Sunday, July 12, 2009

சொர்க்கபுரி அமெரிக்கா-கடுங்குளிரில் 35 லட்சம் வீடற்றோர்- முதலாளித்துவ பயங்கரவாதம்

"If a free society cannot help the many who are poor,
it cannot save the few who are rich"
- John F. Kennedy

கொட்டும் பனியிலும், கடுங்குளிரிலும் வீடற்ற ஏழைகளாக துரத்தபட்டுள்ளனர் அமெரிக்க மக்கள். அட்டைப்பெட்டிக்குள்ளும், டென்ட்டு கொட்டகையிலும், கார்களிலும், தெரு ஓரங்களிலும், தெருவோர இருக்கைகளிலும், வீடற்றோர் முகாம்களிலும் இரவை கழிக்கின்றனர். அமெரிக்க பெயில்-அவுட் என்ற பெயரில் சூதாடிகளுக்கு சுமார் 4 கோடி கோடி ரூபாய்க்கு மேல் (8டிரில்லியன்$) மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாரி வழங்கியுள்ளனர். நாள்தோறும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றது. வீடற்ற மக்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.

நாசகர நிதிமூலதன சூதாடிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியால் வீடிழந்து, பொருள் இழந்து, பணம் இழந்து, தன் உறவுகளை இழந்தும் பாதிக்கபடுகின்றனர். தன்னுடைய பைபிளையும் இழந்து, அடுத்த வேளை உணவுக்காக, உயிரை காப்பதற்காக பிச்சை எடுத்து வேலை தேட முயற்சிக்கும் படம் நெஞ்சை அறுக்கிறது.

அதி-தாராளமய முதலாளித்துவ கொள்கைகளால் ஒவ்வொரு பொருளாதார வீழ்ச்சியிலும் கீழ்த்தட்டு மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அமேரிக்க நடுத்தர வர்க்கத்தினரையே வீட்டை விட்டு துரத்துகிறது முதலாளித்துவ பயங்கரவாதம். அமெரிக்காவில் பொய்த்து போன அதி-தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை பின்பற்றுமாறு உலகவங்கி, சர்வதேச நிதியம், G8 நாடுகள் என எல்லா பணமுதலை அமைப்புகளும் நிர்பந்திக்கின்றன. நம்நாட்டு ஓட்டு கட்சிகளும் அதை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றி வருகின்றனர்.

ஏற்கனவே நம்நாட்டில் வீடற்றோர் எண்ணிக்கை ஏராளம். நம்மிடம் இருப்பதோ ஓலை குடிசைகள். அதையும் பிடுங்க பார்க்கிறார்கள். விழித்து கொள்வோம். அமெரிக்க அடிமை அரசியல் ஒட்டுண்ணிகளை அம்பலபடுத்துவோம். போராடுவோம்.

அமெரிக்க வீடற்றோரின் நெஞ்சை உருக்கும் சிலப்படங்கள் கீழே.






































Related Links:



Saturday, July 11, 2009

முத்துகுமாருக்கு ஒர் ஆட்டோ நிறுத்தம் - தியாகங்கள் சாவதில்லை

Muthukumar Memorial AutoStand
பழைய மகாபலிபுர சாலையில் சென்னை மாநகர பேரூந்தில் பயணிக்கும் போது முத்துக்குமார் நினைவு ஆட்டோ நிறுத்தத்தை பார்த்தேன். இனப்படுகொலைக்கு ஆதரவான இந்திய அரசுக்கெதிராகவும், சுரணையற்ற தமிழக மக்களுக்கு உணர்வேற்றவும் தோழர் முத்துக்குமார் ஜனவரி 29, 2009 அன்று, தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார்.

Muthukumar Banner தீக்குளிப்பு சரியானது அல்ல என நாம் கூறினாலும், முத்துகுமாரின் தியாகத்தால் முத்துக்குமாருக்கு முன்னும், முத்துக்குமாருக்கு பின்னும் தமிழகத்தில் ஈழ ஆதரவு நிலையில் பெரிய மாற்றமுள்ளது. அவர் இட்ட தீயின் காரணத்தால் முத்துகுமாருக்கு பின் தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பெருவாரியான மக்களிடையே ஈழ மக்களுக்கு ஆதரவு நிலை உருவானது. அவரின் வேண்டுகோளுக்கினங்க இளைஞர்கள், மாணவர்கள் போராட தயாரானார்கள். ஆனால் இந்திய, தமிழக அரசின் அலட்சியப்போக்கு, ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதம், ஓட்டு அரசியல் கணக்குகள் என பல்வேறு துரோகங்கள் மூலம் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தினர். இருப்பினும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார் முத்துகுமார்.

அன்றும், இன்றும், என்றும் முத்துக்குமார் என்றாலே அவரின் வீரமும், தியாகமும் தான் நினைவுக்கு வரும். தியாகங்கள் சாவதில்லை.

முத்துகுமார் பதிவுகள், கட்டுரைகள்:



தமிழக அரசியல் வியாதிகள்:


போராட்டங்கள்:


குறும்படங்கள் & படங்கள்:

Thursday, July 9, 2009

உலகமயம் வீழ்கிறது - முதலாளித்துவ நிபுணரின் ஒப்புதல் வாக்குமூலம்

"உலகமயம் வீழ்கிறது, அமெரிக்கவிலும் முதலாளித்துவம் தோற்று போனது. பெரும்பாலான உலக நாடுகள் உலகமயம் தீங்கானது என்கின்றன. மேற்குலகிலும், அமெரிக்காவிலும் நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன. தாரளமயம் கைவிடப்படுகிறது." என, பில் கிளின்டனின் முன்னாள் துணை நிதி செயலாளர் மற்றும் எவர்கோர் பார்ட்னர்ஸ் என்னும் முதலீட்டு நிறுவனத் தலைவர் ரோஜர் ஆல்ட்மன் கூறுகிறார். அது குறித்து ஜூலை 6,2009 பிஸினஸ் வீக் இதழ் வெளியிட்ட சிறு குறிப்பு கீழே.

இப்படி முதலாளித்துவ வல்லரசு நாடுகளின் அரசுகள் தன்னுடைய நாட்டை பாதுகாக்க உலகமயத்தை ஒதுக்கிவிடுகிறது. ஆனால் இந்த பொய்த்து போன உலகமயம், தாரளமயம் கொள்கைகளை மற்ற நாடுகளின் மீது, உலக வங்கி, சர்வதேச நிதியம் மூலம் வன்முறையாக திணிக்கிறது. ஆண்டைக்கு ஒரு நீதி. அடிமைக்கு ஒரு நீதி. இது தான் முதலாளித்துவ "ஜனநாயகவாதிகளின்" உலகமயக் கொள்கை.

Globalisation Beating a Hasty Retreat - Businessweek
Courtesy : Businessweek

Related Links:

Tuesday, July 7, 2009

பெட்ரோல்-டீசல்-கேஸ் விலையை உயர்த்தி மக்களின் வாழ்வை சூறையாடாதே

ஜுலை 2, 2009 முதல் பெட்ரோல் விலையை 4 ரூபாயும், டீசல் விலையை 2 ரூபாயும் விலையேற்றியுள்ளது மத்திய அரசு. இது குறித்து ஓட்டு கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கும் நிலையில், விலையேற்றத்தை எதிர்த்து புஜதொமு-வின் சுவரொட்டி.
Petrol & Diesel Prise Rise - NDLF Poster
  • உள்நாட்டு எண்ணெய் வளம் அம்பானி கையில்!
  • விலை உயர்வின் கொள்ளை லாபம் அம்பானி கையில்!
  • விலை உயர்வும் வரிச்சுமையும் மக்களின் தலையில்!

மத்திய மாநில அரசுகளே!
  • பெட்ரோல்-டீசல்-கேஸ் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்!
  • விலை உயர்வை திரும்பப் பெறு!

உழைக்கும் மக்களே!
  • விலை உயர்வுக்கு வித்திடும் உலகமயம்-ஊக வணிகத்தை எதிர்த்துப் போராடுவோம்!
  • மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

Thursday, April 30, 2009

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!

"கல்வி கொடுப்பது அரசின் கடமை, அதை போராடி பெறுவது நமது உரிமை" என்ற முழக்கத்துடன் சென்ற ஆண்டு புமாஇமு, மாணவர் - பெற்றோருடன் இணைந்து போராடியது. அதன் விளைவாக, சென்ற ஆண்டு ஜூன் 2008-இல், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நன்கொடை செய்த பணத்தை திருப்பி தர, கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவு இட்டார்.

புமாஇமு பள்ளி கட்டண கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடிவருகிறது. "அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்" என்ற புமாஇமு-வின் சுவரொட்டி கீழே.

RSYF Poster Against Donation in Schools

தமிழக அரசே!
  • மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடவடிக்கை என்று நாடகமாடாதே!
  • கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்!

பெற்றோர்களே!
  • தனியார் பள்ளிகளின் மோகத்தை விட்டொழிப்போம்!
  • அரசுக் கல்வி தரமாக கிடைக்கப் போராடுவோம்

Related Links:

Tuesday, April 7, 2009

தமிழன் தர வேண்டிய செருப்படி - தேர்தல் புறக்கணிப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை செருப்பால் அடித்த முன்டாசர் அல்-ஜெய்தியின் வழியை பின்பற்றி, சீக்கிய படுகொலையை கண்டித்து அதற்கு காரணமான காங்கிரசு கட்சி மற்றும் இந்திய அரசை கண்டித்தும் ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் ப.சிதம்பரம் மீது செருப்பு வீசினார். செருப்படியால் உலக புகழ் பெற்ற செருப்புஷ் போலவே செருப்படி பெற்ற கோமகன் செருப்படி சிதம்பரமும் இந்திய அளவில் நாறி போயுள்ளார். செருப்படி படங்கள் பின்வருமாறு.










சீக்கிய இனப் படுகொலையை கண்டித்து செருப்படியால் தன் உணர்வை வெளிப்படுத்தினார் ஜர்னைல் சிங். ஈழப் படுகொலைகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசை எதிர்த்து, தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என கூறும் மகஇக-வின் சுவரொட்டி கீழே.

சபாஷ்! சரியான செருப்படி!
  • 1984 சீக்கியப் படுகொலையை கண்டித்து ப.சிதம்பரம் மீது பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங் செருப்பு வீச்சு!
  • ஈழப் படுகொலையின் சூத்திரதாரி இந்திய அரசுக்கும் கபட வேடதாரி ஓட்டுக் கட்சிகளுக்கும்,
  • தமிழகமே, நீ தர வேண்டிய செருப்படி - தேர்தல் புறக்கணிப்பு!

Poster - Shoe On Chithambaram by Jarnail_Singh

Related Links:

Tuesday, February 10, 2009

ஈழம் - கட்டுரைகள், கருத்து படங்கள் & செய்திகள்


ஈழம் பற்றி வினவு தளத்தில் வெளியான கட்டுரைகள், கருத்து படங்கள் & போராட்ட செய்திகளின் தொகுப்பு பின்வருமாறு.

மேலும் விவரங்களுக்கு வினவு தளத்தை பார்க்கவும்.


  1. ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
  2. ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!
  3. இதயத்தை அறுக்கும் ஈழத்து படங்கள் & வீடியோ
  4. ஈழமும் ராஜீவ் காந்தியின் ஆவியும் !
  5. காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !
  6. ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !
  7. ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !
  8. ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !
  9. ஞாநியின் ‘தவிப்பு’ !
  10. சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!
  11. கருணாநிதியின் இறுதி நாடகம்?
  12. சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!
  13. ராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு - கருத்துப்படம்
  14. ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் !
  15. ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!
  16. ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!
  17. முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!
  18. முத்துக்குமாரின் இறுதிப் பயணம் - படங்கள் !
  19. ஈழம்: சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ !
  20. முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !- நிறைவுப் பகுதி !
  21. மன்மோகன் - ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு ! ம.க.இ.க தோழர்கள் கைது !! படங்கள் !!!
  22. ஈழம்: இந்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் ! படங்கள் மற்றும் வீடியோ !!
  23. ஈழம்: கிரிக்கெட் நீரோக்கள் ! கருத்துப்படம் !!
  24. போரை நிறுத்து - எமது தோழர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணம்!