Monday, December 29, 2008

இந்தியா திவாலை நோக்கி - இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

அமெரிக்காவின் கடன் சுமையை மூன்றாம் உலக நாடுகளுக்கு (ஆசியா, ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா) ஏற்றுமதி செய்கிறது. அதை கைக்கூலி, அடிமைகளான மன்மோகன் - சோனியா கும்பல் இந்தியாவில் அமுல்படுத்துகிறது. அதிகப்படியான, வரைமுறையற்ற தாரளாமயம், தனியார்மயம் ஆகியவற்றால் பன்னாட்டு நிறுவனங்கள் திவால் ஆகின. ஏற்கனவே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகளால் இந்தியா சூறையாடப்பட்டு வருகிறது. இப்போது இந்திய மக்களின் சேமிப்புகளான PF, இன்சுரன்சு அகியவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளி கொடுக்கப்படுகிறது.

இன்சுரன்சு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு அம்பலபடுத்தும் புஜதொமு-வின் சுவரொட்டி பின்வருமாறு.

Increasing FDI in Insurance by Manmohan-Sonia - Poster by NDLF

இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!
மன்மோகன் - சோனியா கும்பலின் அந்நிய கைக்கூலித்தனம்!

  • உலகம் முழுவதும் பன்னாட்டு இன்சூரன்சு நிறுவனங்கள் திவாலாகுது அவர்களுக்கு உயிர் கொடுக்க மன்மோகன் அரசு இந்தியாவில் கதவை திறக்குது!
  • எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க துடிக்குது!
  • இந்திய மக்களின் சேமிப்பை பன்னாட்டு முதலாளிகள் சூறையாட அனுமதிக்குது!
  • தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

Tuesday, December 23, 2008

செருப்பு என்றால் புஷ், செருப்படி என்றாலும் புஷ்

செருப்பு என்றால் புஷ். செருப்படி என்றாலும் புஷ். Google-இல் செருப்படி என்று தேடினால் "புஷ்ஷுக்கு செருப்படி" என்ற பக்கங்கள் தான் வருகிறது.


shoe means bush - Google search results

வாழ்க முண்டாசர் அல்ஜெய்தி!

ஒழிக செருப்- புஷ்!

புஷ்சை செருப்பால் அடித்த மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்

புஷ்-க்கு செருப்படி கொடுத்த மாவீரன் முண்டாசர் அல்ஜெய்திக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. புஷ்சின் கொடூரமான போர்வெறி, உலக மேலாதிக்க வெறி ஆகியவற்றால் அல்லல் பட்ட கோடிக்கணக்கான மக்கள் மற்றும் விடுதலையையும், சமத்துவத்தையும் விரும்பும் மக்கள், அமைப்புகள் அனைவரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

எப்போதுமே ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு இரகசியமாகவே போய் வரும் புஷ் கடைசியாக மாட்டி கொண்டான். நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் அரணாக நின்றாலும், நவீன கருவிகளால் சள்ளடை போட்டாலும் மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் செருப்படியில் இருந்து தப்ப முடியவில்லை.

விடுதலை உணர்விருந்தால் கையில் கிடைக்கும் எதுவும் ஆயுதமாக மாறலாம் என முண்டாசர் அல்ஜெய்தியின் உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

மேலாதிக்க போர்வெறி பிடித்த புஷ்சே,
நீ பாதாளத்தில் மறைந்து இருந்தாலும்,
வெள்ளை மாளிகையில் உறங்கினாலும்,
உனக்கு கனவில் வந்தும் செருப்படி விழும்.



முண்டாசர் அல்ஜெய்தியின் செருப்படி போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவரை விடுதலை செய்ய கோரும் மகஇக-வின் சுவரொட்டி கீழே.

அமெரிக்க அதிபர் புஷ்க்கு ஈராக்கில் செருப்படி! காலனி ஆதிக்கத்திற்கு காலணியால் பதிலடி!

உழைக்கும் மக்களே!,
  • அமெரிக்க ஆதிக்கத்தின் மீது விழுந்த செருப்படியை கொண்டாடுவோம்!
  • புஷ்சை செருப்பால் அடித்த மாவீரன் முண்டாசர் அல்ஜெய்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.!



Related Links:

Tuesday, December 16, 2008

Saturday, December 6, 2008

சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்

RSYF demonstration at Chennai Memorial Hall - Open Law Colleges

சென்னை மெமோரியல் ஹால், GH எதிரில் 3- 12- 2008 அன்று மாலை 4.30 மணியளவில் புமாஇமு அமைப்பினர், மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
  • சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலையொட்டி மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற!
  • தலித் மாணவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • இந்த மோதலை காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயலும் அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!

அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையையொட்டி புமாஇமு-வின் ஆர்ப்பாட்டங்கள், பிரசுரங்கள், தமிழரங்கம் (TamilCircle) மற்றும் வினவு கட்டுரைகள் பின் வருமாறு.

Related Links:

Sunday, November 9, 2008

பள்ளியை சதிகூடமாக்கிய ஆட்கொல்லி நோய் ஆர்.எஸ்.எஸ்-இன் கொலை வெறி தாக்குதல்



காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில் ஆர்எஸ்எஸ் சதிகூட்டம் நவம்பர் 9, 2008 அன்று நடந்தது. இதனை எதிர்த்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்த விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ, தமுமுக மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தடியால் அடித்து காயப்படுத்தினர் ஆர்எஸ்எஸ் ரவிடிகள்.



ஆர்.எஸ்.எஸ்-இன் இந்தக் கலவரத்தைப் பார்த்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் நகரில் பரவி, பெற்றோர் பதற்றத்துடன் வந்து பிள்ளைகளை அழைத்து சென்றனர்.




நாட்டை சாதி, மத ரீதியாக துண்டாடும் கொலை வெறி நச்சு கருத்துக்களை பள்ளியில் இருத்து "சாகா" என்ற பெயரில் பரப்புகிறது ஆர்.எஸ்.எஸ். இதற்கு கல்வியை வணிகமாக்கும் மெட்ரிக் பள்ளிகளும் உடந்தையாக இருக்கின்றன. பார்ப்பனியத்தை எதிர்த்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் பெயரில் இயங்கும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்-இன் வெறியாட்டம்.


கொலைவெறி, கலவரம், குண்டு வெடிப்பு இவையே ஆர்.எஸ்.எஸ்-இன் ஆயுதம். தமிழக மக்கள் இந்த ஆட்கொல்லி நோய் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் காவி குண்டர் அமைப்புகளை தடை செய்ய போராடவேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாடும் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக மாறிவிடும்.

Related Links:

Wednesday, October 22, 2008

மானமில்லா மக்களே தீபாவளி கொண்டாடுகிறார்கள்

இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது பார்ப்பனர்களின் பண்டிகை, தமிழர், திராவிடர்களின் திருவிழா அல்ல என பல தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் சொன்னவற்றின் சில குறிப்புகள் பின்வருமாறு:


மறைமலை அடிகள் சொன்னது:
1. 'ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" - "தமிழர் மதம்" என்ற நூலில்
2. "ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.' (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)


இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் விவேகானந்தர் சொன்னது:
1.தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்" (இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் -587-589)


பி.டி.சி சீனிவாசய்யங்கார் சொன்னது:
இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்ய+க்கள், இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’ (பி.டி.சி சீனிவாசய்யங்கார் "இந்திய சரித்திரம்’ முதற்பாகம் - பக்கம் - 16,17,19)


முனைவர் தொ.பரமசிவன் "அறியப்படாத தமிழகம்" நூலில்:
1. தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும்.
2. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்
4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தஙரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்
5. விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது


பெரியார் சொன்னது:
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!


தீவாளியா? - பாரதிதாசன் பாடல்:

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!


நன்றி - கந்தப்பு, பெரியார், பாரதிதாசன், தொ.பரமசிவன், மறைமலை அடிகள், பி.டி.சி சீனிவாசய்யங்கார், விவேகானந்தர்


Related Links: