத தேர்தல் எது? நடப்பது துரோகத்தனம், அயோக்கியத்தனம் என்று தெரிந்து விட்டது. குறைந்த பட்சம் அதற்கு உங்கள் சம்மதத்தை கொடுக்காமல் இருக்கலாமல்லவா? அதற்காகத்தான் புறக்கணிக்கச்சொல்வது. சிந்தித்துப்பாருங்கள் இன்னும் எவ்வள‌வோ இருக்கிறது.

தோழமையுடன்
செங்கொடி