Sunday, July 12, 2009

சொர்க்கபுரி அமெரிக்கா-கடுங்குளிரில் 35 லட்சம் வீடற்றோர்- முதலாளித்துவ பயங்கரவாதம்

"If a free society cannot help the many who are poor,
it cannot save the few who are rich"
- John F. Kennedy

கொட்டும் பனியிலும், கடுங்குளிரிலும் வீடற்ற ஏழைகளாக துரத்தபட்டுள்ளனர் அமெரிக்க மக்கள். அட்டைப்பெட்டிக்குள்ளும், டென்ட்டு கொட்டகையிலும், கார்களிலும், தெரு ஓரங்களிலும், தெருவோர இருக்கைகளிலும், வீடற்றோர் முகாம்களிலும் இரவை கழிக்கின்றனர். அமெரிக்க பெயில்-அவுட் என்ற பெயரில் சூதாடிகளுக்கு சுமார் 4 கோடி கோடி ரூபாய்க்கு மேல் (8டிரில்லியன்$) மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாரி வழங்கியுள்ளனர். நாள்தோறும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றது. வீடற்ற மக்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.

நாசகர நிதிமூலதன சூதாடிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியால் வீடிழந்து, பொருள் இழந்து, பணம் இழந்து, தன் உறவுகளை இழந்தும் பாதிக்கபடுகின்றனர். தன்னுடைய பைபிளையும் இழந்து, அடுத்த வேளை உணவுக்காக, உயிரை காப்பதற்காக பிச்சை எடுத்து வேலை தேட முயற்சிக்கும் படம் நெஞ்சை அறுக்கிறது.

அதி-தாராளமய முதலாளித்துவ கொள்கைகளால் ஒவ்வொரு பொருளாதார வீழ்ச்சியிலும் கீழ்த்தட்டு மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அமேரிக்க நடுத்தர வர்க்கத்தினரையே வீட்டை விட்டு துரத்துகிறது முதலாளித்துவ பயங்கரவாதம். அமெரிக்காவில் பொய்த்து போன அதி-தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை பின்பற்றுமாறு உலகவங்கி, சர்வதேச நிதியம், G8 நாடுகள் என எல்லா பணமுதலை அமைப்புகளும் நிர்பந்திக்கின்றன. நம்நாட்டு ஓட்டு கட்சிகளும் அதை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றி வருகின்றனர்.

ஏற்கனவே நம்நாட்டில் வீடற்றோர் எண்ணிக்கை ஏராளம். நம்மிடம் இருப்பதோ ஓலை குடிசைகள். அதையும் பிடுங்க பார்க்கிறார்கள். விழித்து கொள்வோம். அமெரிக்க அடிமை அரசியல் ஒட்டுண்ணிகளை அம்பலபடுத்துவோம். போராடுவோம்.

அமெரிக்க வீடற்றோரின் நெஞ்சை உருக்கும் சிலப்படங்கள் கீழே.






































Related Links:



1 comment:

செங்கொடி said...

அமெரிக்கா ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாடு எனும் எண்ணத்தை அதன் ஆட்சியாளர்கள் வன்முறைமூலம் பிற நாடுகளிடம் அரசியல் ரீதியாக திணிக்கிறது. அதன் அடிவருடிகளோ, அங்கு செல்வதே ஈடேற்ற லட்சியம் என்று மக்களிடம் சமூக ரீதியாக திணிக்கிறார்கள்.

இந்தப்படங்கள் அதை தகர்க்கும்.

தோழ‌மையுட‌ன்
செங்கொடி