Tuesday, July 7, 2009

பெட்ரோல்-டீசல்-கேஸ் விலையை உயர்த்தி மக்களின் வாழ்வை சூறையாடாதே

ஜுலை 2, 2009 முதல் பெட்ரோல் விலையை 4 ரூபாயும், டீசல் விலையை 2 ரூபாயும் விலையேற்றியுள்ளது மத்திய அரசு. இது குறித்து ஓட்டு கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கும் நிலையில், விலையேற்றத்தை எதிர்த்து புஜதொமு-வின் சுவரொட்டி.
Petrol & Diesel Prise Rise - NDLF Poster
  • உள்நாட்டு எண்ணெய் வளம் அம்பானி கையில்!
  • விலை உயர்வின் கொள்ளை லாபம் அம்பானி கையில்!
  • விலை உயர்வும் வரிச்சுமையும் மக்களின் தலையில்!

மத்திய மாநில அரசுகளே!
  • பெட்ரோல்-டீசல்-கேஸ் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்!
  • விலை உயர்வை திரும்பப் பெறு!

உழைக்கும் மக்களே!
  • விலை உயர்வுக்கு வித்திடும் உலகமயம்-ஊக வணிகத்தை எதிர்த்துப் போராடுவோம்!
  • மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

7 comments:

K.R.அதியமான் said...

பாவம் அம்பானி. இந்தியாவில் பெட்ரோலிய துறையையும், அதன் விலைகளையும், நீங்க சொல்ற மாதுரி அம்பானியால கட்டுபடுத்த முடியவில்லையே. உங்க பதிவை படித்தால், நொந்து போவார். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல. அரசு பெட்ரோலிய நிறுவனங்கள், அடக்க விலைக்கு கீழே பெட்ரோலிய பொருட்க்களை சில ஆண்டுகளுகளாக விற்க்கின்றன. விலையை, நஸ்டம் வராத அளவிற்க்கு உயர்த்த அரசியல் அனுமதிக்கவில்லை. நட்டத்தை ஈடுகட்ட ஆண்டு தோறும் அரசு, ஆயில் பாண்டுகள் / மான்யம் அளிக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு அது போன்ற மான்யம் இல்லை / சாத்தயம் இல்லை. அதனால் தான் ரிலையனஸ் மற்றும் எஸ்ஸார் பெட்ரோல் பங்குகள்
மூடப்படுகின்றன. ரிலையன்ஸ் பெட்ரோலை ஏற்றுமதி செய்தி பிழைக்கிறது. ஏற்றுமதி இல்லை என்றால் திவால் தான். பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணையத்தில் அரசின் கட்டுபாடு மற்றும் அரசியல் இவ்வளவு இருக்கும் என்று தெரிந்திருந்தால், தனியார்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் இந்த துறையில் நுழைந்தே இருக்காது. எஸ்ஸார் நிலை இன்னும் கொடுமை.

ஆனால் இத்துறை மீது அரசின் மொத்த வரிகள் மிக மிக மிக அதிகம் தான். ஒரு பக்கம் மான்யம் ; மறுபக்கம் அதீத வரி சுமை என்ற குழப்பம்..

K.R.அதியமான் said...

விலைவாசி உயர்விற்க்கு காரணம் உலகமயமாக்கல் அல்ல.
அரசின் பற்றாகுறை பட்ஜெட்டுகளும், பண வீக்கமும் தான்.

50களிலும், 60களிலும் 20 சத விலைவாசி உயர்வு, இதே காரணிகளால் இருந்தது.
அன்று இந்திய ஒரு மூடப்பட்ட பொருளாதார அமைப்பு ; உலகமயமாக்கல், தாரளமயமாக்கல்
இல்லை. மாற்றாக இந்திய பாணி சோசியலிச அல்லது ஸ்டேட்டிஸம்.

மேலும் பார்க்க :

விலைவாசியை உயர்த்த போகும் பட்ஜெட் :

http://nellikkani.blogspot.com/2009/07/blog-post.html

Anonymous said...

இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய்க்கு கச்சா எண்ணை 63 டாலர்.

அட நாய்களே ஆறு மாதத்துக்கும் முன் 110 டாலர்னு சொல்லித்தாண்டா விலைய ஏத்துனீங்க. இப்ப 63 டாலர்ன்னு மறுபடியும் ஏத்துறானுங்க. மொத்தத்துல விலை உயர்வுதான் செய்தி வாசிப்பானே தவிர 109 லர்ந்து 110ஆனாலும் ,63லர்ந்து64 ஒரேதீர்வு விலை உயர்வு தான் . அத உடுங்க நம்ம மான் பேசறத எல்லாம் சீரியசா எடுக்துக்காதீங்க.

கலகம்




http://kalagam.wordpress.com/

K.R.அதியமான் said...
This comment has been removed by a blog administrator.
சுனா பானா said...

40, 50 வருடங்களாக மக்களின் வரிப்பணத்திலும், உழைப்பிலும் (உடல் & மூளை), உருவாக்கியுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஸ்வாகா செய்ய துடிக்கிறது பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தரகு முதலாளிகளும். பெட்ரோல் துறையை அப்படியே விழுங்க நினைக்கிறான் அம்பானி.

>>பாவம் அம்பானி
அவர் என்னவோ நேர்மையானவன் போல வக்காலத்து வாங்குகிறீர்கள். பங்கு சூதாடிகளிலேயே அம்பானி பலே கேடி. பங்கு சந்தை மூலம் சிறு முதலீட்டாளர்களின் பணத்தை உருவியது போதாதென்று, நம் நாட்டு நவரத்ன கம்பெனிகளையும் தனியார்மயப்படுத்த படுபிரயத்தனம் செய்கிறார்கள் இந்திய தரகு முதலை கூட்டங்கள்.

>>தனியார்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் இந்த துறையில் நுழைந்தே இருக்காது.
நட்ட கணக்கை காட்டியே பல ஆயிரம் கோடிகளை ஏப்பம் விட்டவர் குருபாய். அம்பானி சிறுபாய்களும் சளைத்தவர்கள் அல்ல. எப்படியும் எல்லா பொது துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்படும். பெட்ரோல் துறையில் இப்போது சிறு நட்டம் வந்தாலும், விட்ட காசை அப்போ பிடிச்சிக்கலாம் என்பது அம்பானியின் கணக்கு.

முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற பேரில் பிலேடு திருடன் அம்பானிக்கு பல்லக்கு தூக்குவது நல்லாவா இருக்கு?

ரிலையன்சின் சில பிராடுகளை இங்கு பார்க்கவும்.
http://rilfraud.blogspot.com/

K.R.அதியமான் said...

அம்பானியின் பித்தலாட்டங்களை பற்றி அறிவேன். அது வேறு பிரச்சனை. அவர் நேர்மையானவர் என்று சொல்லவில்லையே. நான் எழுதிய ஒரு பதிவு :

http://athiyamaan.blogspot.com/2008/07/blog-post_10.html
அம்பானி சகோதர‌ர்க‌ளின் அரசியல்


///நட்ட கணக்கை காட்டியே பல ஆயிரம் கோடிகளை ஏப்பம் விட்டவர் குருபாய். அம்பானி சிறுபாய்களும் சளைத்தவர்கள் அல்ல. எப்படியும் எல்லா பொது துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்படும். பெட்ரோல் துறையில் இப்போது சிறு நட்டம் வந்தாலும், விட்ட காசை அப்போ பிடிச்சிக்கலாம் என்பது அம்பானியின் கணக்கு. முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிறேன் என்ற பேரில் பிலேடு திருடன் அம்பானிக்கு பல்லக்கு தூக்குவது நல்லாவா இருக்கு?
////

ஆனால் உங்கள் வாதம் மற்றும் தகவல் தவறானது. வேண்டுமென்றே நட்டம் வரும் அளவிற்க்கு தொழில் செய்ய‌ முட்டாள் அல்ல அம்பானி. பல்ல‌க்கு தூக்குவது போன்ற சொல்லாடல்களை பயன்படுத்தினால், நான் இந்த ஆட்டதிற்க்கு வரலப்பா.

சுனா பானா said...

>>அம்பானியின் பித்தலாட்டங்களை பற்றி அறிவேன். அது வேறு பிரச்சனை. அவர் நேர்மையானவர் என்று சொல்லவில்லையே.

முற்றுலும் உண்மை. தரகு முதலாளிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.