Showing posts with label புதிய ஜனநாயகம். Show all posts
Showing posts with label புதிய ஜனநாயகம். Show all posts

Wednesday, August 6, 2008

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்


மன்மோகன் சிங் தனியார்மய, தாராளமய கொள்கைகளை முழு வீச்சாக செயல்படுத்தி வருகிறார். அனுசக்தி ஒப்பந்தம் என்ற பேரில் இந்திய இறையாண்மையை அடகு வைத்தது மட்டும் அல்லாமல் அதன் இழுப்பிற்கு எல்லாம் வளைந்து கொடுக்கிறார். இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக மாற்றும் இராணுவ ஒப்பந்ததமும் இவரின் சாதனைகளில் அடங்கும். இந்திய விவசாயிகளின் பட்டினி சாவு இவருக்கு பொருட்டல்ல. மாறாக புஷ்ஷின் நட்பிற்காக நாட்டையே அடகு வைக்கிறார். இந்தியாவை முழு அடிமையாக மாற்றுவேன் என துரிதமாக செயல் படுகிறார். அவரது விசுவாசத்தை உள்ளபடியே தீட்டியுள்ள "புதிய ஜனநாயகம்" பத்திரிக்கையின் அட்டை படம்.



Related Links :

Wednesday, May 21, 2008

புதுப்பொலிவுடன் தமிழரங்கம் இணையத்தளம்

தமிழரங்கம் இணையத்தளம் விசாலமான பளிச் தோற்றத்துடன், மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், சமர் பத்திரிக்கைகள் மற்றும் பல ஆய்வுக் கட்டுரைகளும் யூனிகோடு எழுத்துருவாக படியலிடப்பட்டிருப்பது அருமை. நகர்ந்து செல்லும் படங்கள் நம் கவனத்தை கவர்கிறது.

"கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்" என்ற முழக்கத்துடன், புரட்சிகர கட்டுரைகளின் தொகுப்பாக தமிழரங்கம் இணையத்தளம் திகழ்கிறது.



"புதிய உணர்வு, புதிய தளம் - தமிழசர்க்கிள் புதிய வடிவில்"