Monday, December 29, 2008

இந்தியா திவாலை நோக்கி - இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

அமெரிக்காவின் கடன் சுமையை மூன்றாம் உலக நாடுகளுக்கு (ஆசியா, ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா) ஏற்றுமதி செய்கிறது. அதை கைக்கூலி, அடிமைகளான மன்மோகன் - சோனியா கும்பல் இந்தியாவில் அமுல்படுத்துகிறது. அதிகப்படியான, வரைமுறையற்ற தாரளாமயம், தனியார்மயம் ஆகியவற்றால் பன்னாட்டு நிறுவனங்கள் திவால் ஆகின. ஏற்கனவே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகளால் இந்தியா சூறையாடப்பட்டு வருகிறது. இப்போது இந்திய மக்களின் சேமிப்புகளான PF, இன்சுரன்சு அகியவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளி கொடுக்கப்படுகிறது.

இன்சுரன்சு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு அம்பலபடுத்தும் புஜதொமு-வின் சுவரொட்டி பின்வருமாறு.

Increasing FDI in Insurance by Manmohan-Sonia - Poster by NDLF

இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!
மன்மோகன் - சோனியா கும்பலின் அந்நிய கைக்கூலித்தனம்!

 • உலகம் முழுவதும் பன்னாட்டு இன்சூரன்சு நிறுவனங்கள் திவாலாகுது அவர்களுக்கு உயிர் கொடுக்க மன்மோகன் அரசு இந்தியாவில் கதவை திறக்குது!
 • எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க துடிக்குது!
 • இந்திய மக்களின் சேமிப்பை பன்னாட்டு முதலாளிகள் சூறையாட அனுமதிக்குது!
 • தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

Tuesday, December 23, 2008

செருப்பு என்றால் புஷ், செருப்படி என்றாலும் புஷ்

செருப்பு என்றால் புஷ். செருப்படி என்றாலும் புஷ். Google-இல் செருப்படி என்று தேடினால் "புஷ்ஷுக்கு செருப்படி" என்ற பக்கங்கள் தான் வருகிறது.


shoe means bush - Google search results

வாழ்க முண்டாசர் அல்ஜெய்தி!

ஒழிக செருப்- புஷ்!

புஷ்சை செருப்பால் அடித்த மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்

புஷ்-க்கு செருப்படி கொடுத்த மாவீரன் முண்டாசர் அல்ஜெய்திக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. புஷ்சின் கொடூரமான போர்வெறி, உலக மேலாதிக்க வெறி ஆகியவற்றால் அல்லல் பட்ட கோடிக்கணக்கான மக்கள் மற்றும் விடுதலையையும், சமத்துவத்தையும் விரும்பும் மக்கள், அமைப்புகள் அனைவரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

எப்போதுமே ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு இரகசியமாகவே போய் வரும் புஷ் கடைசியாக மாட்டி கொண்டான். நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் அரணாக நின்றாலும், நவீன கருவிகளால் சள்ளடை போட்டாலும் மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் செருப்படியில் இருந்து தப்ப முடியவில்லை.

விடுதலை உணர்விருந்தால் கையில் கிடைக்கும் எதுவும் ஆயுதமாக மாறலாம் என முண்டாசர் அல்ஜெய்தியின் உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

மேலாதிக்க போர்வெறி பிடித்த புஷ்சே,
நீ பாதாளத்தில் மறைந்து இருந்தாலும்,
வெள்ளை மாளிகையில் உறங்கினாலும்,
உனக்கு கனவில் வந்தும் செருப்படி விழும்.முண்டாசர் அல்ஜெய்தியின் செருப்படி போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவரை விடுதலை செய்ய கோரும் மகஇக-வின் சுவரொட்டி கீழே.

அமெரிக்க அதிபர் புஷ்க்கு ஈராக்கில் செருப்படி! காலனி ஆதிக்கத்திற்கு காலணியால் பதிலடி!

உழைக்கும் மக்களே!,
 • அமெரிக்க ஆதிக்கத்தின் மீது விழுந்த செருப்படியை கொண்டாடுவோம்!
 • புஷ்சை செருப்பால் அடித்த மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.!Related Links:

Tuesday, December 16, 2008

Saturday, December 6, 2008

சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்

RSYF demonstration at Chennai Memorial Hall - Open Law Colleges

சென்னை மெமோரியல் ஹால், GH எதிரில் 3- 12- 2008 அன்று மாலை 4.30 மணியளவில் புமாஇமு அமைப்பினர், மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
 • சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலையொட்டி மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற!
 • தலித் மாணவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
 • இந்த மோதலை காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயலும் அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!

அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையையொட்டி புமாஇமு-வின் ஆர்ப்பாட்டங்கள், பிரசுரங்கள், தமிழரங்கம் (TamilCircle) மற்றும் வினவு கட்டுரைகள் பின் வருமாறு.

Related Links:

Sunday, November 9, 2008

பள்ளியை சதிகூடமாக்கிய ஆட்கொல்லி நோய் ஆர்.எஸ்.எஸ்-இன் கொலை வெறி தாக்குதல்காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில் ஆர்எஸ்எஸ் சதிகூட்டம் நவம்பர் 9, 2008 அன்று நடந்தது. இதனை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ, தமுமுக மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தடியால் அடித்து காயப்படுத்தினர் ஆர்எஸ்எஸ் ரவிடிகள்.ஆர்.எஸ்.எஸ்-இன் இந்தக் கலவரத்தைப் பார்த்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற்றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர்.
நாட்டை சாதி, மத ரீதியாக துண்டாடும் கொலை வெறி நச்சு கருத்துக்களை பள்ளியில் இருத்து "சாகா" என்ற பெயரில் பரப்புகிறது ஆர்.எஸ்.எஸ். இதற்கு கல்வியை வணிகமாக்கும் மெட்ரிக் பள்ளிகளும் உடந்தையாக இருக்கின்றன. பார்ப்பனியத்தை எதிர்த்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் பெயரில் இயங்கும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்-இன் வெறியாட்டம்.


கொலைவெறி, கலவரம், குண்டு வெடிப்பு இவையே ஆர்.எஸ்.எஸ்-இன் ஆயுதம். தமிழக மக்கள் இந்த ஆட்கொல்லி நோய் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் காவி குண்டர் அமைப்புகளை தடை செய்ய போராடவேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாடும் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக மாறிவிடும்.

Related Links:

Wednesday, October 22, 2008

மானமில்லா மக்களே தீபாவளி கொண்டாடுகிறார்கள்

இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது பார்ப்பனர்களின் பண்டிகை, தமிழர், திராவிடர்களின் திருவிழா அல்ல என பல தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் சொன்னவற்றின் சில குறிப்புகள் பின்வருமாறு:


மறைமலை அடிகள் சொன்னது:
1. 'ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" - "தமிழர் மதம்" என்ற நூலில்
2. "ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.' (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)


இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் விவேகானந்தர் சொன்னது:
1.தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்" (இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் -587-589)


பி.டி.சி சீனிவாசய்யங்கார் சொன்னது:
இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்ய+க்கள், இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’ (பி.டி.சி சீனிவாசய்யங்கார் "இந்திய சரித்திரம்’ முதற்பாகம் - பக்கம் - 16,17,19)


முனைவர் தொ.பரமசிவன் "அறியப்படாத தமிழகம்" நூலில்:
1. தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும்.
2. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்
4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தஙரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்
5. விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது


பெரியார் சொன்னது:
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!


தீவாளியா? - பாரதிதாசன் பாடல்:

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!


நன்றி - கந்தப்பு, பெரியார், பாரதிதாசன், தொ.பரமசிவன், மறைமலை அடிகள், பி.டி.சி சீனிவாசய்யங்கார், விவேகானந்தர்


Related Links:

Thursday, October 9, 2008

ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 8- 10- 2008 அன்று காலை பத்து மணியளவில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்பினர், ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:

 • ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
 • ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்போம்!
 • தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்டெடுப்போம்!
 • பதவி சுகத்திற்காக பச்சோந்தி வேலை செய்யும் திமுக அரசை அம்பலப்படுத்துவோம்!
 • இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக டாட்டா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இலங்கையில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து உதவும் கொலைகார இந்திய அரசை எதிர்த்து போராடுவோம்!


Related Links:
Sunday, September 28, 2008

கொலை வெறிநாய் பாஜக - பெதிக தொண்டர்களை தாக்கி, வண்டியை கொளுத்தி அட்டகாசம்


சேலத்தில் 27-09- 2008 அன்று ராஜ்நாத்சிங் வருகையை எதிர்த்து பெரியார் திராவிட கழகத்தினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இங்கு வரக்கூடாது என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து ரவுடித்தனத்தில் இறங்கினர். பெரியார் திக தொண்டர்களை பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் பெரியார் திக தொண்டர்கள் சுமார் 125 பேர்களை கைது செய்தது.

தமிழகத்தை மதவெறி களமாக மாற்ற காவி அமைப்புகளான இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆங்காங்கே சர்ச்களை சேதப்படுத்தி வருகிறது. அம்பேத்கர், பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது, சிறுபான்மையினரை தாக்குவது, என்று திட்டமிட்டு கொலைவெறியாட்டம் போடுகிறது.

இந்த நாய்களுக்கு நாளுக்கு நாள் வெறி முற்றி வருகிறது. இதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தால் கொலை தாக்குதல் நடத்துகிறது. இது "அமைதி பூங்கா" தமிழக மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இனியும் அமைதியாக இருந்தால், நேற்று குஜராத், இன்று ஒரிசா, நாளை தமிழகம் பிணக்காடாக மாறும்.

பெரியாரின் போர்குணமிக்க பார்ப்பனீய எதிர்ப்பு மரபை கொண்ட தமிழகம், காவிப்படையினரை (இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக) அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம்.

Related Links

Monday, September 8, 2008

மின்வெட்டு ஒரு அபாய எச்சரிக்கை! & மின்வெட்டின் ரகசியம்

நாடு முழுவதும் மின்வெட்டு. மின்வெட்டு பற்றாகுறையினால் மின்வெட்டு என்று கூறப்பட்டாலும், வர்க்கத்திற்கு ஏற்ப MNC & 'மேட்டுக்குடிகளை' பாதிக்காதவாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

மின்வெட்டு பற்றிய ரகசியங்களை கூறும் சுவரொட்டி பின்வருமாறு.கும்மிடிபூண்டி SRF ஆலை புகுந்து தாக்கிய போலீசு - புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம்கும்மிடிபூண்டி SRF ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது, போலீசு அவர்களை தாக்கியது. இதை எதிர்த்து 08-09- 2008 அன்று மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Links:

Friday, September 5, 2008

பார்ப்பனிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின் செல்லாதேகோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்ம் நடைபெற்றது. இதில் மகஇக அணிகள் (புமாஇமு, புஜதொமு) உள்பட பல்வேறு பெரியாரியக்க தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் முழக்கங்கள் மற்றும் படங்களை கீழ்கண்ட வே.மதிமாறன் தளத்தில் பார்க்கவும்.

இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

Monday, September 1, 2008

ராமனை போன்று மறைந்திருந்து கற்களையும், சோட பாட்டில்களையும் வீசிய காவி ரவுடிகள்


கோவையில் ‘வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா’வில் சீமான் சிறப்புரை ஆற்றினார்.

அன்று வாலியை மறைந்திருந்து கொன்றான். இன்று அந்த ராமனின் கோழை வாரிசுகளான இந்து முன்னணி காவி ரவுடிகள் கற்களையும், சோட பாட்டில்களையும் வீசி சீமான் பேச்சை நிறுத்த முயன்றனர். ஆனால் பெரியார் தொண்டர்கள் நன்கு ‘கவனித்து’ விரட்டி அடித்தார்கள்.

Related Links:

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராக சுஜானா தொழிலாளிகளின் சங்கம் உதயம்

உழைக்கும் வர்ககத்தின் போர்குணமிக்க தொழிற்சங்கமான புஜதொமு, ஏற்கனவே ஜேபியாரின் கொட்டத்தை அடக்கி, வாகன ஓட்டுனர்களை சங்கமாக திரட்டி போராடி வருகிறது. இது மட்டுமல்லாமல், தரைக்கடை வியாபாரிகள் சங்கம், கட்டிட தொழிளார்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் என தொழிலாளர்களை அணி திரட்டி போராடி வருகிறது.

திருவள்ளூரில் உள்ள சுஜானா இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருவதை எதிர்த்தும் பலமுறை நிர்வாகத்திடம் பேசியும், மனு கொடுத்தும் பயன் இல்லை. தொழிலாளர்களை சட்டப்படி அங்கீகரிக்காமல் தினக்கூலிகளாய், குறைந்த கூலிக்கு 12 மணி நேரம் வேலை வாங்கும் சுஜானா நிர்வாகத்தை எதிர்த்து சுஜானா தொழிற்சங்கம் (புஜதொமு) 23-08-2008 அன்று உதயம் ஆனது.

சுஜானா தொழிற்சங்கத்தின் கொடியேற்று விழாவின் பிரசுரம் பின் வருமாறு.


Related Links :


Wednesday, August 6, 2008

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்


மன்மோகன் சிங் தனியார்மய, தாராளமய கொள்கைகளை முழு வீச்சாக செயல்படுத்தி வருகிறார். அனுசக்தி ஒப்பந்தம் என்ற பேரில் இந்திய இறையாண்மையை அடகு வைத்தது மட்டும் அல்லாமல் அதன் இழுப்பிற்கு எல்லாம் வளைந்து கொடுக்கிறார். இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக மாற்றும் இராணுவ ஒப்பந்ததமும் இவரின் சாதனைகளில் அடங்கும். இந்திய விவசாயிகளின் பட்டினி சாவு இவருக்கு பொருட்டல்ல. மாறாக புஷ்ஷின் நட்பிற்காக நாட்டையே அடகு வைக்கிறார். இந்தியாவை முழு அடிமையாக மாற்றுவேன் என துரிதமாக செயல் படுகிறார். அவரது விசுவாசத்தை உள்ளபடியே தீட்டியுள்ள "புதிய ஜனநாயகம்" பத்திரிக்கையின் அட்டை படம்.Related Links :

Wednesday, May 28, 2008

யார் அதிகம் சாப்பிடுவது! - ஜார்ஜ் புஷ்ஷின் திமிர்

ஒரு அமெரிக்க குடும்பத்துக்கு $341.98ம் பூட்டான் குடும்பத்துக்கு $5.03ம் உணவுக்காக செலவிடப்படுகிறது. (கீழே கொடுக்கப்பட்ட தகவல்களின் படி). அப்படியானால் இந்தியர்களை விட கிட்டத்தட்ட 68 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்களே. ஏழ்மையான ஆப்ரிக்க நாடுகளை விட அமெரிக்கர்களின் சாப்பாட்டுச் செலவுகள் 300 - 1000 மடங்குகள் அதிகம். உண்மை நிலவரம் இப்படியிருக்க திமிருடன் பேசியிருக்குது ஒரு வெள்ளை பன்றி.
Look At the Food They Bought For One Week and the Number of Persons in the Family.

GERMANY:
The Melander family of Bargteheide - 2 adults, 2 teenagers
Food expenditure for one week: 375.39 Euros or $500.07

UNITED STATES:
The Revis family of North Carolina - 2 adults, 2 teenagers
Food expenditure for one week: $341.98


JAPAN:
The Ukita family of Kodaira City - 2 adults, 2 teenagers
Food expenditure for one week: 37,699 Yen or $317.25

ITALY:
The Manzo family of Sicily - 2 adults, 3 kids
Food expenditure for one week: 214.36 Euros or $260.11

MEXICO:
The Casales family of Cuernavaca - 2 adults, 3 kids
Food expenditure for one week: 1,862.78 Mexican Pesos or $189.09
POLAND:
The Sobczynscy family of Konstancin-Jeziorna - 4 adults, 1 teenager
Food expenditure for one week: 582.48 Zlotys or $151.27

EGYPT:
The Ahmed family of Cairo - 7 adults, 5 kids
Food expenditure for one week: 387.85 Egyptian Pounds or $68.53

ECUADOR:
The Ayme family of Tingo - 4 adults, 5 teenagers
Food expenditure for one week: $31.55

BHUTAN:
The Namgay family of Shingkhey Village - 7 adults, 6 kids
Food expenditure for one week: 224.93 ngultrum or $5.03

CHAD:
The Aboubakar family of Breidjing Camp - 3 adults, 3 kids
Food expenditure for one week: 685 CFA Francs or $1.23

And Mr. George Bush- The So Called President of America is Crying That The Rise in Price of Food is Because of Indians. Coz, They are Consuming More and More Food Day By Day

Let's Spread This Message To Everyone!ஜார்ஜ் புஷ்ஷின் வாய்க் கொழுப்புக்கு ஆப்பறைவோம்!

நன்றி - ஸ்பார்டகஸ்Related Links :

Wednesday, May 21, 2008

புதுப்பொலிவுடன் தமிழரங்கம் இணையத்தளம்

தமிழரங்கம் இணையத்தளம் விசாலமான பளிச் தோற்றத்துடன், மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், சமர் பத்திரிக்கைகள் மற்றும் பல ஆய்வுக் கட்டுரைகளும் யூனிகோடு எழுத்துருவாக படியலிடப்பட்டிருப்பது அருமை. நகர்ந்து செல்லும் படங்கள் நம் கவனத்தை கவர்கிறது.

"கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்" என்ற முழக்கத்துடன், புரட்சிகர கட்டுரைகளின் தொகுப்பாக தமிழரங்கம் இணையத்தளம் திகழ்கிறது."புதிய உணர்வு, புதிய தளம் - தமிழசர்க்கிள் புதிய வடிவில்"

Monday, May 12, 2008

தில்லைச் சமரில் வென்றது தமிழ்! - ஒளி குறுந்தகடு (DVD)

இது மார்ச் 2, போராட்டத்தின் நேரடிக் காட்சிப் பதிவு.

நந்தன் முதல் வள்ளலார் வரை அனைவரையும் தீக்கிரையாக்கிய கும்பல், வீழ்த்தப்படும் காட்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம்.

செஞ்சட்டைத் தொண்டர்கள் சிவனடியாரை அழைத்து வரும் பேரணி....
தடுத்து நிற்கும் தீட்சிதர்கள்...
போர்க்களமாகும் சிற்றம்பல மேடை...
ஆலய வாயிலில் தோழர்கள் மீது போலீசு தடியடி...

அனைத்தையும் உங்கள் கண் முன்னே விரிக்கும் ஓர் ஆவணப்படம்.

நன்றி - புதிய ஜனநாயகம் (மே 2008)

ஒளி குறுந்தகடு (DVD)
விலை - ரூ.50/
வெளியீடு - மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்.

கிடைக்கும் இடங்கள்:
புதிய கலாச்சரம்,
16, முல்லை நகர் வளாகம், அசோக் நகர்,
2வது நிழற் சாலை,
சென்னை - 600083.

தொலைபேசி - 044 23718706
கைபேசி - 9941175876

கீழைக்காற்று
10, அவுலியா தெரு,
சென்னை - 600002
தொலைபேசி - 044 28412367

இதை வாங்கி பாருங்கள், பிறரையும் பார்க்க செய்யுங்கள்.

சிதம்பரத்தில் தமிழ் முழங்கிய போராட்டம் - Youtube காட்சி பதிவுகள்

தில்லை1 - http://www.youtube.com/watch?v=mP_DIrhA18Yதில்லை2 - http://www.youtube.com/watch?v=72lHGaaHYjgதில்லை3 - http://www.youtube.com/watch?v=qIal4-Zplfoதில்லை4 - http://www.youtube.com/watch?v=BoTJFbA7IdI

Friday, April 11, 2008

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி - வலைப்பதிவு தளம்

புரட்சிகர இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பான புமாஇமு-வின் வலைப்பதிவு தளம் "அனைவருக்கும் கல்வி - வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கப் போராடுவோம்!" என்ற முழக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது.

கல்வி தனியார்மயம், பார்ப்பனியம், மறுகாலனியம் மற்றும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து புமாஇமு போராடி வருகிறது. இந்த வலைப்பதிவு தளம் புமாஇமு-வின் போராட்டங்கள், வெளியீடுகள், பிரசுரங்கள் போன்றவற்றை பதிவு செய்கிறது.

அவற்றுள் சில பதிவுகள்:

வெளியீடுகள்

போராட்டங்கள்

பிரசுரங்கள்

மினனஞ்சல்: rsyf@rediffmail.com
வலைப்பதிவு தளம் : http://rsyf.blogspot.com