

நிதித்துறை தளத்தில் இருந்தும் மற்ற தமிழ் வலைதளங்களில் இருந்தும் எனக்கு பிடித்த புதுமையான, சிறிய, இனிமையான 250 தமிழ் பெயர்களை தொகுத்துள்ளேன். சில தமிழ் பதிவர்கள் மற்றும் பதிவு வாசகர்களின் பெயர்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். (குழலி, தமிழினி, தமிழ்நிலா, எழில்நிலா திகழ்மிளிர், அதியமான், தமிழ்மணி, அமிழ்தினி, மதிமாறன், வினவு, வினை).
தமிழ் பதிவர்களே, வாசகர்களே, சோதிடம், நியூமராலஜி போன்ற மூடநம்பிக்கைகளை ஒதுக்கி விடுங்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர் வைப்பது மட்டுமல்லாமல் தங்கள் உறவினர்கள், நண்பர்களையும் தமிழ் பெயர்களை வைக்க உதவுங்கள்.
பெண் பெயர்கள்:
- அமிழ்தினி
- அமுதா
- அமுதினி
- அருள்மணி
- அருள்மதி
- அருண்மதி
- அருண்மொழி
- அன்பரசி
- இயலினி
- இயலிசை
- இன்பநிலா
- இனியா
- எழில்
- எழில்நிலா
- எழிலினி
- எழினி
- ஓவியா
- கண்மணி
- கணையாழி
- கயல்விழி
- கலையரசி
- கவின்மலர்
- கனிமொழி
- காவேரி
- காவியா
- குழலி
- குழலினி
- சந்தனா
- சமர்மதி
- சமர்விழி
- சாதனா
- சிந்தனா
- சிறுவாணி
- சீர்குழலி
- சீர்மதி
- சுடர்மணி
- சுடர்மதி
- சுடர்விழி
- செந்தமிழரசி
- செந்தாமரை
- செம்மலர்
- செல்வமணி
- செல்வமதி
- செல்வமலர்
- செல்வி
- தமிழ்நிலா
- தமிழரசி
- தமிழினி
- தாமரை
- தாமிரா
- தாரணி
- திகழ்கா
- திகழ்மிளிர்
- திகழினி
- திருநிலா
- திருமலர்
- துளசி
- தேன்கனி
- தேன்மதி
- தேன்மலர்
- தேன்மொழி
- நறுங்கா
- நன்னிலா
- நிகரிலா
- நித்திலா
- நிலாமதி
- நிறைமதி
- நீலமணி
- நீலவிழி
- நேர்நிலா
- பனிமலர்
- பனிமுகில்
- பிறைமதி
- புகழினி
- புதியா
- பூவிழி
- பூங்குழலி
- பொழிலினி
- பொன்மலர்
- பொன்னி
- பொன்னிலா
- மகிழ்
- மகிழரசி
- மணிமலர்
- மணிமேகலை
- மணிவிழி
- மதி
- மதிநிலா
- மதியரசி
- மயிலினி
- மருதா
- மல்லிகா
- மலர்
- மலர்நிலா
- மலர்மதி
- மறைமலர்
- மான்விழி
- மிருதுளா
- மின்மணி
- மின்மலர்
- மின்முகில்
- மின்விழி
- முகிலா
- முகிலரசி
- முகிலினி
- முத்தழகு
- முத்துமதி
- மென்கா
- மென்பனி
- மென்மதி
- மென்மலர்
- யாழ்நிலா
- யாழினி
- வடிவரசி
- வளர்மதி
- வான்மதி
- வான்முகில்
- வானரசி
- வானதி
- விண்ணரசி
- விண்மணி
- விண்மதி
- விண்மலர்
- வினைமதி
- வினையரசி
- வீரமதி
- வெண்ணிலா
- வெண்பனி
- வெண்மணி
- வெண்மதி
- வெம்பனி
- வேல்விழி
- வேலரசி
- வைகறை
- வைகை
ஆண் பெயர்கள்:
- அகரன்
- அதியமான்
- அமர்
- அமுதன்
- அரசன்
- அரசு
- அருள்
- அருண்
- அருண்மணி
- அருண்மதி
- அன்பு
- அன்பரசு
- அன்பழகன்
- அன்புமணி
- இளங்கதிர்
- இளங்குமரன்
- இளங்கோ
- இளஞ்செழியன்
- இளம்பரிதி
- இளமதி
- இளவரசு
- இளவேனில்
- இறையன்பு
- இனியன்
- இன்பா
- உதியன்
- உதயா
- எல்லாளன்
- எழில்
- எழிலன்
- எழில்வேலன்
- கண்ணன்
- கதிர்
- கதிர்நிலவன்
- கதிரவன்
- கலைச்செல்வன்
- கலைவாணன்
- கலைவேலன்
- கவின்
- கவின்செல்வா
- கனல்
- கனல்வண்ணன்
- கனலரசன்
- கனல்கண்ணன்
- கார்முகில்
- குமணன்
- கோவன்
- சந்தனன்
- சந்தனவேலன்
- சமர்
- சமர்வேல்
- சமரன்
- சிலம்பரசன்
- சீர்மணி
- சீர்மதி
- சீர்மருதன்
- சீராளன்
- சுடர்
- சுடர்வேல்
- செங்கதிர்
- செந்தமிழ்
- செந்தில்
- செங்கோ
- செந்தாமரை
- செம்பரிதி
- செல்வம்
- செழியன்
- சேந்தன்
- சொற்கோ
- சோலை
- தங்கவேல்
- தமிழ்மணி
- தமிழன்பன்
- திருமாறன்
- திருமாவளவன்
- துரைமருகன்
- துரைவேலன்
- நக்கீரன்
- நகைமுகன்
- நந்தன்
- நவிலன்
- நன்மாறன்
- நாவரசு
- நிலவன்
- நித்திலன்
- நெடுமாறன்
- பரிதி
- பாரி
- புகழேந்தி
- பொற்கோ
- மகிழன்
- மகிழ்நன்
- மணிமாறன்
- மணியரசன்
- மணிவண்ணன்
- மணிமுகில்
- மதி
- மதியரசன்
- மதிமாறன்
- மதிவாணன்
- மருது
- மருதன்
- மருதையன்
- மலரவன்
- மாறன்
- முகில்
- முகிலன்
- முத்துக்குமரன்
- முருகவேல்
- முருகன்
- வடிவேல்
- வினவு
- வினை
- வெற்றி
- வெற்றிவேல்
தமிழ் பெயர்கள்:
- தமிழ்ப்பெயர்க் கையேடு - மக்கட்பெயர் 46000 (விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம்)
- மா. தமிழ்ப்பரிதியின் தமிழில் பெயரிடுவோம்
- தமிழ் பெயர்கள்- TamilNation.org
- தமிழ் பெயர்கள்- yemkay
தமிழ் பெயர் - சில கட்டுரைகள் & விவாதங்கள்:
50 comments:
வணக்கம் சுனா பானா தற்போது நிதித்துறை தளம் வேலை செய்யவில்லையே எப்படி அந்த பெயர்களை மீட்டெடுப்போமென கவலை இருந்தது நல்ல வேலையாக எடுக்க முடிந்தது...
நல்ல தமிழ்பெயர்களை புதுமையானதாக நாமே உருவாக்கலாம்...
என் நண்பரின் குழந்தைக்கு நவிலன் என்று பெயரிட்டோம்... அமுதினியா, பரிதி போன்றவைகள் எங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு இடப்பட்டுள்ள தமிழ் பெயர்கள்...
பரிசனன் என்றொரு பெயரை கூட வைத்துக்கொள்ளலாம்...
நன்றி
usefull. thanks
நல்ல பதிவு. மகிழ்ச்சி. பாராட்டுகள்.
சென்ற வாரம் ஒரு அரசு மருத்துவமனையில் பார்த்தேன். 03-06-09 க்கு பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ஒரு தங்க மோதிரம் இலவசம் என்று. இதுக்கு என்ன சொல்றீங்க ?
இது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மட்டும் தான் இந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பின் மூலமே தெரிஞ்சக்கலாம், தமிழ் பெயர்கள் வைப்பது எவ்வளவு குறைவு என்று.
புருசோத்தமன் நீங்கள் சொல்வது போல் இனிமையான தமிழ் பெயர்களை நாமே உருவாக்கலாம். இங்கு குறிப்பிட்டிருப்பதை காட்டிலும் பல நூறு புதுமையான தமிழ் பெயர்களை உருவாக்கலாம். சிறிய பெயர்களை இணைத்து பல ஆயிரம் கூட்டு பெயர்களையும் உருவாக்கலாம்.
அமுதினியா, பரிதி, பரிசனன் அருமையான பெயர்கள்.
முகிலன் என்பது என் குழந்தையின் பெயர். இந்தப் பெயர் வைப்பதற்கு நான் பட்ட பாடு இருக்கின்றதே, ஐயோ ஐயோ ! என் உறவினர்களின் கேலிப் பேச்சுகளிருந்து தப்பித்த பெயர்களில் இது ஒன்று. அதனால்தான் வைக்க முடிந்தது. இல்லாவிட்டால் என்னுடைய உள்துறை தடா போட்டிருக்கும். ஏன், என் பெயர் கூடதான், 'அறிவுடைநம்பி' நல்ல தமிழ் பெயர் தான். இதனையே நீங்கள் உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் குறிப்பு : அறிவுடைநம்பி என்பது, மன்னனாகவும் புலவனாகவும் இருந்த சங்ககால தமிழருடைய பெயர். இவர் பாடல் "பலப்புலப் படைத்து பலரோடு உண்ணும் " என்ற 10 வகுப்பு மனப்பாடச் செய்யுள்.
/*
இந்தப் பெயர் வைப்பதற்கு நான் பட்ட பாடு இருக்கின்றதே, ஐயோ ஐயோ !
*/
Same blood :-)))))
I'm going through it now .....
Can you please tell the meaning of "கவின்"?
Thx.
கவின் என்றால் அழகு. நிதித்துறை தளத்தில் 46000 பெயர்கள் உள்ளன. கூடவே பொருளும் கொடுத்துள்ளனர்.
கவின் என்றால் 'மிகுந்த அழகு' என்றும் பொருளுண்டு. கவின் என்பது ஒரு adverb.கவின் அழகு - மிகுந்த அழகு, கவின்மலர் - அழகுடைய மலர்.
செம்புலம் தளம் - இந்த சுட்டியில் நல்ல தமிழ் பெயர்கள் உள்ளன.
http://www.sempulam.com/files/pdf/pure-tamil-name.pdf
அருமையாக இருக்கிறது.
இது நமக்கு பின்னால் உபயோகப்படலாம். நன்றி.
---
எழில் - நண்பன்.
செல்வி - அம்மா.
சிலம்பரசன் - விரல் வித்தைக்காரன்
இன்பா - நண்பன்.
தேன்மொழி - நண்பி...
இப்படி பல முகங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.
---
பிரதாப் - இது எந்த வகை? தமிழா? வடமொழியிலிருந்து வந்ததா?
பிரதாப் தமிழ் பெயர் கிடையாது. தமிழ் பெயரா என தெரிந்து கொள்ள நிதித்துறை தளத்தை பார்க்கலாம்.
பட்டியலில் என்னுடைய பெயரைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி
வெற்றிக்கு வாழ்த்துகள்
வெறும் வார்த்தைகள் போல் இல்லாமல் செயல்பாடுகளாகவும் உங்கள் பதிவு இருக்கிறது. விருதுக்கு தகுதியான படைப்பு இது. வாழ்த்துகள்
தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள். :)
ஊர்சுற்றி, ஜோதிஜி, திகழ் மற்றும் வாக்களித்த வாசகர்களுக்கு நன்றி!
ஐயா எனக்கு ஆண் பெயர்கள் வ,வா,ஒ,வி,வீ யென தொடங்குபவை வேண்டும். உதவி செய்யுங்கள்
இந்தப் பக்கத்தையும் முயற்சி செய்துபாருங்கள்.
http://ksmohankr.wordpress.com/2011/10/03/tamil-names-for-babies/
நவிலன் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
என் மகனுக்கு பெயரிட ஆவலாக இருக்கிறேன், தயவு செய்து பகிரவும்...
அதே போல் நிமலன் மற்றும் நிகேதன் தமிழ் பெயர்களா? இதனுடைய அர்த்தம் தெரிந்தாலும் பகிரவும்...
-செந்தில்
enaku oru peyar artham vendum ilankabilan thaan antha peyar...
தாமிரா என்பதன் பொருள் என்ன?
" காருண்யா " தமிழ் பெயரா ?
நான் இந்த வளைப்பக்கத்திற்க்கு புதியவன்.
மிகவும் அருமையான பதிவு.
இசை என்னும் உள்ளடக்கம் கொண்ட ஆண் இரட்டயர் பெயர் வேண்டும், ஆனால் "இசை" யென்று வெளிப்படயாகஇருக்ககூடாது(இசைச்செல்வன்).
I like to name my boy திகழ்முகிலன், what is the meaning of this name ?
when i tried search the web திகழ் (bright as diamond), முகிலன் (Clounds before rain) => bright clouds before rain . Am i right?
என் குழந்தைக்கு இளஞ் செழியன் என்று பெயர் வைத்துள்ளேன்
ர வரிசையில் ஆரமிக்கும் அழகிய தமிழ் பெயர் வேண்டும்
ராஜ், ராஜா தமிழ்ப்பெயர்களா?
கவி என்பது தமிழ் பெயர்?
நவிலன் இதற்கு சரியான பொருள் ச௳றவும்
யாழ்நிலா என்ற பெயரின் பொருள் என்ன?
மிருதுளா பெயர் அர்த்தம் என்ன
Samar what meaning?
போர்...என்று அர்த்தம்
ர வரிசையில் தமிழ்ப்பெயர்கள் துவங்காது...
லி,லு,லே,லோ வில் தொடங்கும் தமிழ் பெயர்கள்(பெண் குழந்தைக்கு)
லி,லு,லே,லோ வில் தொடங்கும் தமிழ் பெயர்கள்(பெண் குழந்தைக்கு)
எனது பிள்ளைகளின் பெயர்கள்:
1.அருள் வளன்.
2.தூரிகை (மகள்)
Kasthuri what meaning?
கவி யாழினி பெயரின் அர்த்தம்
வ,வி,வு,ஒ
எழுத்துக்களின் தமிழ் பெயர்கள் பதிவிடவும் நண்பர்களே .பெண் குழந்தை
இனியா meaning???
சமரன் நல்ல பெயரா
பே போ .எழுத்துக்களில் தமிழ் பெயர்கள்
தியாழினி தமிழ் பெயரா
வணக்கம். விமனன்/விமநன் தமிழ் பெயரா? நன்றி 🙏
Mo Tamil name
பேரின்பம்,பேகன் ,போர்களன்,போர்தமிழ்,போர்மறவன்
அகரன் பெயரின் அர்த்தம் சொல்வீர்களா
Post a Comment