Saturday, January 1, 2011

சென்னை புத்தக கண்காட்சி 2011 - கீழைக்காற்று நூல்கள்

Chennai Book Fair 2011 சென்னைப் புத்தகக் கண்காட்சி 2011 ஜனவரி 4 முதல் 17 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் ஆங்கில இந்திய மேல்நிலை பள்ளியில் நடை பெற உள்ளது. பணிக்கு மட்டுமே படிப்பது படிப்பன்று. வாழ்க்கைக்காக படிப்பதே படிப்பு. நம்முள் பெரும்பாலோனோர் பள்ளி, கல்லூரிகளை தாண்டிய உடன் படிப்பதில்லை. தொடர்ச்சியான வாசிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகளை வழி காட்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தேடிப் படிக்க நல்வாய்ப்பாக புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் கடை விரித்தாலும் அவற்றுள் நமது அறிவுச் சாளரங்களை திறக்கும் நூல்கள் கீழைகாற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும். கீழைக்காற்று அரங்கத்தின் எண் 39-40 இல் கிடைக்கும் நூல்களுள் சில;

புதிய கலாச்சாரம் / வினவு நூல்கள்:
  • விடுதலைப் போரின் வீர மரபு
  • பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
  • நினைவின் குட்டை கனவு நதி
  • மீண்டும் தொழிலாளி வர்க்கம்
  • நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

மார்க்சியம்-லெனினியம் கற்க, மாவோ சிந்தனை வழி நிற்க;
  • கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் முக்கிய நாட்குறிப்புகள்
  • லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
  • அராஜகவாதமா? சோசலிசமா?
  • கம்யூனிசக் கொடியின் கீழ்...
  • முரண்பாடு பற்றி

ஏகாதிபத்திய மேலாதிக்க பயங்கரவாதத்தை இனங்காட்டும் நூல்கள்:
  • அருந்ததி ராய் / கரன் தபார் விவாதம்
  • ஈராக்: வரலாறும் அரசியலும்
  • இலங்கை: தேசிய இனப் பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும்
  • ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
  • மறுகாலனியாதிக்கக் கொலைக்களங்கள் (கவிதை)

மதம் / பார்ப்பன மதவெறிப் பயங்கரத்தை அறியத் தரும் நூல்கள்:
  • மதம் : ஒரு மார்சியப் பார்வை
  • நான் நாத்திகன் ஏன்?
  • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தது எப்படி?
  • இந்து என்று சொல்லாதே! ராமன் பின்னே செல்லாதே! (கவிதை)
  • ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யக் கனவை தகர்த்தெறிவோம்!

Keezhaikattru Books - Chennai Book Fair 2011
தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, December 22, 2009

உழைக்கும் வர்க்கத்தின் தோழர் பிறந்தநாள்

தோழர் ஸ்டாலின் அவர்களுடைய 130வது பிறந்த நாள் டிசம்பர் 21 அன்று தமிழகம் முழுவதும் பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் நடந்தது. பாட்டாளிகளின் தோழனாக இருந்து கடைசி மூச்சு வரை பாட்டாளிகளுக்காக உழைத்த ஒரே காரணத்திற்காக எண்ணிலடங்கா வதந்திகளையும், பொய் செய்திகளை மேற்குலகம் உற்பத்தி செய்தது. அந்த பொய் பிரச்சாரங்களையே அறிவுஜீவிகளும் நம்பி வருகின்றனர். அதை முறியடிப்பது மாபெரும் பணியாகும். தமிழகத்தில் தோழர் பிறந்த நாளையொட்டி பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் மூலம் தோழர் ஸ்டாலினை உழைக்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்தது மகஇக-வும் அதன் தோழமை அமைப்புகளும்.
Comrade Stalin Birthday Remembrance
  • தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!
  • தோழர் லெனின் ஸ்டாலின் வழி நடப்போம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

Related Links:

Monday, December 14, 2009

இந்தியாவில் வறுமை வளர்கிறது

Poverty
நாடு முன்னேறுது, நாடு முன்னேறுது என திரும்ப திரும்ப விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பர உத்தியால் நாடு முன்னேறிவிட்டது என மக்களை நம்பும்படியான முயற்சி யில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது ஆளும் வர்க்கங்கள். என்னத்தான் வறுமையை மறைக்க முயன்றாலும், உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

30 கோடி பேர் வறுமையில் இருப்பதாகவும், நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்றும் அரசு ஆய்வு சொல்கிறது. மேலும் விவரங்களுக்கு 11 டிசம்பர் வெளியான தினகரன் தலையங்கத்தை பார்க்கவும்.


தினகரன் தலையங்கம்:
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது. கடந்த பல ஆண்டுகளாக இது தொடர்கிறது. வெளிநாடுகளும் உலக வங்கியும் அதற்காக இந்திய அரசை பாராட்டுகின்றன. ஆனால், இந்திய மக்களின் பொருளாதாரம் முன்னேறவில்லை. ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. மூன்றில் ஒரு இந்தியன் வறுமையில் வாடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது அதிர்ச்சியான செய்தி. 2004 ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் அரசு ஓர் ஆய்வு நடத்தியது. 30 கோடி பேர் வறுமையில் இருப்பதாக அதில் தெரியவந்தது. ஜனத்தொகையில் அது 27+ சதவீதம். அதற்கு பத்தாண்டுகள் முன்பு 36 சதவீதமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியால் வறுமை குறைவதாக அந்த ஆய்வு சொன்னது. பலர் கை தட்டினார்கள். சிலர் தட்டவில்லை. வறுமை ஒழிவதாக தெரியவில்லை என்றனர். நாடு முன்னேறும்போது மக்கள் வாழ்க்கைத்தரம் உயராமல் போகுமா?

சந்தேகத்தை தீர்க்க இன்னொரு ஆய்வு நடத்த அரசு தீர்மானித்தது. சுரேஷ் டெண்டுல்கர் என்பவரிடம் பொறுப்பு தரப்பட்டது. சச்சினுக்கு அவர் உறவா என்பது தெரியாது. வறுமையை அளவிட புது வழி காட்டினார் அவர். உடலுக்கு 2250 கலோரி சத்து தரக்கூடிய உணவுகளை சாப்பிடுபவர் ஏழை அல்ல என்பது அதுவரை பின்பற்றப்பட்ட அளவுகோல். சாப்பாடு தவிரவும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகள் உண்டு. உடை, எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து போன்ற தேவைகளை சமாளிக்கும் வகையில் வருமானம் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தார். அதில்தான் வறுமையின் வளர்ச்சி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். இவர்களில் நகர்ப்புற ஏழைகள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள். நகரவாசிகளில் 25+ சதவீதம் ஏழைகள். மாதம் 579 ரூபாய் செலவிடுகின்றனர். கிராம மக்களில் ஏழைகள் 42 சதவீதம். ஒரிசா, பீகார் படுமோசம். டெல்லி, காஷ்மீர், நாகாலாந்து வறுமை குறைந்த மாநிலங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் செல்வம் உற்பத்தியாகிறது. ஆனால் செல்வந்தர்களிடம் தேங்கிவிடுகிறது. சுற்றியிருப்பவர்களுக்கு எட்டுவதில்லை. வளமையை பரவலாக்காமல் வறுமையை ஒழிக்க முடியாது. அரசுதான் அதற்கு வழி காண வேண்டும்.

Related Links:

Monday, November 9, 2009

பாசிச இட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின்

"பாசிச இட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின்" என்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி-யின் பிரசுரம் தோழர் ஸ்டாலின் பாசிச இட்லரை வென்று உலகை காத்த வரலாற்றை சுருக்கமாக, தெளிவாக சித்தரிக்கிறது.
People Friend Stalin

  1. இட்லரின் பாசிசக் கனவு
  2. பாசிச இட்லரின் காட்டாட்சி!
  3. சோவியத் ரசியாவையும் - ஸ்டாலினையும் அழிக்க நினைத்த வல்லூறுகள்
  4. யார் இந்த ஸ்டாலின்?
  5. எதிரிகளின் சதியும், அதை முறியடித்த வரலாறும்!
  6. இட்லரின் கோரமுகம்!
  7. இட்லரின் கனவு தகர்க்கப்பட்டது!
  8. தோல்வியை முறியடித்த ஸ்டாலின்!
  9. செம்படையின் எழுச்சியும் இட்லரின் வீழ்ச்சியும்!
  10. ஸ்டாலினுடைய சூளுரையும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் செங்கொடியும்
  11. இரண்டாம் உலகப் போரை முறியடித்தப் பெருமை தோழர் ஸ்டாலின் தலைமயிலான செம்படைக்கே!

நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி


"ஸ்டாலின் சகாப்தம்" - குறும்படம்
Stalin - Tamil CD
வெளியீடு - புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை - ரூ 70

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 - 2841 2367


Related Links:

Wednesday, August 19, 2009

ஈழம் - தேவை ஒரு நேர்மையான மீளாய்வு!

Eelam Analysis ஈழத்தில் போர் இன்னும் முடியவில்லை. இந்த போர் ஈழ மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரை தொடரும். 1983 யூலை இனப் படுகொலையின் போது தமிழ்நாட்டில் மாபெரும் எழுச்சி இருந்தது. ஆனால் 2009 ஈழப் இனப் படுகொலையின் போது தமிழ்நாடு காணாமுகமாகவே இருந்தது. முத்துகுமரன் தியாகத்திற்கு பின் தயக்கத்துடன் வீரியம் குறைந்த எழுச்சி மாணவர்கள் இளைஞர்களிடையே இருந்தது.

விடுதலை புலிகள் தலைமையை ஒழித்த பின்னர் ஈழ இனப் படுகொலைக்கு எதிர்ப்பு அணி இல்லாமல் உள்ளது. இதை சாதகமாக கொண்டு ஆயிரகணக்கில் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள். மக்கள் திறந்த வெளி சிறைச்சாலைகளில் வாடுகிறார்கள். இந்த சூழலில் பல இளைஞர்கள் (தமிழ்நாடு, புலம்பெயர், ஈழம்) ஈழ விடுதலை போரை பற்றியும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தும், விவாதித்தும் வருகின்றனர்.

ஈழம் மக்களுக்கு ஆதரவாக குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது புதிய ஜனநாயகம் இதழ். குறிப்பாக ராஜீவ் கொலையானது, படுகொலை செய்யப்பட்ட, சீரழிக்கப்பட்ட ஈழ மக்களின் நியாயமான தண்டனை என தமிழகத்தில் எடுத்துரைத்தது. விடுதலைப் புலிகளே ராஜீவ் கொலையை மறுத்து வந்த நிலையில் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்து, நியாயத்தை எடுத்து கூறியதற்காக இந்திய அரசால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள் புதிய ஜனநாயகம் பத்திரிக்கையும், மகஇக அமைப்பினரும் தான்.

புதிய ஜனநாயகம் இதழ் ஈழம் பற்றி மீளாய்வு செய்துள்ளது. ஈழம் குறித்து ஆய்வு செய்யும், போராட முனையும், இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவற்றுள சில குறிப்புகள்,

  1. ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகளே. இதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன. சிங்கள இனம் இந்தியாவின் ஒரிசா, வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்.
  2. தமிழர்களுக்கு எதிரான இன கலவரங்கள் குறித்த விவரங்கள் (1856, 9158, 1972, 1977, 1983)
  3. ஈழப் போராட்டங்களும் இலங்கை அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்கள் (1956 டட்லி சேனநாயகா - செல்வா ஒப்பந்தம், 1989 திம்பு பேச்சு வார்த்தை, 1995 சந்திரகா குமாரதுங்கா ஒப்பந்தம், ரணில் விக்ரமசிங்கே 2002 போர் நிறுத்தம்)
  4. இலங்கையில் உள்ள இனங்கள் (சிங்களம், ஈழத்தமிழர்கள், மலையகத்தமிழர்கள், முசுலீம்கள்). ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள். அவர்களும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்கள் தனி தனி இனமே. 1815க்கு பின் தென் தமிழ்நாடு மாவட்டங்களில் இருந்து தோட்டத்தொழி களுக்காக குடியமர்த்தப்பட்டவர்கள் மலையக தமிழ் மக்கள். குறிப்பாக இலங்கை சுதந்தரத்திற்கு பின் ஓட்டுரிமை மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். மடகாஸ்கரில் இருந்து வந்து குரியேரிய மூர் இனத்தை சேர்ந்த முசுலீம்கள். ஆனால் தமிழ் கற்று தேர்ந்து தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர்.
  5. ஈழம் - கட்சிகள்
    LTTE, TELO, EROS, EPRLF, PLOTE, NLFT போன்றவை ஈழம் கட்சிகளாகும். இவற்றுள் LTTE, TELO, EROS, EPRLF, PLOTE ஈழம் கட்சிகளுக்கு எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் 'ரா'வால் நிதி உதவியும், ராணுவப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. அது ஈழ விடுதலைக்காக அல்ல. இலங்கையை கட்டுக்குள் வைத்து கொள்ளவதற்காக செய்தது.
  6. 'ரா' (RAW) என்ற சதி அமைப்பு - 1967இல் இந்தியாவின் அண்டைய நாடுகளை சதி மூலம் கட்டுபடுத்த உருவாக்கப்பட்டது தான் 'ரா' அமைப்பு. பிரபாகரன் மரணம், கே.பி கைது இவற்றை சதி மூலம் நிறைவேற்ற சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருக்கும் இந்திய உளவுத்துறை தான் 'ரா'
  7. இப்படி ஈழம் பற்றிய தகவல்கள் கொண்ட ஆய்வு புத்தம் தான் "ஈழம்: தேவை ஒரு நேர்மையான மீளாய்வு!. அடுத்து ஈழத்தில் செய்யவேண்டியது என்ன என்பது பற்றியும் விரிவாக ஆராய்கிறது.

ஈழம் குறித்து உணர்வுடன் செயல்பட துடிக்கும் இளைஞர்களுக்கு இந்நூலை பரிந்துரை செய்கிறேன். மேலே குறிப்பிட்டவை எனது புரிதல்களும், சில குறிப்புகளும் தான். முழு விவரத்திற்கு புத்தகத்தை வாசிக்கவும்.

ஈழம் குறித்த ஆய்வு நூல்கள்:
  • ஈழம் - தேவை ஒரு நேர்மையான மீளாய்வு! (விலை ரூ30/-, பக்கங்கள் - 80)
  • ஈழம் - நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் (விலை ரூ25/-, பக்கங்கள் - 64)
  • வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ் தேசியர்களுக்கு மறுப்புரை (விலை ரூ20/-, பக்கங்கள் - 40)


நூல்கள் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்:
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600002

புதிய ஜனநாயகம்:
110, இரண்டாம் தளம்,
63,என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம், சென்னை-600 024

புதிய கலாச்சாரம்:
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, (15வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600083.
Eelam oppurtunism in Tamilnadu
Eelam Emphasizing class struggle


Related Links:

ஈழம் நூல்கள் பற்றிய பதிவுகள்:

தொடர்புடைய கட்டுரைகள்:

Thursday, August 13, 2009

புமாஇமு வேர்ட்பிரஸ் - பெற்றோர்களுக்கான தளம்

பத்து வருடங்களுக்கு முன் சுமார் 30 ஆயிரத்திற்குள் உயர்கல்வியை படிக்க முடிந்தது. இப்போது நம் கண் முன்னாலேயே கல்வி கட்டணங்கள் மள மளவென உயர்த்தப்பட்டு உயர் கல்விக்கு 3 லட்சங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. இந்த அதிவேக கட்டண உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடுத்தர வர்க்கம் திண்டாடுகிறது. இதே போக்கு நீடித்தால் அடுத்த 10, 15 ஆண்டுகளில் உயர்கல்விக்கான செலவுகள் 30, 40 லட்சங்களை தாண்டும் என நிதி ஆலோசகர்கள் நாணயம் விகடனில் சொல்கிறார்கள். அரசின் தனியார்மய, தாராளமய கல்வி கொள்கை & கட்டண உயர்வின் வேகத்தை பார்த்தால், கல்வி செலவுகள் கட்டாயமாக கோடியை தாண்டும்.

போராடி பெற்ற உரிமைகளையும், வாழ்க்கை நிலையையும் தக்க வைத்து கொள்ளாத எந்த சமூகமும் வளர்ச்சியடையாது. மாறாக 2020க்குள் "வல்லரசு" ஆனாலும் அது சீரான வளர்ச்சியாக இருக்காது. ஒரு பக்கம் மட்டுமே வீங்கிய நோயாக இருக்கும். கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கும்.

பெற்றோர்களிடம், எனக்கு என்ன சொத்து வைத்து இருக்கிறாய் என கேட்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால் இதே இளைஞர்களிடமும், இளம் பெற்றோர்களிடம் "ஏம்பா என் தலையில் இவ்வளவு லட்சம் கடனை தலையில் சுமத்தினாய்" என கேட்கும் அவலம் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன. கல்விக்கான உரிமைக்காக போராடுவது நம்முடைய கடமை.

இப்படி அதிகரித்து வரும் கட்டணக் கொள்ளையை எதிர்த்து புமாஇமு தொடர்ந்து போராடி வருகிறது. களத்தில் நிற்கிறது. கல்விக்கான உரிமைக்காக கருத்தாலும் கரத்தாலும் வலு சேர்ப்பது பெற்றோர்களின் கடமை.

RSYF

புமாஇமு கல்வி கொள்ளையர்களை அம்பலப்டுத்தியும், எதிர்த்தும் போராடி வருகிறது. போராட்ட செய்திகளும், கட்டணக் கொள்ளையை திரை கிழிக்கும் செய்திகளையும், கல்வி பற்றிய கட்டுரைகளையும் பதிக்கும் தளம் புமாஇமு வேர்ட்பிரஸ். இது மாணவர்களுக்கான தளம் மட்டுமல்ல. பெற்றோர்களுக்கான தளம்.

கட்டண கல்வி பற்றிய உண்மைகள்:

போராட்டங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

Monday, August 10, 2009

ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்

பிரபல தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் மக்களை சீரழித்து வருகிறது. இந்த பத்திரிக்கைகளில் முக்கால்வாசி இடம் பெறுவது, நடிகைகளின் கிசு கிசுக்கள், கவர்ச்சி படங்கள், பாலியல் தொடர்கள்.

Kumdudam's Cheap advertisement

இணையத்திலும் இளைஞர்களை இழுக்கும் வண்ணம் ஆபாச மார்கட்டிங் செய்து வருகிறது. குமுதம்.காம்-இல் இருந்து வந்த விளம்பரத்தை பாருங்கள். "பொழுது போக்கின் உச்ச கட்டம், இணையத்தில் உறுப்பினராகுங்கள் குதூகலமடையுங்கள்" என சொல்கிறது குமுதம். அதை விளம்பரப்படுத்தப் போடுவதோ ஆபாச படங்கள். ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்.

ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் இப்போது நீலப் பத்திரிக்கைகளாக சீரழிந்து வருகின்றன.

Related Links: