Wednesday, August 19, 2009

ஈழம் - தேவை ஒரு நேர்மையான மீளாய்வு!

Eelam Analysis ஈழத்தில் போர் இன்னும் முடியவில்லை. இந்த போர் ஈழ மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரை தொடரும். 1983 யூலை இனப் படுகொலையின் போது தமிழ்நாட்டில் மாபெரும் எழுச்சி இருந்தது. ஆனால் 2009 ஈழப் இனப் படுகொலையின் போது தமிழ்நாடு காணாமுகமாகவே இருந்தது. முத்துகுமரன் தியாகத்திற்கு பின் தயக்கத்துடன் வீரியம் குறைந்த எழுச்சி மாணவர்கள் இளைஞர்களிடையே இருந்தது.

விடுதலை புலிகள் தலைமையை ஒழித்த பின்னர் ஈழ இனப் படுகொலைக்கு எதிர்ப்பு அணி இல்லாமல் உள்ளது. இதை சாதகமாக கொண்டு ஆயிரகணக்கில் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள். மக்கள் திறந்த வெளி சிறைச்சாலைகளில் வாடுகிறார்கள். இந்த சூழலில் பல இளைஞர்கள் (தமிழ்நாடு, புலம்பெயர், ஈழம்) ஈழ விடுதலை போரை பற்றியும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தும், விவாதித்தும் வருகின்றனர்.

ஈழம் மக்களுக்கு ஆதரவாக குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது புதிய ஜனநாயகம் இதழ். குறிப்பாக ராஜீவ் கொலையானது, படுகொலை செய்யப்பட்ட, சீரழிக்கப்பட்ட ஈழ மக்களின் நியாயமான தண்டனை என தமிழகத்தில் எடுத்துரைத்தது. விடுதலைப் புலிகளே ராஜீவ் கொலையை மறுத்து வந்த நிலையில் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்து, நியாயத்தை எடுத்து கூறியதற்காக இந்திய அரசால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள் புதிய ஜனநாயகம் பத்திரிக்கையும், மகஇக அமைப்பினரும் தான்.

புதிய ஜனநாயகம் இதழ் ஈழம் பற்றி மீளாய்வு செய்துள்ளது. ஈழம் குறித்து ஆய்வு செய்யும், போராட முனையும், இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவற்றுள சில குறிப்புகள்,

 1. ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகளே. இதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன. சிங்கள இனம் இந்தியாவின் ஒரிசா, வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்.
 2. தமிழர்களுக்கு எதிரான இன கலவரங்கள் குறித்த விவரங்கள் (1856, 9158, 1972, 1977, 1983)
 3. ஈழப் போராட்டங்களும் இலங்கை அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்கள் (1956 டட்லி சேனநாயகா - செல்வா ஒப்பந்தம், 1989 திம்பு பேச்சு வார்த்தை, 1995 சந்திரகா குமாரதுங்கா ஒப்பந்தம், ரணில் விக்ரமசிங்கே 2002 போர் நிறுத்தம்)
 4. இலங்கையில் உள்ள இனங்கள் (சிங்களம், ஈழத்தமிழர்கள், மலையகத்தமிழர்கள், முசுலீம்கள்). ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள். அவர்களும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்கள் தனி தனி இனமே. 1815க்கு பின் தென் தமிழ்நாடு மாவட்டங்களில் இருந்து தோட்டத்தொழி களுக்காக குடியமர்த்தப்பட்டவர்கள் மலையக தமிழ் மக்கள். குறிப்பாக இலங்கை சுதந்தரத்திற்கு பின் ஓட்டுரிமை மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். மடகாஸ்கரில் இருந்து வந்து குரியேரிய மூர் இனத்தை சேர்ந்த முசுலீம்கள். ஆனால் தமிழ் கற்று தேர்ந்து தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர்.
 5. ஈழம் - கட்சிகள்
  LTTE, TELO, EROS, EPRLF, PLOTE, NLFT போன்றவை ஈழம் கட்சிகளாகும். இவற்றுள் LTTE, TELO, EROS, EPRLF, PLOTE ஈழம் கட்சிகளுக்கு எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் 'ரா'வால் நிதி உதவியும், ராணுவப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. அது ஈழ விடுதலைக்காக அல்ல. இலங்கையை கட்டுக்குள் வைத்து கொள்ளவதற்காக செய்தது.
 6. 'ரா' (RAW) என்ற சதி அமைப்பு - 1967இல் இந்தியாவின் அண்டைய நாடுகளை சதி மூலம் கட்டுபடுத்த உருவாக்கப்பட்டது தான் 'ரா' அமைப்பு. பிரபாகரன் மரணம், கே.பி கைது இவற்றை சதி மூலம் நிறைவேற்ற சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருக்கும் இந்திய உளவுத்துறை தான் 'ரா'
 7. இப்படி ஈழம் பற்றிய தகவல்கள் கொண்ட ஆய்வு புத்தம் தான் "ஈழம்: தேவை ஒரு நேர்மையான மீளாய்வு!. அடுத்து ஈழத்தில் செய்யவேண்டியது என்ன என்பது பற்றியும் விரிவாக ஆராய்கிறது.

ஈழம் குறித்து உணர்வுடன் செயல்பட துடிக்கும் இளைஞர்களுக்கு இந்நூலை பரிந்துரை செய்கிறேன். மேலே குறிப்பிட்டவை எனது புரிதல்களும், சில குறிப்புகளும் தான். முழு விவரத்திற்கு புத்தகத்தை வாசிக்கவும்.

ஈழம் குறித்த ஆய்வு நூல்கள்:
 • ஈழம் - தேவை ஒரு நேர்மையான மீளாய்வு! (விலை ரூ30/-, பக்கங்கள் - 80)
 • ஈழம் - நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் (விலை ரூ25/-, பக்கங்கள் - 64)
 • வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ் தேசியர்களுக்கு மறுப்புரை (விலை ரூ20/-, பக்கங்கள் - 40)


நூல்கள் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்:
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600002

புதிய ஜனநாயகம்:
110, இரண்டாம் தளம்,
63,என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம், சென்னை-600 024

புதிய கலாச்சாரம்:
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, (15வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600083.
Eelam oppurtunism in Tamilnadu
Eelam Emphasizing class struggle


Related Links:

ஈழம் நூல்கள் பற்றிய பதிவுகள்:

தொடர்புடைய கட்டுரைகள்:

5 comments:

சுனா பானா said...

தமிழர்களே ஈழம் பற்றிய நூல்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.

Anonymous said...

SAME THING HAPPEN TO GUJARAT MUSLIM

WE MUST CREATE A MUSLIM EELAM IN GUJARAT


i am a sri lankan

சுனா பானா said...

குஜராத்தில் இந்து மத வெறியர்களான சங் பரிவார் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், பாஜக, பஜ்ரங் தள், விசுவ இந்து பரிஷத் மூலம் மாபெரும் முசுலீம் இனப்படுகொலை நடந்தது உண்மையே. மக்களிடம் இந்துத்துவத்தை திரை கிழித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவி கட்சிகளை புறக்கணிக்கப்பட வேண்டும்.

மேலும் இந்தியாவில் மொழிவாரியாக பல மாநிலங்கள் ஒரு தேசத்திற்கு உண்டான அடையாளங்களை கொண்டுள்ளன. அதை போலவே குஜராத்தும். குஜராத் முசுலீம் நாடு என பிரித்து பார்க்க முடியாது. குஜராத் தனி நாடாக இருப்பதா, இந்தியாவுடன் இருப்பதா என்பதை குஜராத் மக்கள் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.

பார்ப்பனீய கட்சிகளின் முகத்திரையை மக்கள் உணராமல் தான் உள்ளனர். மக்களிடையே அவர்களை அம்பலப்படுத்துவதும் முக்கியமான பணியாக உள்ளது.

Anonymous said...

தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

சுனா பானா said...

தோழர் சர்வதேசியவாதிகளுக்கு நவம்பர் தின வாழ்த்துக்கள்.