Thursday, August 13, 2009

புமாஇமு வேர்ட்பிரஸ் - பெற்றோர்களுக்கான தளம்

பத்து வருடங்களுக்கு முன் சுமார் 30 ஆயிரத்திற்குள் உயர்கல்வியை படிக்க முடிந்தது. இப்போது நம் கண் முன்னாலேயே கல்வி கட்டணங்கள் மள மளவென உயர்த்தப்பட்டு உயர் கல்விக்கு 3 லட்சங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. இந்த அதிவேக கட்டண உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடுத்தர வர்க்கம் திண்டாடுகிறது. இதே போக்கு நீடித்தால் அடுத்த 10, 15 ஆண்டுகளில் உயர்கல்விக்கான செலவுகள் 30, 40 லட்சங்களை தாண்டும் என நிதி ஆலோசகர்கள் நாணயம் விகடனில் சொல்கிறார்கள். அரசின் தனியார்மய, தாராளமய கல்வி கொள்கை & கட்டண உயர்வின் வேகத்தை பார்த்தால், கல்வி செலவுகள் கட்டாயமாக கோடியை தாண்டும்.

போராடி பெற்ற உரிமைகளையும், வாழ்க்கை நிலையையும் தக்க வைத்து கொள்ளாத எந்த சமூகமும் வளர்ச்சியடையாது. மாறாக 2020க்குள் "வல்லரசு" ஆனாலும் அது சீரான வளர்ச்சியாக இருக்காது. ஒரு பக்கம் மட்டுமே வீங்கிய நோயாக இருக்கும். கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கும்.

பெற்றோர்களிடம், எனக்கு என்ன சொத்து வைத்து இருக்கிறாய் என கேட்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால் இதே இளைஞர்களிடமும், இளம் பெற்றோர்களிடம் "ஏம்பா என் தலையில் இவ்வளவு லட்சம் கடனை தலையில் சுமத்தினாய்" என கேட்கும் அவலம் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன. கல்விக்கான உரிமைக்காக போராடுவது நம்முடைய கடமை.

இப்படி அதிகரித்து வரும் கட்டணக் கொள்ளையை எதிர்த்து புமாஇமு தொடர்ந்து போராடி வருகிறது. களத்தில் நிற்கிறது. கல்விக்கான உரிமைக்காக கருத்தாலும் கரத்தாலும் வலு சேர்ப்பது பெற்றோர்களின் கடமை.

RSYF

புமாஇமு கல்வி கொள்ளையர்களை அம்பலப்டுத்தியும், எதிர்த்தும் போராடி வருகிறது. போராட்ட செய்திகளும், கட்டணக் கொள்ளையை திரை கிழிக்கும் செய்திகளையும், கல்வி பற்றிய கட்டுரைகளையும் பதிக்கும் தளம் புமாஇமு வேர்ட்பிரஸ். இது மாணவர்களுக்கான தளம் மட்டுமல்ல. பெற்றோர்களுக்கான தளம்.

கட்டண கல்வி பற்றிய உண்மைகள்:

போராட்டங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

No comments: