Showing posts with label புஜதொமு. Show all posts
Showing posts with label புஜதொமு. Show all posts

Tuesday, July 7, 2009

பெட்ரோல்-டீசல்-கேஸ் விலையை உயர்த்தி மக்களின் வாழ்வை சூறையாடாதே

ஜுலை 2, 2009 முதல் பெட்ரோல் விலையை 4 ரூபாயும், டீசல் விலையை 2 ரூபாயும் விலையேற்றியுள்ளது மத்திய அரசு. இது குறித்து ஓட்டு கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கும் நிலையில், விலையேற்றத்தை எதிர்த்து புஜதொமு-வின் சுவரொட்டி.
Petrol & Diesel Prise Rise - NDLF Poster
  • உள்நாட்டு எண்ணெய் வளம் அம்பானி கையில்!
  • விலை உயர்வின் கொள்ளை லாபம் அம்பானி கையில்!
  • விலை உயர்வும் வரிச்சுமையும் மக்களின் தலையில்!

மத்திய மாநில அரசுகளே!
  • பெட்ரோல்-டீசல்-கேஸ் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்!
  • விலை உயர்வை திரும்பப் பெறு!

உழைக்கும் மக்களே!
  • விலை உயர்வுக்கு வித்திடும் உலகமயம்-ஊக வணிகத்தை எதிர்த்துப் போராடுவோம்!
  • மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

Tuesday, January 27, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு அனுபவம் - சில குறிப்புகள்

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு பற்றி ஒரு நேர்மையான விமர்சனமாக, "முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை" என்ற தலைப்பில் தனது மாநாட்டு அனுபவத்தை சூன்யம் வலைப்பதிவிட்டுள்ளார். அவற்றுள் இருந்து சில குறிப்புகளை மறு பதிவிடுகிறேன்.


...........
முதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு‘க்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் எந்தவிதமான பிழையும் இல்லை. நிறைந்த அமாவாசை. அதுவும் தை அமாவாசை. எனவே மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கு எள்ளுத்தண்ணி ஊற்றி தர்ப்பணம் செய்துவிட்டு மாநாட்டை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது என நக்கலுடன் சென்றேன் பாருங்கள்… அதற்கு சரியான செருப்படியை தோழர்கள் கொடுத்தார்கள்.

...........
தோழர் சந்திப்பு வந்திருந்தால் வயிறு எரிந்திருப்பார். இதுவரை தனது பதிவுகளில் மகஇக குறித்து, தான், எழுதிய விஷயங்கள் எந்தளவுக்கு புரட்டல் நிரம்பியது என்பதை நினைத்து குற்ற உணர்வால் குறுகியிருப்பார்.

...........
இந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்காததால் பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. மாநாட்டு திடலே நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மூலை, முடுக்கிலிருந்தெல்லாம் தோழர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.

...........
பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன், மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஒருவரது முகத்தில் கூட சோர்வோ, கடனே என மாநாட்டுக்கு வந்திருக்கும் பாவனைகளோ தெரியவில்லை. அனைவரது கண்களிலும் உறுதி. முக்கியமாக தோழர்களின் மனைவிமார்களை சொல்ல வேண்டும். கணவருக்காக வந்தது போல் தெரியவில்லை. விருப்பத்துடன், மாநாட்டின் தன்மையை உணர்ந்து, நம் குடும்ப விழா என்ற எண்ணத்துடன் கலந்து கொண்டவர்களை போலவே தெரிந்தார்கள். ஒருவரது கால் விரல்களிலும் மெட்டியில்லை. கழுத்தில் நகையில்லை. வீட்டிலிருந்தே தோழர்கள் தங்கள் அமைப்பை கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், உணரவும் இந்த மாநாடு உதவியது.

...........
செங்கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள் அமைப்பு சார்ந்த தோழர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும்தான். அதுவும் 4, 5, வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கை விரல்களை மடக்கி வணக்கம் செலுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

...........
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80% பேர் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள். இதே வயதுள்ள பெண் தோழர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், யாருமே யாரிடத்திலுமே கேலி, கிண்டல், ஈவ் டீசிங் மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.

...........
குடித்துவிட்டு யாரும் மாநாட்டு பந்தலுக்கு வரவில்லை. (முக்கியமாக பியர்). சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. மாநாட்டு திடலில் யாரும் குப்பை போடவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட தொட்டியிலேயே பயன்படுத்திய பொருட்களை போட்டார்கள்.

...........
இவர்கள் அமைப்பை சாராத, இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் மாற்று இயக்க தோழர்களும் தங்கள் வெளியீடுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்த தோழர்களும் அவர்களை தடுக்கவும் இல்லை. வெளியேற்றவும் இல்லை. சொல்லப் போனால் உணவு, தேனீர், குடிநீர் போன்றவற்றை அவர்களுடன் இணைந்தே சாப்பிட்டார்கள்.‘

...........
புதிய ஜனநாயகம்‘ இதழில் இதுவரை ஈழம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து விற்றார்கள். அதேபோல்தான் ‘தேசியம்‘ தொடர்பாக வந்த கட்டுரைகளும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதே திடலில்தான் ‘தனித்தமிழ்‘ ஆதரவு தோழர்களும் தங்கள் நூல்களை விற்றார்கள் என்பதுதான். ஜனநாயகம்!

...........
மகஇக பொது செயலாளர் தோழர் மருதையன் சிற்றப்புரை ஆற்றினார். வழக்கம் போல் அவரது உரை அழுத்தமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு யார் பேசினாலும் துண்டு சீட்டைக் கொடுத்து பேச்சை முடிக்க சொன்னார்கள். இந்த விதியிலிருந்து தோழர் மருதையனும் தப்பவில்லை.

...........
சங்கம் அமைக்க தாங்கள் பட்ட சிரமங்களை, அனுபவங்களை பல தோழர்கள் மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒரிஸாவிலிருந்து பிழைப்பைத் தேடி தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துயரங்களையும், புஜதொமு அமைத்த பின் தாங்கள் எப்படி தன்மானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.

...........
மாநாட்டு பந்தலுக்கு வெளியே காவல்துறையினர், ‘எதையோ‘ எதிர்பார்த்து பாதுகாப்புக்காக நின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமே‘ என்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது

...........
பொதுவாக மகஇக அமைப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. கேள்வி கேட்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது. க்ளீன் ஸ்லேட்டாக இருப்பவர்கள்தான், இவர்களுக்கு தேவை… என மாற்று அமைப்பினர் அவ்வப்போது இவர்கள் மீது விமர்சனம் வைப்பார்கள். அது எந்தளவுக்கு புரட்டு என்பது இந்த மாநாட்டில் தெரிந்தது.

...........
பின்குறிப்பு: பதிவை எழுதி முடித்ததும் வழக்கம்போல் படித்துப் பார்த்தேன். மகஇக வுக்கு ஜால்ரா தட்டுவது போல் தெரிந்தது. பதிவை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றினால். நல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.


முழு கட்டுரைக்கு இதை கிளிக் செய்யவும்.
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை


சூன்யம் தோழரே,
மாநாட்டு அனுபவத்தை நேர்மையாக பதிந்து உள்ளீர்கள். புரட்சிகர வாழ்த்துக்கள்.

Tuesday, January 20, 2009

முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் முபஎமா

Conference against capitalist terror - tamil poster (RSYF)

இன்றைக்கு உலகத்தை ஆட்டி படைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு வரும் ஞாயிறு 25-ஜனவரி-2009 அன்று அம்பத்தூரில் (முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு) நடக்க இருக்கிறது.

காலை (எஸ்.வி.நகர்)ஓரகடத்தில் கருத்தரங்கமும், மாலை அம்பத்தூர் OTயில் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன. முழு விவரங்கள் பின்வருமாறு.

Conference against capitalist terror - Vinavu Tamil Blog

நிகழ்ச்சி நிரல்
நாள் : ஜனவரி 25, 2009, ஞாயிறு

கருத்தரங்கம்:
இடம் :
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்

காலை 10 - 1 மணி
தலைமை : தோழர் அ. முகுந்தன்,
சிறப்புரை :
கவிஞர் துரை. சண்முகம்,
வழக்குரைஞர் சி. பாலன்,

2 - 5 மணி
சிறப்புரை :
சு.ப.தங்கராசு
பா.விஜயகுமார்
போராட்ட தலைமையேற்ற பல்வேறு தோழர்களின் அனுபவங்கள்
நன்றியுரை:
இல.பழனி

பொதுக்கூட்டம் மற்றும் மகஇக கலைநிகழ்ச்சி :
மாலை 6 மணி
அம்பத்தூர் OT மார்கெட்

  • ஒப்பந்த முறை - அவுட்சோர்சிங் போன்ற நவீன கொத்தடிமை வேலை முறைகளை முறியடிப்போம்!
  • போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதை முறியடிப்போம்!
  • தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்!

Conference against capitalist terror - Vinavu English Blog

Conference Against Capitalist Terror - Email this PDF Conference against Capitalist Terror - English Handbill PDF Email this! (Right Click & Save target as)

Related Links:

Monday, December 29, 2008

இந்தியா திவாலை நோக்கி - இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

அமெரிக்காவின் கடன் சுமையை மூன்றாம் உலக நாடுகளுக்கு (ஆசியா, ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா) ஏற்றுமதி செய்கிறது. அதை கைக்கூலி, அடிமைகளான மன்மோகன் - சோனியா கும்பல் இந்தியாவில் அமுல்படுத்துகிறது. அதிகப்படியான, வரைமுறையற்ற தாரளாமயம், தனியார்மயம் ஆகியவற்றால் பன்னாட்டு நிறுவனங்கள் திவால் ஆகின. ஏற்கனவே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகளால் இந்தியா சூறையாடப்பட்டு வருகிறது. இப்போது இந்திய மக்களின் சேமிப்புகளான PF, இன்சுரன்சு அகியவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளி கொடுக்கப்படுகிறது.

இன்சுரன்சு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு அம்பலபடுத்தும் புஜதொமு-வின் சுவரொட்டி பின்வருமாறு.

Increasing FDI in Insurance by Manmohan-Sonia - Poster by NDLF

இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!
மன்மோகன் - சோனியா கும்பலின் அந்நிய கைக்கூலித்தனம்!

  • உலகம் முழுவதும் பன்னாட்டு இன்சூரன்சு நிறுவனங்கள் திவாலாகுது அவர்களுக்கு உயிர் கொடுக்க மன்மோகன் அரசு இந்தியாவில் கதவை திறக்குது!
  • எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க துடிக்குது!
  • இந்திய மக்களின் சேமிப்பை பன்னாட்டு முதலாளிகள் சூறையாட அனுமதிக்குது!
  • தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

Thursday, October 9, 2008

ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 8- 10- 2008 அன்று காலை பத்து மணியளவில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்பினர், ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:

  • ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
  • ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்போம்!
  • தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்டெடுப்போம்!
  • பதவி சுகத்திற்காக பச்சோந்தி வேலை செய்யும் திமுக அரசை அம்பலப்படுத்துவோம்!
  • இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக டாட்டா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இலங்கையில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து உதவும் கொலைகார இந்திய அரசை எதிர்த்து போராடுவோம்!


Related Links:




Monday, September 8, 2008

கும்மிடிபூண்டி SRF ஆலை புகுந்து தாக்கிய போலீசு - புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம்



கும்மிடிபூண்டி SRF ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது, போலீசு அவர்களை தாக்கியது. இதை எதிர்த்து 08-09- 2008 அன்று மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Links:

Monday, September 1, 2008

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராக சுஜானா தொழிலாளிகளின் சங்கம் உதயம்

உழைக்கும் வர்ககத்தின் போர்குணமிக்க தொழிற்சங்கமான புஜதொமு, ஏற்கனவே ஜேபியாரின் கொட்டத்தை அடக்கி, வாகன ஓட்டுனர்களை சங்கமாக திரட்டி போராடி வருகிறது. இது மட்டுமல்லாமல், தரைக்கடை வியாபாரிகள் சங்கம், கட்டிட தொழிளார்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் என தொழிலாளர்களை அணி திரட்டி போராடி வருகிறது.

திருவள்ளூரில் உள்ள சுஜானா இரும்பு உருக்கு தொழிற்சாலையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருவதை எதிர்த்தும் பலமுறை நிர்வாகத்திடம் பேசியும், மனு கொடுத்தும் பயன் இல்லை. தொழிலாளர்களை சட்டப்படி அங்கீகரிக்காமல் தினக்கூலிகளாய், குறைந்த கூலிக்கு 12 மணி நேரம் வேலை வாங்கும் சுஜானா நிர்வாகத்தை எதிர்த்து சுஜானா தொழிற்சங்கம் (புஜதொமு) 23-08-2008 அன்று உதயம் ஆனது.

சுஜானா தொழிற்சங்கத்தின் கொடியேற்று விழாவின் பிரசுரம் பின் வருமாறு.


Related Links :