Tuesday, December 22, 2009

உழைக்கும் வர்க்கத்தின் தோழர் பிறந்தநாள்

தோழர் ஸ்டாலின் அவர்களுடைய 130வது பிறந்த நாள் டிசம்பர் 21 அன்று தமிழகம் முழுவதும் பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் நடந்தது. பாட்டாளிகளின் தோழனாக இருந்து கடைசி மூச்சு வரை பாட்டாளிகளுக்காக உழைத்த ஒரே காரணத்திற்காக எண்ணிலடங்கா வதந்திகளையும், பொய் செய்திகளை மேற்குலகம் உற்பத்தி செய்தது. அந்த பொய் பிரச்சாரங்களையே அறிவுஜீவிகளும் நம்பி வருகின்றனர். அதை முறியடிப்பது மாபெரும் பணியாகும். தமிழகத்தில் தோழர் பிறந்த நாளையொட்டி பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் மூலம் தோழர் ஸ்டாலினை உழைக்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்தது மகஇக-வும் அதன் தோழமை அமைப்புகளும்.
Comrade Stalin Birthday Remembrance
 • தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!
 • தோழர் லெனின் ஸ்டாலின் வழி நடப்போம்!
 • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
 • முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

Related Links:

Monday, December 14, 2009

இந்தியாவில் வறுமை வளர்கிறது

Poverty
நாடு முன்னேறுது, நாடு முன்னேறுது என திரும்ப திரும்ப விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பர உத்தியால் நாடு முன்னேறிவிட்டது என மக்களை நம்பும்படியான முயற்சி யில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது ஆளும் வர்க்கங்கள். என்னத்தான் வறுமையை மறைக்க முயன்றாலும், உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

30 கோடி பேர் வறுமையில் இருப்பதாகவும், நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்றும் அரசு ஆய்வு சொல்கிறது. மேலும் விவரங்களுக்கு 11 டிசம்பர் வெளியான தினகரன் தலையங்கத்தை பார்க்கவும்.


தினகரன் தலையங்கம்:
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது. கடந்த பல ஆண்டுகளாக இது தொடர்கிறது. வெளிநாடுகளும் உலக வங்கியும் அதற்காக இந்திய அரசை பாராட்டுகின்றன. ஆனால், இந்திய மக்களின் பொருளாதாரம் முன்னேறவில்லை. ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. மூன்றில் ஒரு இந்தியன் வறுமையில் வாடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது அதிர்ச்சியான செய்தி. 2004 ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் அரசு ஓர் ஆய்வு நடத்தியது. 30 கோடி பேர் வறுமையில் இருப்பதாக அதில் தெரியவந்தது. ஜனத்தொகையில் அது 27+ சதவீதம். அதற்கு பத்தாண்டுகள் முன்பு 36 சதவீதமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியால் வறுமை குறைவதாக அந்த ஆய்வு சொன்னது. பலர் கை தட்டினார்கள். சிலர் தட்டவில்லை. வறுமை ஒழிவதாக தெரியவில்லை என்றனர். நாடு முன்னேறும்போது மக்கள் வாழ்க்கைத்தரம் உயராமல் போகுமா?

சந்தேகத்தை தீர்க்க இன்னொரு ஆய்வு நடத்த அரசு தீர்மானித்தது. சுரேஷ் டெண்டுல்கர் என்பவரிடம் பொறுப்பு தரப்பட்டது. சச்சினுக்கு அவர் உறவா என்பது தெரியாது. வறுமையை அளவிட புது வழி காட்டினார் அவர். உடலுக்கு 2250 கலோரி சத்து தரக்கூடிய உணவுகளை சாப்பிடுபவர் ஏழை அல்ல என்பது அதுவரை பின்பற்றப்பட்ட அளவுகோல். சாப்பாடு தவிரவும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகள் உண்டு. உடை, எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து போன்ற தேவைகளை சமாளிக்கும் வகையில் வருமானம் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தார். அதில்தான் வறுமையின் வளர்ச்சி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். இவர்களில் நகர்ப்புற ஏழைகள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள். நகரவாசிகளில் 25+ சதவீதம் ஏழைகள். மாதம் 579 ரூபாய் செலவிடுகின்றனர். கிராம மக்களில் ஏழைகள் 42 சதவீதம். ஒரிசா, பீகார் படுமோசம். டெல்லி, காஷ்மீர், நாகாலாந்து வறுமை குறைந்த மாநிலங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் செல்வம் உற்பத்தியாகிறது. ஆனால் செல்வந்தர்களிடம் தேங்கிவிடுகிறது. சுற்றியிருப்பவர்களுக்கு எட்டுவதில்லை. வளமையை பரவலாக்காமல் வறுமையை ஒழிக்க முடியாது. அரசுதான் அதற்கு வழி காண வேண்டும்.

Related Links:

Monday, November 9, 2009

பாசிச இட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின்

"பாசிச இட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின்" என்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி-யின் பிரசுரம் தோழர் ஸ்டாலின் பாசிச இட்லரை வென்று உலகை காத்த வரலாற்றை சுருக்கமாக, தெளிவாக சித்தரிக்கிறது.
People Friend Stalin

 1. இட்லரின் பாசிசக் கனவு
 2. பாசிச இட்லரின் காட்டாட்சி!
 3. சோவியத் ரசியாவையும் - ஸ்டாலினையும் அழிக்க நினைத்த வல்லூறுகள்
 4. யார் இந்த ஸ்டாலின்?
 5. எதிரிகளின் சதியும், அதை முறியடித்த வரலாறும்!
 6. இட்லரின் கோரமுகம்!
 7. இட்லரின் கனவு தகர்க்கப்பட்டது!
 8. தோல்வியை முறியடித்த ஸ்டாலின்!
 9. செம்படையின் எழுச்சியும் இட்லரின் வீழ்ச்சியும்!
 10. ஸ்டாலினுடைய சூளுரையும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் செங்கொடியும்
 11. இரண்டாம் உலகப் போரை முறியடித்தப் பெருமை தோழர் ஸ்டாலின் தலைமயிலான செம்படைக்கே!

நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி


"ஸ்டாலின் சகாப்தம்" - குறும்படம்
Stalin - Tamil CD
வெளியீடு - புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

விலை - ரூ 70

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 - 2841 2367


Related Links:

Wednesday, August 19, 2009

ஈழம் - தேவை ஒரு நேர்மையான மீளாய்வு!

Eelam Analysis ஈழத்தில் போர் இன்னும் முடியவில்லை. இந்த போர் ஈழ மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரை தொடரும். 1983 யூலை இனப் படுகொலையின் போது தமிழ்நாட்டில் மாபெரும் எழுச்சி இருந்தது. ஆனால் 2009 ஈழப் இனப் படுகொலையின் போது தமிழ்நாடு காணாமுகமாகவே இருந்தது. முத்துகுமரன் தியாகத்திற்கு பின் தயக்கத்துடன் வீரியம் குறைந்த எழுச்சி மாணவர்கள் இளைஞர்களிடையே இருந்தது.

விடுதலை புலிகள் தலைமையை ஒழித்த பின்னர் ஈழ இனப் படுகொலைக்கு எதிர்ப்பு அணி இல்லாமல் உள்ளது. இதை சாதகமாக கொண்டு ஆயிரகணக்கில் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள். மக்கள் திறந்த வெளி சிறைச்சாலைகளில் வாடுகிறார்கள். இந்த சூழலில் பல இளைஞர்கள் (தமிழ்நாடு, புலம்பெயர், ஈழம்) ஈழ விடுதலை போரை பற்றியும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தும், விவாதித்தும் வருகின்றனர்.

ஈழம் மக்களுக்கு ஆதரவாக குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது புதிய ஜனநாயகம் இதழ். குறிப்பாக ராஜீவ் கொலையானது, படுகொலை செய்யப்பட்ட, சீரழிக்கப்பட்ட ஈழ மக்களின் நியாயமான தண்டனை என தமிழகத்தில் எடுத்துரைத்தது. விடுதலைப் புலிகளே ராஜீவ் கொலையை மறுத்து வந்த நிலையில் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்து, நியாயத்தை எடுத்து கூறியதற்காக இந்திய அரசால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள் புதிய ஜனநாயகம் பத்திரிக்கையும், மகஇக அமைப்பினரும் தான்.

புதிய ஜனநாயகம் இதழ் ஈழம் பற்றி மீளாய்வு செய்துள்ளது. ஈழம் குறித்து ஆய்வு செய்யும், போராட முனையும், இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவற்றுள சில குறிப்புகள்,

 1. ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகளே. இதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகள் உள்ளன. சிங்கள இனம் இந்தியாவின் ஒரிசா, வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள்.
 2. தமிழர்களுக்கு எதிரான இன கலவரங்கள் குறித்த விவரங்கள் (1856, 9158, 1972, 1977, 1983)
 3. ஈழப் போராட்டங்களும் இலங்கை அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்கள் (1956 டட்லி சேனநாயகா - செல்வா ஒப்பந்தம், 1989 திம்பு பேச்சு வார்த்தை, 1995 சந்திரகா குமாரதுங்கா ஒப்பந்தம், ரணில் விக்ரமசிங்கே 2002 போர் நிறுத்தம்)
 4. இலங்கையில் உள்ள இனங்கள் (சிங்களம், ஈழத்தமிழர்கள், மலையகத்தமிழர்கள், முசுலீம்கள்). ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள். அவர்களும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்கள் தனி தனி இனமே. 1815க்கு பின் தென் தமிழ்நாடு மாவட்டங்களில் இருந்து தோட்டத்தொழி களுக்காக குடியமர்த்தப்பட்டவர்கள் மலையக தமிழ் மக்கள். குறிப்பாக இலங்கை சுதந்தரத்திற்கு பின் ஓட்டுரிமை மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். மடகாஸ்கரில் இருந்து வந்து குரியேரிய மூர் இனத்தை சேர்ந்த முசுலீம்கள். ஆனால் தமிழ் கற்று தேர்ந்து தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர்.
 5. ஈழம் - கட்சிகள்
  LTTE, TELO, EROS, EPRLF, PLOTE, NLFT போன்றவை ஈழம் கட்சிகளாகும். இவற்றுள் LTTE, TELO, EROS, EPRLF, PLOTE ஈழம் கட்சிகளுக்கு எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் 'ரா'வால் நிதி உதவியும், ராணுவப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. அது ஈழ விடுதலைக்காக அல்ல. இலங்கையை கட்டுக்குள் வைத்து கொள்ளவதற்காக செய்தது.
 6. 'ரா' (RAW) என்ற சதி அமைப்பு - 1967இல் இந்தியாவின் அண்டைய நாடுகளை சதி மூலம் கட்டுபடுத்த உருவாக்கப்பட்டது தான் 'ரா' அமைப்பு. பிரபாகரன் மரணம், கே.பி கைது இவற்றை சதி மூலம் நிறைவேற்ற சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருக்கும் இந்திய உளவுத்துறை தான் 'ரா'
 7. இப்படி ஈழம் பற்றிய தகவல்கள் கொண்ட ஆய்வு புத்தம் தான் "ஈழம்: தேவை ஒரு நேர்மையான மீளாய்வு!. அடுத்து ஈழத்தில் செய்யவேண்டியது என்ன என்பது பற்றியும் விரிவாக ஆராய்கிறது.

ஈழம் குறித்து உணர்வுடன் செயல்பட துடிக்கும் இளைஞர்களுக்கு இந்நூலை பரிந்துரை செய்கிறேன். மேலே குறிப்பிட்டவை எனது புரிதல்களும், சில குறிப்புகளும் தான். முழு விவரத்திற்கு புத்தகத்தை வாசிக்கவும்.

ஈழம் குறித்த ஆய்வு நூல்கள்:
 • ஈழம் - தேவை ஒரு நேர்மையான மீளாய்வு! (விலை ரூ30/-, பக்கங்கள் - 80)
 • ஈழம் - நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் (விலை ரூ25/-, பக்கங்கள் - 64)
 • வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ் தேசியர்களுக்கு மறுப்புரை (விலை ரூ20/-, பக்கங்கள் - 40)


நூல்கள் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்:
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600002

புதிய ஜனநாயகம்:
110, இரண்டாம் தளம்,
63,என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம், சென்னை-600 024

புதிய கலாச்சாரம்:
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, (15வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600083.
Eelam oppurtunism in Tamilnadu
Eelam Emphasizing class struggle


Related Links:

ஈழம் நூல்கள் பற்றிய பதிவுகள்:

தொடர்புடைய கட்டுரைகள்:

Thursday, August 13, 2009

புமாஇமு வேர்ட்பிரஸ் - பெற்றோர்களுக்கான தளம்

பத்து வருடங்களுக்கு முன் சுமார் 30 ஆயிரத்திற்குள் உயர்கல்வியை படிக்க முடிந்தது. இப்போது நம் கண் முன்னாலேயே கல்வி கட்டணங்கள் மள மளவென உயர்த்தப்பட்டு உயர் கல்விக்கு 3 லட்சங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. இந்த அதிவேக கட்டண உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடுத்தர வர்க்கம் திண்டாடுகிறது. இதே போக்கு நீடித்தால் அடுத்த 10, 15 ஆண்டுகளில் உயர்கல்விக்கான செலவுகள் 30, 40 லட்சங்களை தாண்டும் என நிதி ஆலோசகர்கள் நாணயம் விகடனில் சொல்கிறார்கள். அரசின் தனியார்மய, தாராளமய கல்வி கொள்கை & கட்டண உயர்வின் வேகத்தை பார்த்தால், கல்வி செலவுகள் கட்டாயமாக கோடியை தாண்டும்.

போராடி பெற்ற உரிமைகளையும், வாழ்க்கை நிலையையும் தக்க வைத்து கொள்ளாத எந்த சமூகமும் வளர்ச்சியடையாது. மாறாக 2020க்குள் "வல்லரசு" ஆனாலும் அது சீரான வளர்ச்சியாக இருக்காது. ஒரு பக்கம் மட்டுமே வீங்கிய நோயாக இருக்கும். கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கும்.

பெற்றோர்களிடம், எனக்கு என்ன சொத்து வைத்து இருக்கிறாய் என கேட்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால் இதே இளைஞர்களிடமும், இளம் பெற்றோர்களிடம் "ஏம்பா என் தலையில் இவ்வளவு லட்சம் கடனை தலையில் சுமத்தினாய்" என கேட்கும் அவலம் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன. கல்விக்கான உரிமைக்காக போராடுவது நம்முடைய கடமை.

இப்படி அதிகரித்து வரும் கட்டணக் கொள்ளையை எதிர்த்து புமாஇமு தொடர்ந்து போராடி வருகிறது. களத்தில் நிற்கிறது. கல்விக்கான உரிமைக்காக கருத்தாலும் கரத்தாலும் வலு சேர்ப்பது பெற்றோர்களின் கடமை.

RSYF

புமாஇமு கல்வி கொள்ளையர்களை அம்பலப்டுத்தியும், எதிர்த்தும் போராடி வருகிறது. போராட்ட செய்திகளும், கட்டணக் கொள்ளையை திரை கிழிக்கும் செய்திகளையும், கல்வி பற்றிய கட்டுரைகளையும் பதிக்கும் தளம் புமாஇமு வேர்ட்பிரஸ். இது மாணவர்களுக்கான தளம் மட்டுமல்ல. பெற்றோர்களுக்கான தளம்.

கட்டண கல்வி பற்றிய உண்மைகள்:

போராட்டங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

Monday, August 10, 2009

ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்

பிரபல தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் மக்களை சீரழித்து வருகிறது. இந்த பத்திரிக்கைகளில் முக்கால்வாசி இடம் பெறுவது, நடிகைகளின் கிசு கிசுக்கள், கவர்ச்சி படங்கள், பாலியல் தொடர்கள்.

Kumdudam's Cheap advertisement

இணையத்திலும் இளைஞர்களை இழுக்கும் வண்ணம் ஆபாச மார்கட்டிங் செய்து வருகிறது. குமுதம்.காம்-இல் இருந்து வந்த விளம்பரத்தை பாருங்கள். "பொழுது போக்கின் உச்ச கட்டம், இணையத்தில் உறுப்பினராகுங்கள் குதூகலமடையுங்கள்" என சொல்கிறது குமுதம். அதை விளம்பரப்படுத்தப் போடுவதோ ஆபாச படங்கள். ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்.

ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் இப்போது நீலப் பத்திரிக்கைகளாக சீரழிந்து வருகின்றன.

Related Links:

Wednesday, August 5, 2009

சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதியின் காம லீலைகள்

Criminal Senior Sankarachari - Jayendra Saraswathi Swamigal வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல் களியாட்டங்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

தண்டத்தை போட்டு விட்டு ஓட்டம்:

1986 இல் ஜெயெந்திரன் தண்டத்தை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்து கொண்டு ஓடினார். ஒரு மாததிற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடி போன இந்த ஓடுகாலி சங்கராசாரியை , சிபிஐ கொண்டு தேடி கண்டு பிடித்தனர். பின்னர் தலைகாவிரிக்கு போய் அந்த பெண்ணை பிரித்து வந்த தகவல்கள மிகவும் ஆச்சரியமானவை. அந்த கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இது தான் இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் ரகசியம்.

பெண் எழுத்தாளரை விருப்பத்துக்கு இணங்கும்படி வற்புறுத்திய ஜெயந்திரன்:

Writer Anuradha Ramanan - Exposed Sankarachari Jayendra Saraswathi's Threat பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அணுராதா ரமணன் கொடுத்த பேட்டி:
1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாறிபோட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள்.

சொர்ணமால்யாவுடன் குஜால்:

தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி.
Criminal Sankarachari Vijayendra Saraswathi Swamigal "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கர மடத்துடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

Actress Swarnamalya - Who had link with Junior Sankarachari Vijayendra Saraswathi Swamigal சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

Sankarachari & Jayalalitha

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:
லீலாவுடன் அரட்டை:

நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர்விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும்நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின்அறிமுகம் கிடைத்தது.

சரஸ்வதியிடம் தகாத செயல்:

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தகல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்கவைக்கப்பட்டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்துசரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில்ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

பிரேமா:

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி:

மருத்துவமனையின் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

புளு பிலிம்:

இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரைஇதெல்லாம் நடக்கும்.

2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

அரைகுறை ஆடையுடன் இளம்பெண்:

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போலநடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

Sankarachari & Vajpayee

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரனின் உண்மையான முகம் தெரியும்.
 • சங்கராச்சாரியை மக்களிடம் அம்பலபடுத்துவோம்!
 • சங்கர மடம் & நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த நிர்பந்த்திப்போம்!
 • பார்ப்பனீயத்தை திரை கிழிப்போம்!

நன்றி: தட்ஸ்தமிழ், தினபூமி

செய்திகள்:

கட்டுரைகள் & பதிவுகள்:

Sunday, July 26, 2009

தமிழ் பெயர்கள் - இனியவை இருநூற்றி ஐம்பது

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் இடுவது தமிழர்களிடையே அருகி வருகிறது. தமிழ் பெயர்கள் புதுமையாக இல்லை, சிறியதாக இல்லை என அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லி கொள்கிறார்கள். மேலும் ஜோதிடம், நியூமராலஜி என மூடநம்பிக்கையால் சமஸ்கிருத பெயர்களையே வைக்கின்றனர். பெரும்பாலும் சோதிடர்கள், நியூமராலஜிஸ்ட் சொல்வதை கேட்டு ஹ, ஷ, ஸ, ர, ஜ போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் படியான பெயர்களையோ அல்லது புதுமையான பெயர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருத பெயர்களையே பெரும்பாலும் வைக்கின்றனர். சில நண்பர்கள் தமிழ் பெயர் வைப்பதே தனக்கு பிடிக்கும் என கூறி கொண்டாலும், நடைமுறையில் சோதிடப்படியும் நியூமராலஜி படியும் சமஸ்கிருதப் பெயர்களையே வைக்கின்றனர்.

கொள்கை ரீதியாகவோ அல்லது தனக்கு பிடித்த தலைவர்களின் பெயர்களை சுபாஷ், பகத்சிங், ஸ்டாலின், சித்தார்த்தன், கௌதமன் என வைப்பதும் வழக்கம். அது வரவேற்கதக்கது. மற்றபடி வெகு சிலரே தமிழ் பெயர்களை வைக்கின்றனர். இணையத்தில் சில தளங்களும் தூய தமிழ் பெயர்களை பட்டியலிட்டுள்ளன. குறிப்பாக விடுதலை புலிகளின் நிதித்துறை தளத்தில் 46000 தமிழ் பெயர்கள் உள்ளன. சில தமிழ் அறிஞர்களும் தமிழ் பெயர்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். தமிழ் எங்கள் உயிர் என முழங்கும் தமிழக அரசும், திராவிட கட்சிகளும் தமிழ் பெயர்களை தொகுத்து மக்களிடையே பிரபலமாக்கவில்லை. இது வெட்ககேடான நிலைமை.

நிதித்துறை தளத்தில் இருந்தும் மற்ற தமிழ் வலைதளங்களில் இருந்தும் எனக்கு பிடித்த புதுமையான, சிறிய, இனிமையான 250 தமிழ் பெயர்களை தொகுத்துள்ளேன். சில தமிழ் பதிவர்கள் மற்றும் பதிவு வாசகர்களின் பெயர்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். (குழலி, தமிழினி, தமிழ்நிலா, எழில்நிலா திகழ்மிளிர், அதியமான், தமிழ்மணி, அமிழ்தினி, மதிமாறன், வினவு, வினை).

தமிழ் பதிவர்களே, வாசகர்களே, சோதிடம், நியூமராலஜி போன்ற மூடநம்பிக்கைகளை ஒதுக்கி விடுங்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர் வைப்பது மட்டுமல்லாமல் தங்கள் உறவினர்கள், நண்பர்களையும் தமிழ் பெயர்களை வைக்க உதவுங்கள்.

பெண் பெயர்கள்:
 1. அமிழ்தினி
 2. அமுதா
 3. அமுதினி
 4. அருள்மணி
 5. அருள்மதி
 6. அருண்மதி
 7. அருண்மொழி
 8. அன்பரசி
 9. இயலினி
 10. இயலிசை
 11. இன்பநிலா
 12. இனியா
 13. எழில்
 14. எழில்நிலா
 15. எழிலினி
 16. எழினி
 17. ஓவியா
 18. கண்மணி
 19. கணையாழி
 20. கயல்விழி
 21. கலையரசி
 22. கவின்மலர்
 23. கனிமொழி
 24. காவேரி
 25. காவியா
 26. குழலி
 27. குழலினி
 28. சந்தனா
 29. சமர்மதி
 30. சமர்விழி
 31. சாதனா
 32. சிந்தனா
 33. சிறுவாணி
 34. சீர்குழலி
 35. சீர்மதி
 36. சுடர்மணி
 37. சுடர்மதி
 38. சுடர்விழி
 39. செந்தமிழரசி
 40. செந்தாமரை
 41. செம்மலர்
 42. செல்வமணி
 43. செல்வமதி
 44. செல்வமலர்
 45. செல்வி
 46. தமிழ்நிலா
 47. தமிழரசி
 48. தமிழினி
 49. தாமரை
 50. தாமிரா
 51. தாரணி
 52. திகழ்கா
 53. திகழ்மிளிர்
 54. திகழினி
 55. திருநிலா
 56. திருமலர்
 57. துளசி
 58. தேன்கனி
 59. தேன்மதி
 60. தேன்மலர்
 61. தேன்மொழி
 62. நறுங்கா
 63. நன்னிலா
 64. நிகரிலா
 65. நித்திலா
 66. நிலாமதி
 67. நிறைமதி
 68. நீலமணி
 69. நீலவிழி
 70. நேர்நிலா
 71. பனிமலர்
 72. பனிமுகில்
 73. பிறைமதி
 74. புகழினி
 75. புதியா
 76. பூவிழி
 77. பூங்குழலி
 78. பொழிலினி
 79. பொன்மலர்
 80. பொன்னி
 81. பொன்னிலா
 82. மகிழ்
 83. மகிழரசி
 84. மணிமலர்
 85. மணிமேகலை
 86. மணிவிழி
 87. மதி
 88. மதிநிலா
 89. மதியரசி
 90. மயிலினி
 91. மருதா
 92. மல்லிகா
 93. மலர்
 94. மலர்நிலா
 95. மலர்மதி
 96. மறைமலர்
 97. மான்விழி
 98. மிருதுளா
 99. மின்மணி
 100. மின்மலர்
 101. மின்முகில்
 102. மின்விழி
 103. முகிலா
 104. முகிலரசி
 105. முகிலினி
 106. முத்தழகு
 107. முத்துமதி
 108. மென்கா
 109. மென்பனி
 110. மென்மதி
 111. மென்மலர்
 112. யாழ்நிலா
 113. யாழினி
 114. வடிவரசி
 115. வளர்மதி
 116. வான்மதி
 117. வான்முகில்
 118. வானரசி
 119. வானதி
 120. விண்ணரசி
 121. விண்மணி
 122. விண்மதி
 123. விண்மலர்
 124. வினைமதி
 125. வினையரசி
 126. வீரமதி
 127. வெண்ணிலா
 128. வெண்பனி
 129. வெண்மணி
 130. வெண்மதி
 131. வெம்பனி
 132. வேல்விழி
 133. வேலரசி
 134. வைகறை
 135. வைகை

ஆண் பெயர்கள்:
 1. அகரன்
 2. அதியமான்
 3. அமர்
 4. அமுதன்
 5. அரசன்
 6. அரசு
 7. அருள்
 8. அருண்
 9. அருண்மணி
 10. அருண்மதி
 11. அன்பு
 12. அன்பரசு
 13. அன்பழகன்
 14. அன்புமணி
 15. இளங்கதிர்
 16. இளங்குமரன்
 17. இளங்கோ
 18. இளஞ்செழியன்
 19. இளம்பரிதி
 20. இளமதி
 21. இளவரசு
 22. இளவேனில்
 23. இறையன்பு
 24. இனியன்
 25. இன்பா
 26. உதியன்
 27. உதயா
 28. எல்லாளன்
 29. எழில்
 30. எழிலன்
 31. எழில்வேலன்
 32. கண்ணன்
 33. கதிர்
 34. கதிர்நிலவன்
 35. கதிரவன்
 36. கலைச்செல்வன்
 37. கலைவாணன்
 38. கலைவேலன்
 39. கவின்
 40. கவின்செல்வா
 41. கனல்
 42. கனல்வண்ணன்
 43. கனலரசன்
 44. கனல்கண்ணன்
 45. கார்முகில்
 46. குமணன்
 47. கோவன்
 48. சந்தனன்
 49. சந்தனவேலன்
 50. சமர்
 51. சமர்வேல்
 52. சமரன்
 53. சிலம்பரசன்
 54. சீர்மணி
 55. சீர்மதி
 56. சீர்மருதன்
 57. சீராளன்
 58. சுடர்
 59. சுடர்வேல்
 60. செங்கதிர்
 61. செந்தமிழ்
 62. செந்தில்
 63. செங்கோ
 64. செந்தாமரை
 65. செம்பரிதி
 66. செல்வம்
 67. செழியன்
 68. சேந்தன்
 69. சொற்கோ
 70. சோலை
 71. தங்கவேல்
 72. தமிழ்மணி
 73. தமிழன்பன்
 74. திருமாறன்
 75. திருமாவளவன்
 76. துரைமருகன்
 77. துரைவேலன்
 78. நக்கீரன்
 79. நகைமுகன்
 80. நந்தன்
 81. நவிலன்
 82. நன்மாறன்
 83. நாவரசு
 84. நிலவன்
 85. நித்திலன்
 86. நெடுமாறன்
 87. பரிதி
 88. பாரி
 89. புகழேந்தி
 90. பொற்கோ
 91. மகிழன்
 92. மகிழ்நன்
 93. மணிமாறன்
 94. மணியரசன்
 95. மணிவண்ணன்
 96. மணிமுகில்
 97. மதி
 98. மதியரசன்
 99. மதிமாறன்
 100. மதிவாணன்
 101. மருது
 102. மருதன்
 103. மருதையன்
 104. மலரவன்
 105. மாறன்
 106. முகில்
 107. முகிலன்
 108. முத்துக்குமரன்
 109. முருகவேல்
 110. முருகன்
 111. வடிவேல்
 112. வினவு
 113. வினை
 114. வெற்றி
 115. வெற்றிவேல்

தமிழ் பெயர்கள்:
தமிழ் பெயர் - சில கட்டுரைகள் & விவாதங்கள்:

Thursday, July 23, 2009

அண்ணா பல்கலைக்கழகம் - தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுகிறது

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அம்பலபடுத்தியும், எதிர்த்தும் புமாஇமு தொடர்ச்சியாக போராடி வருகிறது. கல்வியை முழுமையாக தனியார்மயப் படுத்தி கல்வியை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கி வருகிறது அரசு. கல்வி பெறுவது நமது உரிமை. கல்வி கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். கல்வியை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசை நிர்பந்த்திக்க மாணவர்கள் ஓர் வர்க்கமாய் அணி திரள அழைக்கிறது புமாஇமு. அண்ணா பல்கலைக்கழகம் தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுவதை கண்டித்து புமாஇமு-வின் சுவரொட்டி.

Against Anna_University acting as private colleges agent - RSYF Poster

தமிழக அரசே!
 • ஐவர் குழுவின் அதிரடி சோதனை என்று நாடகமாடாதே!
 • கல்லூரி முதல்வரின் வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு மாதா பொறியியல் கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
 • கட்டணக் கொள்ளையடித்தும் - இன்டர்னல் மார்க்கை ஜீரோ போட்டும் மாணவர்களை மிரட்டி நிரந்தர அடிமையாக்கும் பனப்பாக்கம் கிருஷ்ணா போன்ற கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு!

மாணவர்களே!
 • எதிர்காலம் என்று கொத்தடிமையாக இருப்பது அவமானம்!
 • தனியார் கொள்ளையை ஒழிக்க மாணவர்கள் ஒரு வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதே தன்மானம்!

Related Links:

Thursday, July 16, 2009

முதலாமாண்டு நிறைவு - வினவுக்கு வாழ்த்துக்கள்

vinavu first anniversary
 • ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், ஹிட்ஸ்கள்....
 • 6800க்கும் அதிகமான மறுமொழிகள், தொடரும் விவாதங்கள்.....
 • 140க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த தமிழ் மக்கள்....

மொக்கை பதிவுகள் ஆயிரம் இருக்க கருத்து பதிவுகளையும் தமிழர்கள் விவாதிக்க தயாரகவே உள்ளனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களின் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Sunday, July 12, 2009

சொர்க்கபுரி அமெரிக்கா-கடுங்குளிரில் 35 லட்சம் வீடற்றோர்- முதலாளித்துவ பயங்கரவாதம்

"If a free society cannot help the many who are poor,
it cannot save the few who are rich"
- John F. Kennedy

கொட்டும் பனியிலும், கடுங்குளிரிலும் வீடற்ற ஏழைகளாக துரத்தபட்டுள்ளனர் அமெரிக்க மக்கள். அட்டைப்பெட்டிக்குள்ளும், டென்ட்டு கொட்டகையிலும், கார்களிலும், தெரு ஓரங்களிலும், தெருவோர இருக்கைகளிலும், வீடற்றோர் முகாம்களிலும் இரவை கழிக்கின்றனர். அமெரிக்க பெயில்-அவுட் என்ற பெயரில் சூதாடிகளுக்கு சுமார் 4 கோடி கோடி ரூபாய்க்கு மேல் (8டிரில்லியன்$) மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாரி வழங்கியுள்ளனர். நாள்தோறும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றது. வீடற்ற மக்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.

நாசகர நிதிமூலதன சூதாடிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியால் வீடிழந்து, பொருள் இழந்து, பணம் இழந்து, தன் உறவுகளை இழந்தும் பாதிக்கபடுகின்றனர். தன்னுடைய பைபிளையும் இழந்து, அடுத்த வேளை உணவுக்காக, உயிரை காப்பதற்காக பிச்சை எடுத்து வேலை தேட முயற்சிக்கும் படம் நெஞ்சை அறுக்கிறது.

அதி-தாராளமய முதலாளித்துவ கொள்கைகளால் ஒவ்வொரு பொருளாதார வீழ்ச்சியிலும் கீழ்த்தட்டு மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அமேரிக்க நடுத்தர வர்க்கத்தினரையே வீட்டை விட்டு துரத்துகிறது முதலாளித்துவ பயங்கரவாதம். அமெரிக்காவில் பொய்த்து போன அதி-தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை பின்பற்றுமாறு உலகவங்கி, சர்வதேச நிதியம், G8 நாடுகள் என எல்லா பணமுதலை அமைப்புகளும் நிர்பந்திக்கின்றன. நம்நாட்டு ஓட்டு கட்சிகளும் அதை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றி வருகின்றனர்.

ஏற்கனவே நம்நாட்டில் வீடற்றோர் எண்ணிக்கை ஏராளம். நம்மிடம் இருப்பதோ ஓலை குடிசைகள். அதையும் பிடுங்க பார்க்கிறார்கள். விழித்து கொள்வோம். அமெரிக்க அடிமை அரசியல் ஒட்டுண்ணிகளை அம்பலபடுத்துவோம். போராடுவோம்.

அமெரிக்க வீடற்றோரின் நெஞ்சை உருக்கும் சிலப்படங்கள் கீழே.


Related Links: