Monday, August 10, 2009

ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்

பிரபல தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் மக்களை சீரழித்து வருகிறது. இந்த பத்திரிக்கைகளில் முக்கால்வாசி இடம் பெறுவது, நடிகைகளின் கிசு கிசுக்கள், கவர்ச்சி படங்கள், பாலியல் தொடர்கள்.

Kumdudam's Cheap advertisement

இணையத்திலும் இளைஞர்களை இழுக்கும் வண்ணம் ஆபாச மார்கட்டிங் செய்து வருகிறது. குமுதம்.காம்-இல் இருந்து வந்த விளம்பரத்தை பாருங்கள். "பொழுது போக்கின் உச்ச கட்டம், இணையத்தில் உறுப்பினராகுங்கள் குதூகலமடையுங்கள்" என சொல்கிறது குமுதம். அதை விளம்பரப்படுத்தப் போடுவதோ ஆபாச படங்கள். ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்.

ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் இப்போது நீலப் பத்திரிக்கைகளாக சீரழிந்து வருகின்றன.

Related Links:

9 comments:

யுவகிருஷ்ணா said...

படம் சூப்பர் :-)

அவ்வப்போது இதுபோன்ற படத்தோடு கூடிய பதிவுகளை அதிகமாக பதியுங்கள்.

kalagam said...

யுவ கிருஷ்ணாவுக்கு நக்கல் ரொம்ப அதிகமாயிடுச்சு,

இது போன்ற ஆபாச படங்கள் அவர் மிகவும் விரும்புவார், மற்றவர்களையும் விரும்பச்சொல்லுவார் போலிருக்கிறது, சும்மா பொழுது போகவில்லையென்றும் செரிக்காமல் எழுது வோருக்கு தோன்று யோசனைதா யுவகிருஷ்ணாவுக்கும் வந்திருக்கிறது

கலகம்

kalagam said...

யுவ கிருஷ்ணாவுக்கு நக்கல் ரொம்ப அதிகமாயிடுச்சு,

இது போன்ற ஆபாச படங்கள் அவர் மிகவும் விரும்புவார், மற்றவர்களையும் விரும்பச்சொல்லுவார் போலிருக்கிறது, சும்மா பொழுது போகவில்லையென்றும் செரிக்காமல் எழுது வோருக்கு தோன்றும் யோசனைதான் யுவகிருஷ்ணாவுக்கும் வந்திருக்கிறது

கலகம்

King... said...

என்னாச்சு?

Indy said...

Blogger யுவகிருஷ்ணா said...

படம் சூப்பர் :-)

அவ்வப்போது இதுபோன்ற படத்தோடு கூடிய பதிவுகளை அதிகமாக பதியுங்கள்.


--
அப்போ தானே அதிக ஹிட்ஸ் கிடைக்கும்.
எல்லாம் ஒரு வியாபாரம் தான்.
நான் குமுதத்தை விட வினவை தான் அதிகம் படிக்கிறேன்.
அதில் வரும் உணர்ச்சியை தூண்டும் "சிறப்பு" கட்டுரைகள் சூப்பர்.

நான் said...

லின்க் கொடுத்ததற்கு நன்றி...

Anonymous said...

அப்போ தானே அதிக ஹிட்ஸ் கிடைக்கும்.
எல்லாம் ஒரு வியாபாரம் தான்.
நான் குமுதத்தை விட வினவை தான் அதிகம் படிக்கிறேன்.
அதில் வரும் உணர்ச்சியை தூண்டும் "சிறப்பு" கட்டுரைகள் சூப்பர்.

வழிமொழிகிறேன்.

முரளி

Anonymous said...

லக்கியின் வஞ்ச புகழ்ச்சி புரிகிறது.

இந்த மஞ்சள் பத்திரிக்கைகள் நைசாக வீட்டிற்குள் ஆபாசத்தை அறிமுகப்படுத்துகிறது.

Anonymous said...

முரளி, Indy,

வினவின் கட்டுரைகள் சமூக பிணிகளை சுட்டி காட்டி, சமூக முன்னேற்றத்திற்காக போராட அழைக்கும். தங்களுக்கு வினவு கட்டுரைகள் படித்து கிக் ஏறுது என்றால் ஏதாவது கோளாறாக இருக்கலாம். பார்த்து கொள்ளுங்கள்.