Saturday, July 11, 2009

முத்துகுமாருக்கு ஒர் ஆட்டோ நிறுத்தம் - தியாகங்கள் சாவதில்லை

Muthukumar Memorial AutoStand
பழைய மகாபலிபுர சாலையில் சென்னை மாநகர பேரூந்தில் பயணிக்கும் போது முத்துக்குமார் நினைவு ஆட்டோ நிறுத்தத்தை பார்த்தேன். இனப்படுகொலைக்கு ஆதரவான இந்திய அரசுக்கெதிராகவும், சுரணையற்ற தமிழக மக்களுக்கு உணர்வேற்றவும் தோழர் முத்துக்குமார் ஜனவரி 29, 2009 அன்று, தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார்.

Muthukumar Banner தீக்குளிப்பு சரியானது அல்ல என நாம் கூறினாலும், முத்துகுமாரின் தியாகத்தால் முத்துக்குமாருக்கு முன்னும், முத்துக்குமாருக்கு பின்னும் தமிழகத்தில் ஈழ ஆதரவு நிலையில் பெரிய மாற்றமுள்ளது. அவர் இட்ட தீயின் காரணத்தால் முத்துகுமாருக்கு பின் தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பெருவாரியான மக்களிடையே ஈழ மக்களுக்கு ஆதரவு நிலை உருவானது. அவரின் வேண்டுகோளுக்கினங்க இளைஞர்கள், மாணவர்கள் போராட தயாரானார்கள். ஆனால் இந்திய, தமிழக அரசின் அலட்சியப்போக்கு, ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம், ஓட்டு அரசியல் கணக்குகள் என பல்வேறு துரோகங்கள் மூலம் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தினர். இருப்பினும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார் முத்துகுமார்.

அன்றும், இன்றும், என்றும் முத்துக்குமார் என்றாலே அவரின் வீரமும், தியாகமும் தான் நினைவுக்கு வரும். தியாகங்கள் சாவதில்லை.

முத்துகுமார் பதிவுகள், கட்டுரைகள்:



தமிழக அரசியல் வியாதிகள்:


போராட்டங்கள்:


குறும்படங்கள் & படங்கள்:

2 comments:

Karthik said...

உசுப்பேத்தி உசுப்பேத்தி ஏன் இப்படி ரணகளம் பண்றீங்க..?

சுனா பானா said...

தீக்குளிப்பு ஒரு தவறான செயல். இருப்பினும் சுரணையற்ற தமிழக மக்களை தட்டியெழுப்பவே முத்துக்குமார் தீக்குளித்தார். இது முத்துக்குமார் பற்றிய நினைவு பதிவு. அவரின் தியாகத்தை நினைவு கூறும் பதிவு. உசுப்பேத்துவதற்கு ஒன்றும் இல்லை.

சில சமயம் உண்மை சுடும்.
சில நினைவுகளும் சுடும்.