Showing posts with label புமாஇமு. Show all posts
Showing posts with label புமாஇமு. Show all posts

Thursday, August 13, 2009

புமாஇமு வேர்ட்பிரஸ் - பெற்றோர்களுக்கான தளம்

பத்து வருடங்களுக்கு முன் சுமார் 30 ஆயிரத்திற்குள் உயர்கல்வியை படிக்க முடிந்தது. இப்போது நம் கண் முன்னாலேயே கல்வி கட்டணங்கள் மள மளவென உயர்த்தப்பட்டு உயர் கல்விக்கு 3 லட்சங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. இந்த அதிவேக கட்டண உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடுத்தர வர்க்கம் திண்டாடுகிறது. இதே போக்கு நீடித்தால் அடுத்த 10, 15 ஆண்டுகளில் உயர்கல்விக்கான செலவுகள் 30, 40 லட்சங்களை தாண்டும் என நிதி ஆலோசகர்கள் நாணயம் விகடனில் சொல்கிறார்கள். அரசின் தனியார்மய, தாராளமய கல்வி கொள்கை & கட்டண உயர்வின் வேகத்தை பார்த்தால், கல்வி செலவுகள் கட்டாயமாக கோடியை தாண்டும்.

போராடி பெற்ற உரிமைகளையும், வாழ்க்கை நிலையையும் தக்க வைத்து கொள்ளாத எந்த சமூகமும் வளர்ச்சியடையாது. மாறாக 2020க்குள் "வல்லரசு" ஆனாலும் அது சீரான வளர்ச்சியாக இருக்காது. ஒரு பக்கம் மட்டுமே வீங்கிய நோயாக இருக்கும். கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கும்.

பெற்றோர்களிடம், எனக்கு என்ன சொத்து வைத்து இருக்கிறாய் என கேட்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால் இதே இளைஞர்களிடமும், இளம் பெற்றோர்களிடம் "ஏம்பா என் தலையில் இவ்வளவு லட்சம் கடனை தலையில் சுமத்தினாய்" என கேட்கும் அவலம் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன. கல்விக்கான உரிமைக்காக போராடுவது நம்முடைய கடமை.

இப்படி அதிகரித்து வரும் கட்டணக் கொள்ளையை எதிர்த்து புமாஇமு தொடர்ந்து போராடி வருகிறது. களத்தில் நிற்கிறது. கல்விக்கான உரிமைக்காக கருத்தாலும் கரத்தாலும் வலு சேர்ப்பது பெற்றோர்களின் கடமை.

RSYF

புமாஇமு கல்வி கொள்ளையர்களை அம்பலப்டுத்தியும், எதிர்த்தும் போராடி வருகிறது. போராட்ட செய்திகளும், கட்டணக் கொள்ளையை திரை கிழிக்கும் செய்திகளையும், கல்வி பற்றிய கட்டுரைகளையும் பதிக்கும் தளம் புமாஇமு வேர்ட்பிரஸ். இது மாணவர்களுக்கான தளம் மட்டுமல்ல. பெற்றோர்களுக்கான தளம்.

கட்டண கல்வி பற்றிய உண்மைகள்:

போராட்டங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

Thursday, July 23, 2009

அண்ணா பல்கலைக்கழகம் - தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுகிறது

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அம்பலபடுத்தியும், எதிர்த்தும் புமாஇமு தொடர்ச்சியாக போராடி வருகிறது. கல்வியை முழுமையாக தனியார்மயப் படுத்தி கல்வியை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கி வருகிறது அரசு. கல்வி பெறுவது நமது உரிமை. கல்வி கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். கல்வியை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசை நிர்பந்த்திக்க மாணவர்கள் ஓர் வர்க்கமாய் அணி திரள அழைக்கிறது புமாஇமு. அண்ணா பல்கலைக்கழகம் தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுவதை கண்டித்து புமாஇமு-வின் சுவரொட்டி.

Against Anna_University acting as private colleges agent - RSYF Poster

தமிழக அரசே!
  • ஐவர் குழுவின் அதிரடி சோதனை என்று நாடகமாடாதே!
  • கல்லூரி முதல்வரின் வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு மாதா பொறியியல் கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
  • கட்டணக் கொள்ளையடித்தும் - இன்டர்னல் மார்க்கை ஜீரோ போட்டும் மாணவர்களை மிரட்டி நிரந்தர அடிமையாக்கும் பனப்பாக்கம் கிருஷ்ணா போன்ற கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு!

மாணவர்களே!
  • எதிர்காலம் என்று கொத்தடிமையாக இருப்பது அவமானம்!
  • தனியார் கொள்ளையை ஒழிக்க மாணவர்கள் ஒரு வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதே தன்மானம்!

Related Links:

Thursday, April 30, 2009

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!

"கல்வி கொடுப்பது அரசின் கடமை, அதை போராடி பெறுவது நமது உரிமை" என்ற முழக்கத்துடன் சென்ற ஆண்டு புமாஇமு, மாணவர் - பெற்றோருடன் இணைந்து போராடியது. அதன் விளைவாக, சென்ற ஆண்டு ஜூன் 2008-இல், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நன்கொடை செய்த பணத்தை திருப்பி தர, கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவு இட்டார்.

புமாஇமு பள்ளி கட்டண கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடிவருகிறது. "அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்" என்ற புமாஇமு-வின் சுவரொட்டி கீழே.

RSYF Poster Against Donation in Schools

தமிழக அரசே!
  • மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடவடிக்கை என்று நாடகமாடாதே!
  • கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்!

பெற்றோர்களே!
  • தனியார் பள்ளிகளின் மோகத்தை விட்டொழிப்போம்!
  • அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்

Related Links:

Saturday, December 6, 2008

சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்

RSYF demonstration at Chennai Memorial Hall - Open Law Colleges

சென்னை மெமோரியல் ஹால், GH எதிரில் 3- 12- 2008 அன்று மாலை 4.30 மணியளவில் புமாஇமு அமைப்பினர், மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
  • சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலையொட்டி மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற!
  • தலித் மாணவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • இந்த மோதலை காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயலும் அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!

அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையையொட்டி புமாஇமு-வின் ஆர்ப்பாட்டங்கள், பிரசுரங்கள், தமிழரங்கம் (TamilCircle) மற்றும் வினவு கட்டுரைகள் பின் வருமாறு.

Related Links:

Thursday, October 9, 2008

ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 8- 10- 2008 அன்று காலை பத்து மணியளவில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்பினர், ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:

  • ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
  • ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்போம்!
  • தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்டெடுப்போம்!
  • பதவி சுகத்திற்காக பச்சோந்தி வேலை செய்யும் திமுக அரசை அம்பலப்படுத்துவோம்!
  • இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக டாட்டா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இலங்கையில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து உதவும் கொலைகார இந்திய அரசை எதிர்த்து போராடுவோம்!


Related Links:




Friday, April 11, 2008

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி - வலைப்பதிவு தளம்

புரட்சிகர இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பான புமாஇமு-வின் வலைப்பதிவு தளம் "அனைவருக்கும் கல்வி - வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கப் போராடுவோம்!" என்ற முழக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது.

கல்வி தனியார்மயம், பார்ப்பனியம், மறுகாலனியம் மற்றும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து புமாஇமு போராடி வருகிறது. இந்த வலைப்பதிவு தளம் புமாஇமு-வின் போராட்டங்கள், வெளியீடுகள், பிரசுரங்கள் போன்றவற்றை பதிவு செய்கிறது.

அவற்றுள் சில பதிவுகள்:

வெளியீடுகள்

போராட்டங்கள்

பிரசுரங்கள்

மினனஞ்சல்: rsyf@rediffmail.com
வலைப்பதிவு தளம் : http://rsyf.blogspot.com