
சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 8- 10- 2008 அன்று காலை பத்து மணியளவில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்பினர், ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
- ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
- ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்போம்!
- தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்டெடுப்போம்!
- பதவி சுகத்திற்காக பச்சோந்தி வேலை செய்யும் திமுக அரசை அம்பலப்படுத்துவோம்!
- இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக டாட்டா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இலங்கையில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து உதவும் கொலைகார இந்திய அரசை எதிர்த்து போராடுவோம்!
Related Links:
